குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
இவ் வசனங்களில் தீர்க்க தரிசன வசனங்கள் அடங்கியுள்ளது அதாவது இயேசு கிறிஸ்துவின் வருகையை குறிப்பிடுவதாக உள்ளது. பிதாவாகிய தேவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை எழுப்புவதை குறித்தும் கூறப்பட்டுள்ளது. ஆனால் என்ற வசனத்தில் ஜனங்களை உமக்கு சுதந்திரமாகவும் பூமியின் எல்லைகளை உமக்கு சொந்தமாகவும் கொடுப்பேன் என்று தேவன் யாருக்கு சொல்கிறார்? இயேசுகிறிஸ்துவுக்கா? அல்லது வேறு யாருக்கு? இயேசு கிறிஸ்துவிட்கு கூறப்பட்டுள்ளது என்று எம்மால் கணிக்க முடியாதல்லவா ஏனெனின் சகலமும் அவர் மூலமாய் உண்டாயிருக்கிறது என்றும் வசனம் சொல்கிறதே?
சிஸ்ட்டர் நான் அனைத்தும் அறிந்தவன் கிடையாது. மேலும் நீங்கள் கேட்க்கும் கேள்விகள் ஆழமானது. அதற்க்கு எனோ தானோ என்று பதில் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் கேள்வி கேடடால் அதை தியானித்து சரியான பதில் கிடைக்கும் வரை காத்திருக்கிறேன். எனவே தாமதமாகலாம்.
Debora wrote:
தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
இந்த வசனம் நிச்சயமாக தாவீதை குறிக்கவில்லை காரணம் தாவீது எல்லா இடங்களிலும் ஈசாயின் குமரன் என்றே சொல்லப்பட்டுள்ளார். எனவே நீர் என்னுடைய குமாரன் என்று இங்கு வசனம் சொல்வது ஆண்டவராகிய இயேசுவையே.
மத்தேயு 3:17அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது
////என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;///தேவன் இங்கும் ஆண்டவராகிய இயேசுவையே இவ்வாறு கேட்க்கச்சொல்கிறார் என்று அறிய முடிகிறது.
ஏசாயா 53: 11. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.
12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
இயேசு அக்கிரம காரருக்காக தேவனிடம் வேண்டிக்கொண்டார் எனவே தேவன் அவருக்கு அநேகரை பங்காக கொடுக்கிறார்.
சகலமும் அவரால் படைக்கப்பட்டிருந்தாலும் அக்கிரமக்காரர்கள் அழிவுக்கு நேரானவர்களை அவர்களுக்காக ஆண்டவர் தேவனிடம் வேண்டிக்கொண்டார் அல்லது கேட்டுக்கொண்டார் அவர்களை கேட்க்க சொன்னதும் தேவனே.
////இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.///
வெளி 2:26. ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.27. அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்
இயேசு ஆளவும் நொறுக்கவும் உள்ள அதிகாரத்தை பிதாவிடத்தில் ற்றிருக்கிறார் அதை வேறு ஒருவருக்கு கொடுப்பதுபோல் வசனம் இருக்கிறது. ஆகினும் அதை கொடுப்பது ஆண்டவராகிய இயேசுவே.
எனவே எல்லா வசனமும் ஆண்டவராகிய இயேசுவை பற்றிய தீர்க்கதரிசன வசனமே.
-- Edited by SUNDAR on Tuesday 5th of September 2017 03:34:15 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)