பாவம் செய்யாமல் வாழ்வது சாத்தியமா? இந்த உலகத்தில் பாவம் செய்வதட்கான வாய்ப்புக்களே அதிகம் ஆனாலும் மரண பரியந்தம் நாம் பரிசுத்தமாய் வாழ விரும்பும் போது அது சாத்தியமா?
வசன ஆதாரம் இருந்தால் பயனாயிருக்கும் தெரிந்தவர்கள் பதில் தரவும்.
பாவம் செய்யாமல் வாழ்வது சாத்தியமா? இந்த உலகத்தில் பாவம் செய்வதட்கான வாய்ப்புக்களே அதிகம் ஆனாலும் மரண பரியந்தம் நாம் பரிசுத்தமாய் வாழ விரும்பும் போது அது சாத்தியமா?
வசன ஆதாரம் இருந்தால் பயனாயிருக்கும் தெரிந்தவர்கள் பதில் தரவும்.
அன்பான சகோதரிக்கு கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்கள் சில வருடங்களுக்கு முன்னர் அநேகர் பங்கேற்று activeஆக இருந்த தளம் facebook/whatsapp காரணமாக அதிகம் பதிவில்லாமல் இருக்கிறது.
சரி உங்கள் கேள்விக்கு வருவோம்.
நாம் என்னதான் வாஞ்சையோடு முயற்சி செய்தாலும்சுய முயற்ச்சியால் பாவம் செய்யாமல் வாழவே முடியாது காரணம் எது பாவம் என்பதே நம்மில் யாருக்கும் முழுமையாக தெரியாது.
ஆண்டவராகிய இயேசுவே தேவன் ஒருவர் தவிர நல்லவர் ஒருவனும் இல்லையே என்று சொல்லிவிடடார்.
எனவே அந்த தேவன் நமக்குள் வந்து முழுமையாக நம்மை ஆட்க்கொண்டு நடத்த நாம் அதற்க்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடந்தால் மட்டுமே பாவம் செய்யாமல்
வாழ முடியும்.
பரிசுத்த ஆவியானவரை பொறுத்தவரை அவர் பாவத்தை கண்டித்து உணர்த்துவார் ஆனால் நாம் துணிந்து அதை செய்யும்போது அவர் மெளனமாகி விடுவார் ஆனால் இயேசுவோடு இருந்து வழி நடத்திய பிதாவாகிய தேவனின் ஆவி நமக்குள் வந்தால் மட்டுமே அது சாத்தியம்
மற்றபடி பாவத்தை வெறுத்து அதை செய்யாமல் தவிர்க்க முயற்சிக்க வேண்டியதும் தவறி செய்து விடடால் மன்னிப்பு கேட்டு அதை செய்யமல் விட்டுவிட்டு தொடந்து நடந்துகொண்டு இருப்பது மட்டும்தான் நம்மால் முடியும்.
வேதத்தில் எழுதப்படாத பாவங்கள் means தேவனுக்கு பிடிக்காத காரியங்கள் அநேகம் இருக்கிறது அதை எல்லாம் தேவனால் மட்டுமே நமக்கு வெளிப்படுத்த முடியும்.
மேலும் நாம் எந்த ஒரு நிலையிலும் பாவமில்லாமல் இருக்கிறோம் என்று சொல்ல முடியாது.
இயேசுவிடம் வந்த அந்த வாலிபன் தான் சிறு வயது முதல் கற்பனை கடடளைகளை கைக்கொள்ளுவதாக சொல்லுகிறான் ஆனால் அவன் எதிர்பாக்காத ஒரு காரியத்தை அதாவது உனக்கு உண்டானதை விற்று தரித்திரருக்கு கொடு என்று ஆண்டவர் சொல்கிறார்.
அதே போல் நாமும் ஆண்டவர் சமூகத்தில் போய் எனக்கு தெரிந்த எல்லாவற்றையும் நான் கடைபிடிக்கிறேன் என்று சொன்னால் அவர் புதியதாக நம் எதிர்பாக்காத ஒன்றை கைக்கொள்ள சொல்லுவார் என் வாழ்வில் அது நடந்துகொண்டே இருக்கிறது.
எனவே முயற்சிக்க வேண்டியதும் அவர் சொல்வதை செய்து விட்டு, அடுத்து என்ன என்று கேட்க்க வேண்டியதும் நமது கடமை. ஆனாலும் நாம் முழுமையாக பாவம் செய்யாமல் வாழ்வது என்பது தேவ ஆவி நம்மை நிரப்பும் நிலையிலேயே இருக்கிறதே அன்றி நமது சுய பலத்தில் அது சாத்தியம் இல்லை.
-- Edited by SUNDAR on Wednesday 26th of July 2017 09:54:43 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
/////////////////////////பரிசுத்த ஆவியானவரை பொறுத்தவரை அவர் பாவத்தை கண்டித்து உணர்த்துவார் ஆனால் நாம் துணிந்து அதை செய்யும்போது அவர் மெளனமாகி விடுவார் ஆனால் இயேசுவோடு இருந்து வழி நடத்திய பிதாவாகிய தேவனின் ஆவி நமக்குள் வந்தால் மட்டுமே அது சாத்தியம் ///////////////////////
அண்ணா தேவனின் ஆவி என்று தாங்கள் குறிப்பிடுவது எதை?
தயவு செய்து தெளிவாக விளக்கவும். அதாவது தேவனின் ஆவி என்று கூறுவது என்ன?
தேவத்துவத்தின் மூன்று தனிப்படட ஆவிகள் பற்றி இவ்வசனம் தெளிவாக சொல்கிறது.
அதில் "தேவனின் ஆவி" முதல் வசனத்தில் வருகிறது.
இது குறித்து தேவனே நமக்கு தெரிவித்து,அனுபவ பூர்வமாக அறிந்தால் மாத்திரமே தேவத்துவத்தின் ஆவிகளை பகுத்து அறிய முடியும் சிஸ்ட்டர்.
தேவனிடம் கேளுங்கள் நிச்சயம் வெளிப்படுத்துவார்.
Roman 8:9
9.தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.
10. மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.
11. அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
-- Edited by SUNDAR on Thursday 3rd of August 2017 07:44:52 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அதாவது பரிசுத்த தேவனின் யேகோவா என்னும் நிலையா தேவனின் ஆவி என்பது? அல்லது பிதா இயேசு பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவரும் சேர்ந்திருக்கும் நிலையா தேவனின் ஆவி என்பது?
யோவான் 8:29என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தேவனோடு சஞ்சரிக்கும் அனுபவத்தில் இருப்போருக்கு பாவம் செய்யாமல் இருக்க சாத்தியம் உண்டு!
தேவனோடு சஞ்சக்கும் ஒருவருக்குள் கிறிஸ்துவின் சிந்தை கட்டாயம் இருக்கும்.