அதாவது அவர்கள் கர்த்தராகிய இயேசுவை குமாரனாக மட்டும் ஏற்று கொள்கிறார்கள்? அதே நேரம் தேவனின் தேவத்துவதை புரிந்து கொள்ளாமல் வாதிடுகிறார்கள். ஆனால் வேதம் சொல்கிறது இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கிற எந்த ஆவியும் தேவனால் உண்டானது அல்ல. இப்படி இருக்க அவர்களின் நிலை என்னவாகும்?
யெகோவா சாட்சிகள் பரலோகம் போவார்களா என்பதை அறியும் முன்னர் அவர்களின் போதனை என்ன என்பதை அறிய வேண்டியது அவசியம்.
அவர்கள் பரிசுத்த ஆவியானவரை ஒரு தேவனின் ஆளத்துவம் என்று ஏற்க மறுக்கிறார்கள்.
ஒரு மனுஷனை சரியான சத்தியத்துக்குள் வழி நடத்தி பரலோக பாதையில் அழைத்து செல்ல அருளப்படடவர் தேவனின் மூன்றாவது ஆழ்த்துவமாகிய பரிசுத்த ஆவியானவர். அவரை பெற்று கொள்ளாதவர்கள் எப்படி சகல சாத்தியத்துக்குள்ளும் நடக்க முடியும் எப்படி பரலோகம் போகமுடியும்?
இவர்கள் போதனைப்படியே பார்த்தாலும் இவர்கள் பரலோகம் போவது பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இவர்களுக்கு கிடையாது. மாறாக தேவன் இந்த பூமியை சீர்படுத்துவார் அதில் மனுஷன் என்றென்றைக்கும் வாசமாக இருப்பார்கள் என்று போதிக்கிறார்கள்
ஆண்டவராகிய இயேசுவையும் தேவனின் ஆளத்துவம் என்று அவர்கள் விசுவாசித்து இல்லை
இவர்கள் பரலோகம் போவது சாத்தியமான காரியம் போல் இல்லை என்றாலும், சீர்படுத்தப்படட பூமியில் நித்தியமாக வாழ்வது குறித்து சில வசனங்கள் இவர்கள் போதனைக்கு சாட்சியாக இருக்கிறது
சங்கீதம் 115:16வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.
எரேமியா 7:7அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த ஸ்தலத்திலே உங்களைச் சதாகாலமும் குடியிருக்கப்பண்ணுவேன்.
இப்படி வாக்குத்தத்தங்கள் இருப்பதால் அவர்கள் முடிவு குறித்து நான் எதுவும் தீர்ப்பு சொல்வதற்கில்லை. தேவ தீர்மானம் எதுவோ அது நிறைவேறட்டும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)