என்னுடைய சாட்சி ஒருசிலருக்கு பிரயோஜனமாயிருக்கும் என்று இங்கு பதிவிடுகிறேன்....
நேற்று என்னுடைய அதிகாரி ஒருவர் என்னை அழைத்து சில வார்த்தைகளை என்னிடத்தில் பேசினார்....நாளை இதை குறித்து ஒரு மீட்டிங் Arrange பன்னுகிறேன்....என்று சொல்லி அனுப்பினார்....
என்னுடைய மனம் மிகவும் வருத்தபட்டது...ஒரு குழப்பமாகவே இருந்த்து....என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை....நான் என் வேலையில் உண்மையும் உத்தமுமாய் இருக்கிறேனே.....எப்படி ஒருவர் என்னை அழைத்து இவ்வாறு பேச முடியும் என்று மனது மிகவும் கஷ்டபட்டு கொண்டு இருந்த்து....சரி நாளை சந்திக்கும்போது என்ன பேச வேண்டும் என்று நினைத்தபோது என்னுடைய மாம்சத்தில் பல்வேறு என்னங்கள் உதித்தது....என் சார்பில் உள்ள நியாயங்களை எல்லாம் எடுத்து கேற வேண்டும் என்று எண்ண தோன்றியது...நிறைய காரியங்கள் மனதில் வந்து கொண்டே இருந்த்து....
ஒரு நிமிடம் என் மனதை அடக்கி நிதானமாக இருந்தபோது மனதில் வசனம் நினைவுக்கு வந்தது..
எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு கீழ்ப்படியக்கடவன், ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை,உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.ரோமர் 13 :1
தேவன் அனுமதித்தால் நான் என்ன செய்ய முடியும் ....இது தேவனுடைய சித்தமானால் நான் ஒன்றும் செய்ய இயலாது என்று எண்ணி நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டேன்...
நேற்று இரவு படுப்பதற்கு முன் நான் ஜெபித்தாவது.....
ஆண்டவரே என்னுடைய ஒவ்வொரு செயலையும் அறிகிறவரே....இந்த காரியத்தையும் உம்முடைய கரத்தில் ஒப்புகொடுக்கிறேன்....என்னுடைய மாம்சத்தில் என் பட்சத்தில் நியாயமாக தோன்றுகிற காரியங்களை எடுத்து கூறி அவருக்கு தெரியபடுத்த வேண்டுமென்று என் மனம் விரும்புகிறது.....ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை.. எனக்காக நீர் செயல்பட வேண்டுமென்று நான் விரும்புகிறேன்...இதை நீரே பார்த்துகொள்ளும் நீர் செய்வது எதுவோ..அது சரியானதாக இருக்கும் என்று நான். உறுதியாய் நம்புகிறேன்...
இப்படி சொல்லி முடித்து படுத்து விட்டேன்...
இன்று அதே அதிகாரி என் பட்ச்சமாய் பேசி எனக்கு அனுகூலமான காரியத்தை செய்தார்...தேவனுடைய செயலை என்னவென்று சொல்வது.....
இந்த வசனம்தான் நினைவில. வந்த்து...
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
நீதிமொழிகள் 16:7
என் அன்பு தேவனுடைய பிள்ளைகளே...
நாம் நம்முடைய வேலைகளிலும்...வாழும் இடங்களிலும் உண்மையும் உத்தமுமாய் இருந்த்து தேவனுடைய சித்தத்திற்கு நம்மை விட்டுகொடுத்து நம்முடைய சுய மாம்சத்தின் சத்ததிற்கு செவிசாய்க்கமல் இருக்கும்போது...நம்முடைய தேவன் நம்முடயை வாழ்வில் செயல்படுகிறதை நாம் கண்கூடாக காணக்கூடும்..
தேவனுடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)