இவ்வசனத்தின் அர்த்தம் என்ன? மனிதர்கள் மேல்இரக்கம் காட்ட வேண்டும் என்பதற்காக தேவன் அவர்களை கீழ்ப்படியாமைக்குள் அகப்பட செய்கிறாரா? மனிதர்களின் கீழ்ப்படியாமக்கு தேவன்தான் காரணமா?
அதன் பொருள் அப்படி அல்ல பிரதர். மனுஷனின் கீழ்படியாமைக்கு தேவன் எவ்விதத்திலும் காரணர் அல்ல.
பல்வேறு இடங்களில் சிதறி திரியும் கோழி குஞ்சுகளை தனித்தனியே வேறு ஒரு இடத்துக்கு அழைத்து செல்ல முயற்சிப்பதைவிட அவைகள் எல்லாவற்றையும் ஒரு கூண்டுக்குள் பிடித்து போட்டு பின்னர் வேறு இடத்துக்கு கொண்டு விடுவிப்பது சுலபம் அல்லவா?
அந்த சொற்ப கால கூண்டுதான் "கீழ்படியாமை" என்பது. அதை முதலில் உருவாக்கியது மனுஷன்தான்.
(எனக்கு போதிய நேரம் இல்லாமையால் இன்னுமதிகம் விளக்க முடியவில்லை. நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்)
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இவ்வசனத்தின் அர்த்தம் என்ன? மனிதர்கள் மேல்இரக்கம் காட்ட வேண்டும் என்பதற்காக தேவன் அவர்களை கீழ்ப்படியாமைக்குள் அகப்பட செய்கிறாரா? மனிதர்களின் கீழ்ப்படியாமக்கு தேவன்தான் காரணமா?
-- Edited by t dinesh on Tuesday 14th of February 2017 02:55:34 PM
நான் மேலே கூறியுள்ள கோழிக்குஞ்சு உவமையை சற்று ஆராய்ந்து பாருங்கள்.
ஒரு ஆபத்தான இடத்தில் 10-20 கோழி குஞ்சுகள் இருக்கின்றன அதை காப்பாற்ற நினைக்கும் நாம் எப்படி செயல்படுவது நல்லது?
ஒவ்வொன்றாக விரட்டி பிடித்து தூக்கி கொண்டு போய் ஒரு கிலோமீடடார் தூரத்தில் விட்டுவிட்டு வருவதைவிட ஒரு பெரிய கூண்டு ஒன்றை வாங்கி அங்கு வைத்துவிடடால் இரவில் தங்குவதற்கு எல்லா குஞ்சுகளும் அதனுள் வந்துவிடும். அப்பொழுது அதை கூண்டோடு தூக்கி கொண்டுபோய் இடம் மாற்றிவிடுவது தானே சிறந்த வழி.
கூண்டுக்குள் அடைபட்டு கிடப்பது சில காலம் குஞ்சுகளுக்கு கஸ்டமாக இருக்கலாம் ஆனாலும் அதற்க்கு கிடைக்கப்போகும் விடுதலை மிகப்பெரியது அல்லவா?
அதேபோல் "கீழ்படியாமை" என்பதும் தேவன் வைத்துள்ள ஒரு கூடு தான். எல்லோரையும் மீட்க்கும் பொருட்டு அவர் வைத்துள்ள அந்த கீழ்படியாமை என்ற கூட்டுக்குள் தானாகவே எல்லோரையும் வர வைத்து, இயேசுவின் கீழ்ப்படிதல் மூலம் அந்த கூடடையே நொறுக்கி எல்லோரையும் விடுதலை பண்ணுவதுதான் தேவனின் திடடம்.
கூண்டுக்குள் இருக்கும் காலம் நமக்கு கஸ்டமாக தோன்றினாலும் கிடைக்கப்போகும் விடுதலைக்கு முன்னால் இந்த பாடுகள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போகும்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)