கடந்த ஞாயிறு ஆராதனையில் கர்த்தர் என் வாழ்வில் செய்த அற்புதத்தை சுருக்கமாக கூற வேண்டி இந்த பதிவு.
நான் காலையில் ஆராதனைக்கு பஸ்ஸில் போகிற வழியில் ஒரு காரியத்தை நினைத்தவாறு போய்க்கொண்டு இருந்தேன். என்னவென்றால், கர்த்தாவே, இன்று கர்த்தர் என்னோடு பேசுவீரெனில், என்னை உம்முடைய ஊழியத்துக்கு ஒப்புக்கொடுக்கிறேன் என்பதாகும்.
கர்த்தர் நல்ல்லவர்.
ஆராதனையின் இறுதியில், ஊழியக்காரர் மேடையில் இருந்து இறங்கி நேராக என்னிடம் வந்து எனக்கு தீர்க்கதரிசனமாக பல காரியங்களை சொல்ல தேவன் கிருபை கொடுத்தார். அது மாத்திரம் அல்லாமல், கிட்டத்தட்ட 2500 பேர் இருக்கும் கூட்டத்தில் முன்பதாக அழைத்துச்சென்று என்னை பற்றி தீர்க்கதரிசனமாக தேவன் சொல்லச்செய்தார்.
அதில் ஒன்று, நீ என்னுடைய ஊழியத்தை செய்வாய் என்பதும் அடங்கும்.
அல்லேலூயா.
கர்த்தர் என்னையும் நினைத்து சொன்ன எல்லா காரியங்களுக்காய் அவரை ஸ்தோத்தரிக்கிறேன்.
கர்த்தர் தங்கள்மேல் வைத்துள்ள மேலான கிருபைக்காக நன்றியோடு துதிக்கிறேன்.
அநேக ஊழியர்கள் மத்தியில் நீங்கள் ஒரு jemமாக ஜொலிக்க கர்த்தருக்குள் வாழ்த்துகிறேன்.
தேவ ஊழியம் என்பது மேலான அதே நேரத்தில் கடினமான வேலை அதை தேவனுக்கு ஏற்றபடி செய்ய அபிஷேகமும் அழைப்பும் நிச்சயம் வேண்டும். அது தங்களுக்கு கிடைத்துள்ளது அநேக ஆத்துமாக்களை தேவனண்டை கொண்டு சேர்க்க வாழ்த்துக்கள் பிரதர்.