மீண்டும் ஒரு வசனம் பற்றிய கேள்வியுடன் வந்திருக்கிறேன்.
ஏசாயா 29:13 இல் இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
இதில் இரண்டாவது பகுதியான, 'அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது' என்பதை குறித்து அறிய விரும்புகிறேன்.
மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனை எனும்போது, அங்கே வேறு ஒரு போதனை அல்லது கற்பனை இருப்பதாக தோன்றுகிறது.
பிரதர் எது செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்பது குறித்த எல்லா விளக்கங்களையும் ஆண்டவர் நமக்கு தெளிவாக வேதத்தில் எழுதி கொடுத்துவிடடார்.
ஆனால் அவற்றை எல்லாம் செய்வதற்கு பிரயாசம் எடுக்காமல் சில தேவையற்ற பாரம்பரிய செயல்களை கடடளையாக போதித்து அதை குறித்து பெரிய பயத்தை உண்டாக்குவதுதான் இந்த மனுஷர்கள் கற்பனை என்பது.
ஆண்டவராகிய இயேசுவின் காலத்தில் சாப்பிடும் முன்னை கையை கழுவுவது வீட்டுக்கு உள்ளே வரும் முன்னர் காலை கழுவது போன்ற பல பாரம்பரிய கடடளைகள் இருந்தன.
3. ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைத் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள்.
4. கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும் கிண்ணங்களையும் செப்புக்குடங்களையும் மணைகளையும் கழுவுகிறதுமல்லாமல், வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டுவருவார்கள்.
இப்படிபடட அநேக பாரம்பரியங்கள் எல்லா ஜாதிக்குள்ளும் நமது நாட்டிலும் இருக்கிறது.
இருட்டிய பின்னர் குப்பை கொட்டிட கூடாது / இரவில் நகம் வெட்ட் கூடாது./ வெள்ளி கிழமை குளிக்க வேண்டும்/ எதிரே விதவைகள் வந்தால் வெளியில் போகக்கூடாது இப்படி அநேகம் உண்டு.
இந்த காரியங்கள் எந்த அளவுக்கு ஒரு மனுஷனுக்கு பயன்தரும் என்பது சரியாக நமக்கு தெரியாவிடினும் சாப்பிடும் முன்னை கையை கழுவுதல் ஒரு நல்ல பழக்கம் அவ்வளவுதான்.
அனால் இந்த பாரம்பரியத்தை தேவனின் கடடளைப்போல சொல்லி பயத்தை உண்டாக்குவது தவறான காரியம்.
கர்த்தருக்கு அவர் கற்பனைக்கும் பயந்து நடந்தால் போதுமானது இது போன்ற பாரம்பரியங்களை கைக்கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.
ஆனால் இன்று நமது சபைகளில் கூட அநேக பாரம்பரியமான காரியங்களை கைக்கொண்டு வருகிறார்கள் அதை செய்யாமல் இருப்பது பெரிய பாவம் போல சொல்கிறார்கள்.
உதாரணமாக : சபைக்கு வரும்போது வேத புத்தகத்தை எடுத்து வர வேண்டும் என்பது ஒரு பாரம்பரிய செயல் அது பாவம் அல்ல
இந்த பாரம்பரிய செயலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை "பொய் சொல்லக்கூட்ட்து" என்று தேவன் திரும்ப திரும்ப சொல்லும் தேவ வார்த்தைக்கு அநேகர் கொடுப்பது இல்லை.
உண்மையான தேவ வார்த்தையை மீறுவதை பாவம் இல்லாததுபோல் ஈஸியாக எடுத்துக்கொண்டு ஒழுக்கம் மற்றும் பாரம்பரிய செயலை முக்கியப்படுத்தி தேவ கடடளைப்போல் போதிப்பதையே இங்கு ஆண்டவர் சுட்டிக்காட்டுகிறார் என்று அறிய முடிகிறது பிரதர்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நல்ல விளக்கம்.
தற்போது சபைக்கு வேதத்தை விட மொபைல் ஃபோனை உபயோகிப்பதை காணமுடிகிறது. சில மூத்த விசுவாசிகளே அப்படி செய்கின்றனர்.
உடை கூட fashion ஆகிவிட்டது.
ஒரு சில சம்பிரதாயங்களை மக்கள் கடைப்பிடிப்பதை விட ஆண்டவர் என்ன விரும்புகிறார் என்று அறிந்து செயல்பட வேண்டும்.