பிரதர் ஒரு காலத்தில் அநேகர் வந்து பதிவிடட இந்த தளம் வாட்ஸ் அப் மாற்று facebook வரவால் அதுவும் மொபைலில் அவைகளை பயன் படுத்த முடியும் என்ற காரணத்தால் எனது நெருங்கிய ஆவிக்குரிய நண்பர்கள் கூட இங்கு வரமுடியாத நிலையில் இருக்கிறார்கள்.
pounds1484 wrote:
இது ஒரு பொதுவான கேள்வி.
கணவன் மீது மனைவி அதிகாரம் செலுத்தலாமா?
வேதம் சொல்லுகிறது, கணவன் மனைவிக்கு தலை. எனவே கணவன் அதிகாரம் செலுத்தலாம் கிறிஸ்துவின் வழியில்.
ஆனால், இன்றைய கிறிஸ்தவ பெண்கள் சரி வர கடைப்பிடிக்கிறார்களா?
மனைவிகள் பற்றிய தங்களின் இந்த கேள்விக்கு பதில் சொல்வதில் கொஞ்சம் சிக்கல் இருப்பதால் யாராவது கருத்து தெரிவிப்பார்களா என்று விட்டுவிடடேன்
நீதிமொழிகள் 31:10.குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது
என்று வேதம் சொல்கிறது..
அப்படி கர்த்தருக்கு அவர் வார்த்தைக்கும் பயந்து நடக்கும் ஒரு ஸ்திரி மனைவியாக கிடைக்க நாம் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
எனக்கு அப்படிப்பட்ட ஒரு நல்ல மனைவிதான் கிடைத்தாள். நான் என்ன சொன்னாலும் கேட்டு எதிர் பேச்சு பேசாமல் மெளனமாக இருக்கும் அவளின் தாழ்மையான குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஆனால் அது நீண்ட நாடகள் நீடிக்க வில்லை.
நாடகள் நகர நகர அனுபவம் அதிகமாக அதிகமாக கீழபடித்தால் என்பது காணாமல் போய்விட்டது.
எனக்கு தெரிந்த சிலரும் அதையே சொல்கிறார்கள் எனவே நான் என்ன கருத்து சொல்வது?
நாம் கிறிஸ்த்துவின் எல்லா கடடளைக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறோமா என்று சற்று நிதானித்து பார்ப்போம்?
உள்ளதை உள்ளதென்று சொல்லுங்கள் என்றார் இயேசு!
பொய் சொல்லாமல் வாழ்கிறோமா?
உனக்கு உண்டானதை விற்று பிச்சை போடு என்றார் இயேசு!
அப்படி விற்று பிச்சை போடுகிரோமா?
திருப்பி கொடுப்பார்கள் என்ற நோக்கில் கடன் கொடாதே என்றார் இயேசு.
கடன் கொடுத்து விட்டு திருப்பி வரும் என்று எதிர்பாக்காமல் விடுகிரோமா?
இப்படி இன்னும் அநேகம் உண்டு.
இதை எல்லாம் ஆராய்ந்து பார்த்தால், நாமும் அநேக காரியங்களில் தலையாகிய இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படியவில்லை.
எனவேதான் ஸ்திரீகளும் தங்கள் தலையாக புருஷருக்கு கீழ்படிவதில்லை என்று எண்ண தோன்றுகிறது.
இது என்னுடைய நிதானிப்பின் அடிப்படையில் உருவான கருத்து.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)