2. அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?
அநேகர் "இவன்" என்று கர்த்தர் குறிப்பிடுவது யோபுவை என்று நினைக்கிறார்கள் ஆனால் என்னுடைய கணிப்புப்படி அவர் "இவன்" என்று சொல்லுவது எலிகூவை என்றே கருதுகிறேன்.
காரணம் அடுத்த வசனம்
"இவன் யார்?" என்று சொன்ன கர்த்தர் அடுத்த வசனத்தில் இவ்வாறு சொல்கிறார்.
3. இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.
இதை சேர்த்து பார்த்தால் "நான் உன்னை கேட்பேன் நீ உத்தரவு சொல்லு" நம் இருவருக்கும் இடையில் வந்து என்ன நடக்கிறது என்று புரியாமல் அறிவில்லாத வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருக்கும் இந்த எலிகூ யார்? என்று கேடகிறார்.
முக்கிய காரணங்கள்
1. யோபுவை தேவனுக்கு தெரியும் எனவே அவனை "இவன் யார்" என்று நிச்சயம் கேடகமாடடார்.
2. தேவன் அறிந்திருக்கும் மனுஷர்களை தவிர மற்ற எல்லோரும் யாரென்றே தேவனுக்கு தெரியாது காரணம் அந்த யோபுவுக்குள்தான் மற்ற மனுஷர்களை அவர் பார்க்கிறார். (அதேபோல் இன்று இயேசுவுக்குள்தான் மற்ற மனுஷர்களை தேவன் பார்க்கிறார்)
3. கர்த்தருக்கு அவர் தாசனுக்கும் இடையில் நடக்கும் காரியங்களில் தலையிட வேறு எவனுக்கு அதிகாரம் கிடையாது .
எது வேண்டுமானாலும் நீ என்னை கேள் நான் உனக்கு உத்தரவு சொல்வேன் நமக்கு இடையில் அடுத்தவன் தலையீடு வேண்டாம்
4. எலிக்கூ தேவனுக்கு சப்போர்ட் பண்ணுவதுபோல அநேக வார்த்தைகளை சொன்னாலும் கூட, சரியான காரணம் தேவ நோக்கமும் தெரியாமல் சொல்லும் எந்த காரியமும் தேவனால் அங்கீகரிக்கப்பட மாடடாது.
5. தேவன் தெரிந்துகொண்ட ஒரு மனுஷனை எத்தினிமித்தமும் மடடம் தட்டி பேச பூமியில் எவனுக்கும் அதிகாரம் கிடையாது.
எலிகூவின் வார்த்தை தேவனுக்கு சப்போர்ட் பண்ணுவது போலவும் யோபுவை மடடம தட்டுவதுபோலவும் இருப்பதை தேவன் விரும்பவில்லை.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)