பெண்கள் தேவனோடு பேசும் போது முக்காடிட்டு கொள்ள வேண்டும் என்று வேதம் சொல்கிறது இது பற்றி விளக்கவும்.
1 கொரிந்தியர் 11
5. ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
சிஸ்ட்டர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு வசனத்தையே சுட்டிக்காட்டி இது தற்காலத்திற்கு பொருந்துமா என்று கேடடால் என்ன பதில் சொல்வது?
இது பழைய ஏற்பட்டு வசனம் அல்ல! இந்த வசனம் சொல்லபடடதே இயேசுவின் உயிர்த்தெழுதலும் பின் வந்த கடைசி காலத்தில்தான் இன்னும் அதே கடைசி காலத்தில்தான் நாம் இருக்கிறோம்
இந்நிலையில் இக்காலத்துக்கு இது பொருந்துமா என்றால் இக்காலம் என்பது எந்த காலம் என்று நீங்கள் கருதுகிறீர்கள் சற்று விளக்கவும்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஆனால் அநேக ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் இதை செய்வதில்லை இது பாவமா?
அப்படியென்றால் இந்த முக்காடு போடுகிற செயலை தவிர மற்ற எல்லாவற்றையும் எல்லா சபையிலும் கைக்கொள்ளுகிறார்கள் என்று நினைக்கிறீர்களோ?
அந்நிய பாஷை எல்லோரும் மொத்தமாக பேசி கூச்சல் போடுகிறார்கள். பவுல் அதை அனுமதிக்கவில்லை.
சபையில் பெண்கள் உபதேசம் செய்ய பவுல் அனுமதிக்கவில்லை.
பவுல் சொல்வதுபோல் சொந்த புருஷனுக்கு எல்லாவிதத்திலும் கீழ்ப்படியும் மனைவி எங்கு இருக்கிறார் என்பதை தேடி தேடிதான் அலைய வேண்டும். பலரிடம் கேட்ட்தில் எனக்கு பதில் கிடைக்கவில்லை.
இப்படி அநேக காரியங்களை யாரும் கைகொள்ளுவது இல்லை.
பவுலின் வார்த்தைக்கு இந்த மதிப்பு என்றால் ஆண்டவராகிய
இயேசுவின் வார்த்தைகளை அநேகர் சடடைசெய்வதே இல்லை.
இந்நிலையில் முக்காடு போடுவது எல்லாம் மிக சாதாரணம்.
எனது ஆலோசனை :
உங்கள் மனதில் ஒரு வார்த்தை தேவன் சொல்லியிருக்கிறார் என்று உறுதியாக தெரிந்தால் அதை கண்டிப்பாக கைகொள்ளுவது அவசியம் இல்லையேல் அது பாவமாகும்
அப்படி இல்லை என்றால் அது வேறு யாருக்கோ ஆலோசனையாக சொல்லப்பட்டுள்ளது எனக்கில்லை என்று விட்டுவிடுங்கள். ஆகினும் என்றாவது ஒருநாள் ஆவியானவர் அதை செய்யும்படி உணர்த்தினால் அதை செய்ய தாமதிக்கவேண்டாம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)