இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுய கிரியை மற்றும் நற்கிரியைக்கும் உள்ள வேறுபாடு


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
சுய கிரியை மற்றும் நற்கிரியைக்கும் உள்ள வேறுபாடு
Permalink  
 


சுயமாக கிரியையை தூண்டும்போது தன்னைத்தான் உயர்த்துதல் உண்டாகும் .

 

கிருபையைச் முழுக்க நினைத்து நற்கிரியை செய்யாதிருப்பது...பாவ உணர்வற்ற நிலையில் கடின மனசாட்சிக்கு கொண்டுச்செல்லும்.

 

*நியாயப்பிரமானம் என்பது  எதை செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என்ற தேவனுடைய சட்ட புத்தகம்*

 

 இந்த சட்டத்தை கடைப்பிடிக்க *சுயமுயற்ச்சியால்* முடியாது தேவனுடைய *கிருபையின் பெலனால்* அச் சட்டத்திட்டங்களை நிறைவேற்ற நமக்குள்ளான *சதையான இருதயத்தில் தேவனுடைய வார்த்தைகளை வைத்து  வாஞ்சையையும் விருப்பத்தையும் உருவாக்கி தேவனுடைய வார்த்தையாகிய நியாப்பிரமாணத்தை கைக்கொள்ளவைக்கிறார்.*

இந்த அனுபவத்தைத்தான் *ஜீவனுள்ள ஆவியின் பிரமாணமாக* இருக்கிறது.

 

சொல்லப்போனால் *நியாயப்பிரமாணம் எழுத்தின்படி சுயமுயற்ச்சியால் நிறைவேற்றமுடியாததாக இருந்தது இருந்தது* அதன் பரிமாணம் இப்பொழுது *கிருபையால் நமக்கு கிடைத்த ஆவியில் உண்டான ஜீவனால் இப்பொழுது நியாயப்பிரமாணத்தை கைக்கொண்டு ஜீவிக்க தேவபெலன் உண்டாயிருக்கிறது*.

 

*நியாயப்பிரமாணத்தை சுயமுயற்ச்சியால் செய்யும் போது ...*👇

நமக்கு *பாவம்* இனிமையாக இருக்கும் *கட்டாயமாக அதை செய்யாமல் இருக்க *மனதில் உண்டாகும் இச்சையை அடக்கி* முயற்சிகள் செய்து சில வெற்றிகள் பெற்றாலும்  𢞒ருநாள் மனதில் எழும்பும் *சுய ஆசை இச்சைகளால் இழுப்புண்டு தோல்வியைத் தழுவுகிறான்*.

 

*கிருபையால்*தேவனுடைய பிரமானத்தை கைக்கொள்வதோ!

*மனதில் அந்த பாவ இச்சையான அனைத்துக் காரியமும் மிக அருவருப்பாக தெரியும் அதை செய்ய மனதில் விருப்பம் இல்லாதிருக்கும்* .இங்கு சுய ஆசை இச்சையால் இழுப்புண்டு போக வாய்ப்பு இல்லாத்தப்படி *ஜீவனுடையா ஆவியின் பெலன் மனதைக் தன் ஆளுகைக்குள் வைத்திருப்பதால் மனதின் வாஞ்சை விருப்பம் அனைத்தும் தேவனுக்கு விருப்பமானது எது விருப்பம் இல்லாதது எது என்ற தேவனுடைய பிரமாணத்தையே உடையதாக இருக்கும்.*

 

👉தேவனுக்கு பிரியமில்லாதை மனது வெறுக்கும்.

 

மனதில் ஆசையை வைத்து அதை அடக்கி செய்யாமல் இருப்பது கடினம். இந்த சுய முயற்சியில் செய்வது சுய கிரியை என்று அழைக்கப்படவேண்டும் .

 

பொதுவாக கிரியை என்ற வார்த்தையை அடைமொழியாக வேதத்தில் வருவதால்.....

 

 *கிருபைக்கும் கிரியைக்கு வித்தியாசம் தெரியாமல் எதையாவது ஒன்றை பிடித்து தன் சுய ஞானத்தால் பிரித்துப் பார்க்கின்றனர்.*

 

👉 *கடலில் ஓடும் கப்பலில் இருந்து கடல் இல்லாமல் நான் கப்பலில் போவேன் என்பதும் இல்லை கப்பலே வேண்டாம் கடலில் விழுத்து வேண்டிய இலக்கை அடைவேன் என்பது எவ்வளவு முட்டாள்தனமான இருக்கும்.*

 

👉 *கிருபை என்பது கடல்*👈

 

👉 *கப்பல் என்பது அந்தகடலில் பயனிக்கும் கப்பலாகிய கிரியை*👈 

 

👉 *இங்கு தேவகிருபையின் பெலத்தால் கிரியை நடக்கிறதால் இதற்கு நற்கிரியை என்கிறோம்.*👈

 

மனதில் ஆசையே வராமல் இருக்கும்போது செய்யத்த எந்த தூண்டுதலும் அங்கே இருப்பதில்லை! தேவனுக்கு பிரியமானதை நிறைவேற்றவே அங்கு விருப்பமும் வாஞ்சையையும் உண்டாகும் *இந்த அனுபவமே ஜீவனுடைய ஆவியினால் உண்டான பிரமாணத்தை நிறைவேற்றுதல் அவை நற்கிரியை என்று அழைக்கப்படுகிறது.*

 

👉தேவ பெலத்தால் செய்வது நற்கிரியை!👈



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
RE: சுய கிரியை மற்றும் நற்கிரியைக்கும் உள்ள வேறுபாடு
Permalink  
 


தேவ கிருபைதான் மிகவும் மேன்மையானது என்பது எல்லோரும் அறிந்த ஓன்று. அவர் கிருபை இல்லாமல் நாம் செய்யும் எந்த கிரியையும் பயனற்றதே.

அவ்வாறு தேவனிடம் இருந்து மேலான கிருபையை பெற மனுஷன் எதுவும் செய்ய வேண்டாமா பிரதர்?
 
முதலில் தேவன் உண்டு என்று விசுவாசிக்க வேண்டும் - அது ஒரு மனுஷனின் கிரியையே.
(ஆப்ரஹாம் தேவனை விசுவாசித்தான் அதை தேவன் நீதியாக நினைத்தார். அந்த விசுவாசம் மனுஷனின் கிரியைதானே)  
 
இரண்டாவது அவருக்கு கீழ்ப்படிய முயற்சிக்க வேண்டும் - அதுவும் மனுஷனின் கிரியையே.
(மீன் பிடித்த்த பேதுருவை வா என்று இயேசு அழைத்த உடன் அவன் எல்லாவற்றையும் போட்டுவிட்டு அவரின் பின்னே சென்றான் அது ஒரு கிரியைதான்)      
 
பவுல் சொல்கிறார் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்தது நில்லுங்கள் என்று அதுவும் ஒரு கிரியைதானே? 
 
கிருபை இருந்தால் அங்கு கிரியை நிச்சயம் இருக்கும் 
 
இப்படி நாம் என்னதான் கிருபையை சார்ந்து நின்றாலும் அதை உறுதிப்படுத்த தேவனுக்கு ஏற்ற கிரியைகள் அவசியமாகிறது.தேவனோடு நடப்பதுவும் ஒரு கிரியைதான். 
 
ஆனால் இந்த கிரியை எல்லாமே நான் தேவன் எனக்கு அருளிய கிருபையால்தான் செய்கிறேன் என்ற எண்ணம் அவசியம் அது இல்லாமல் என் சொந்த பெலத்தால் நான் இதை எல்லாம் செய்கிறேன் என்று மனதில் எண்ணுவோமானால் நான் சீக்கிரம் விழுந்து போவோம்.
 
இன்று அநேகர் கிருபையை பிடித்துக்கொண்டு கிரியையே அவசியம் இல்லை என்பதுபோல் பேசுகின்றார்கள் ஆனால் ஆண்டவராகிய இயேசு வெளிப்படுத்தின விசேஷத்தில் சபைகளுக்கு எழுதும்போது  
 
"உன் கிரியையை அறிந்திருக்கிறேன்" என்று எல்லா சபைக்கும் எழுத தவறவில்லை. 
 
எனவே நம்முடைய ஒவ்வொரு கிரியையும் தேவனால் கண்காணிக்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.
 
மேலும் இந்த உலகில் எல்லா மனுஷர்களும் தங்கள் உயிர்வாழ  ஏதாவது சில கிரியைகளை செய்தே ஆகவேண்டியது உள்ளது. கிரியையே இல்லாமல் தூங்கிக்கொண்டே யாராலும் காலங்களை தள்ள  முடியாது.
 
எனவே கிரியை செய்வது அவசியம். அந்த கிரியையானது தன சுய பெலத்தால் நடக்கிறது என்று எண்ணுவதே தவறான ஒன்றே அன்றி கிருபை எனக்கு கிடைத்துவிட்ட்து என்று சொல்லிக்கொண்டு சிலர்  தங்கள் இஷடம்போல வாழ்ந்தால் அவர்கள் பெற்ற கிருபையை வீணடிக்கிறார்களே அன்றி வேறல்ல.   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard