A righteous person will have many troubles, but the LORD will deliver him from them all.
நீதிமானுக்கு அநேக துன்பங்கள் (நிச்சயமாக) வரும். ஆகினும் கர்த்தர் அவனை அந்த துன்பங்கள் எல்லாவற்றிலும் இருந்து விடுவிப்பார்.
யார் நீதிமான்?
எசேக்கியேல் 18:9என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
வேத வார்த்தைகளை கைக்கொண்டு நடக்க பிரயாசம் எடுப்பவன் நீதிமான்.
இப்படி நீதிமானுக்கு துன்பங்கள் வர காரணம் என்ன?
I யோவான் 5:19 நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.
உலகம் பொல்லாங்கனுக்குள் இருக்கிறது. அதாவது உலகம் தீமைக்குள் வீழ்ந்து கிடக்கிறது அப்படி கிடைக்கும் உலகத்துக்குள் நன்மை செய்து நீதியாக வாழ எத்தனிக்கும்போது அநேக பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
மும்பை CST ரயில் நிலையத்தில் சாயங்காலம் ஆறு மணி மணிக்கு எல்லாம் திரள் கூடட ஜனங்கள் வேலை முடிந்து ஸ்டேசனுக்குள் முண்டியடித்து கொண்டு ஓடுவார்கள் அந்த கூட்டிடத்துக்குள் எதிர் திசையினுள் இருந்து ஒருவன் வந்து மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான் அவனால் முன்னேறி போகவே முடியாது ஆனால் கூட்டிடத்தோடு சேர்ந்து போனால் அவர்களை நம்மை தள்ளி கொண்டு போய் சேர்த்துவிடுவார்கள்.
அதே போல் பொல்லாங்கை நோக்கி ஓடும் இந்த பாவ உலகத்தில் நல்லவனாக வாழ பிரயாசம் எடுப்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல.
ஓடும் தண்ணீரில் சேர்ந்து ஓட பெரிய பிரயாசம் தேவை இல்லை ஆனால் எதிர் நீச்சல் போட அநேக பிரயாசம் எடுக்க வேண்டுமல்லவா? வேகமாக ஓடும் தண்ணீர் நம்மை இழுத்து போக முயற்சிப்பது போல பாவமானது நம்மையும் சேர்த்து இருந்து செல்ல அதீத முயற்சி எடுக்கிறது அதில் இருந்து விலகி நிற்கவே நாம் அதிக பிரயாசம் எடுக்க வேண்டும் அதுவே நீதிமானுக்கு வரும் துன்பங்கள்.
இப்படி வரும் அநேக துன்பங்களால் நீதிமானை ஒருக்காலும் அழித்துவிட முடியாது ஒருவேளை அவன் தவறி அங்கு வீழ்ந்தாலும் கூட உடனே எழுத்து நிற்க கர்த்தர் உதவி செய்கிறார். எனபதே வசனம் போதிப்பது.
என் வாழ்வில் நடந்த இரண்டு உதாரணம் சுருக்கமாக இங்கு சொல்கிறேன்: நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்
இந்த வார்த்தகியின் அடிப்படையில் நான் பொய் சொல்வது கிடையாது அது எங்கள் அலுவலகத்தில் எல்லோருக்கும் தெரியும்
ஆகினும் ஒருநாள் கடன்காரர் ஒருவர் பணத்துக்காக போனபண்ண எங்கள் டைரக்ட்டர் ரிசீவரை அவர்களே கையில் எடுத்துவிட்டார்கள். குரலை கேட்டதும் கடன்காரன் என்பதை அறிந்து, ரிசீவரை மூடிக்கொண்டு என்னிடம் கொடுத்து "நான் இல்லை" என்று சொல்லி விடுங்கள். என்று சொல்லிவிடார்கள். அந்நேரத்தில் "நான் அவ்வாறு சொல்ல முடியாது" என்று அவர்களிடம் விவாதிக்க. அவர்களுக்கு கடும் கோபமாகி விட்ட்து வேறு ஒருவருக்கு போனை கொடுத்து அவ்வாறு சொல்ல சொல்லிவிட்டு. நேரே MD இடம் சென்று புகார் கொடுத்து விட்டார்கள். அவர் என்னை கூப்பிட்டு "YOU ARE JUST LIKE A ANSWERING MACHINE TELL WHAT WE SAY, இப்படியெல்லாம் இருந்தால் இங்கு வேலை பார்க்க முடியாது" என்பது போல் கத்தினார் நான் எதுவும் பதில் சொல்லாமல் வந்துவிட்டேன்.
வேலை போனால் வேறு வேலை கிடைப்பது மிகவும் கஷடம் எனவே அதிக மன கஸ்டமாக இருந்தது ஆண்டவரிடம் ஜெபித்தேன் ஆனால் நடந்ததோ பின்னர் MD என்னை அழைத்து பாராட்டியதோடு அநேகருக்கு இவர் ஒரு நல்ல கிறிஸ்த்தவர் எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்ல மாடடார் என்று புகழ்மாலை சூட்டினார்.
இங்கு நீதியாக வாழ நினைத்த எனக்கு வந்தது பெரிய துன்பம் அதில் கர்த்தர் நின்று விடுவித்தார்.
இதேபோல் இன்னொரு இடத்தில் ஒரு முக்கியமான காரணத்துக்காக ஞாயிற்று கிழமை வேலைக்கு வர சொன்னபோது "ஒய்வு நாளில் வேலை செய்ய கூடாது" என்ற ஆண்டவரின் வார்த்தையை சொல்லி வேலைக்கு வராமல் இருந்துவிடடேன். அப்பொழுதும் வேலை போகும் நிலை ஏற்பட்ட்து ஆனால் கர்த்தர் அங்கும் என்னை விடுவித்தார்.
இப்படி அநேக சாட்சிகள் உண்டு.
இவை எல்லாவற்றையும் விட கூடவே இருக்கும் மனைவிமார்களால் வரும் சோதனையும் வேதனையும்தான் மிகப்பெரியது. (சில இடங்களில் கணவன்மார்களால் மனைவி துன்பம் அனுபவிக்கலாம்)வருமானத்துக்கு ஏற்ற வாழ்வு வாழாமல் அதிக பணத்தை எதிர்பார்த்து நீதிமானை நீதியாக வாழ விடாமல் தூபங்களை உண்டாக்குவதில் மனைவிகள் முதலிடம் வகிக்கிறார்கள். (யோபுவின் மனைவியை பாருங்கள். ஆகாபின் மனைவி யேசபேலை பாருங்கள், ஆமானின் மனைவி சிரேஷ்ஐ பாருங்கள்)
மனைவியால் நான் சந்தித்த துன்பங்கள் அநேகம். என்னை நீதியாக வாழ விடாமல் தடம் புரள வைப்பதற்கு அவள் மூலமாக சத்துரு எடுத்த பிரயாசம் அநேகம் அநேகம் ஆனால் இன்று வரை கர்த்தரே என்னை எல்லா இடங்களிலும் பாதுகாத்து வந்துள்ளார்.
(மனைவியால் என்று சொல்வதைவிட, பலவீன பாண்டமாகிய அவளை பயன்படுத்தி சத்துரு செய்யும் முயற்சிகள் என்பதுதான் சரியானது}
வசனத்தின்படி வாழ முயற்சிக்கவில்லை என்றால் பெரிய துன்பங்கள் வாராது. ஆனால் வாழ முயற்சிக்கும்போது அநேக துன்பங்கள் நிச்சயமாக வரும்.
உதாரணமாக "
மத்தேயு 5:42 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
34. திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
30. உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.
அதாவது கேட்பவனுக்கு முகம் கோணாமல் கடன் கொடுக்க வேண்டும் அப்படி கொடுக்கும் கடனை திரும்ப வரும் என்று எதிர்பார்க்க கூடாது என்று ஆண்டவர் சொல்கிறார்
இப்படிபடட வார்த்தைகளை எல்லாம் கைகொள்ளுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. எத்தனையோபேர் ஏமாற்றிவிட்டு ஓடியிருக்கிறார்கள் நானும் இன்றுவரை அதை பெரியாத எடுத்துகொள்வதில்லை ஆனால் என் மனைவியோ இதை எல்லாம் தாங்கவே முடியாமல் என்னை திட்டி தீர்த்திருக்கிறாள்.
இப்படி வசனத்தை கைக்கொள்ள பிரயாசம் எடுக்கும்போது வரும் துன்பங்களையே ஆண்டவர் நீதிமானுக்கு வரும் துன்பங்கள் என்று குறிப்பிடுகினார். அது நிச்சயம் வரும் அங்கு நிச்சயம் கர்த்தர் இருந்து விடுவிப்பர்.
மற்றபடி அநேகருக்கு துன்பங்கள் பாடுகள் பாவத்தின் காரணமாக வரும். அதை எல்லாம் இந்த் "நீதிமானுக்கு வரும் துன்பங்கள்" வரிசையில் சேர்க்க முடியாது . அங்கு அந்த பாவத்தை நிவர்த்தி செய்யும்வரை கர்த்தர் விடுவிக்கவும் மாடடார்
-- Edited by SUNDAR on Thursday 16th of November 2017 12:25:41 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அப்படியாயின் பாவம் செய்த யார்மேலும் கர்த்தர் இரக்கம் காட்டுவதில்லையா? பாவத்தை அறிக்கைசெய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்று வசனம் சொல்கிறதே.
ஆண்டவராகிய இயேசு பாவிகளுக்காகவே உலகத்துக்கு வந்தார்.
I தீமோத்தேயு 1:15பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது;
I யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
இவ்வசனங்களை நாம் ஆராயும்போது கீழ்கண்ட வசனத்தையும் கவனிக்க வேண்டும்.
லூக்கா 12:47. தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்
எனவே எதோ சில அடிகள் (துன்பங்கள்) நிச்சசயயம் இருக்கத்தான் செய்யும்.
மேலும் இங்கு மன்னிப்பு என்பதை நாம் இரண்டாக பிரிக்கலாம்
1. ஆத்துமாவுக்கான மன்னிப்பு
2. சரீரத்துக்கான மன்னிப்பு
ஆத்துமா என்பது தேவனுக்கானது எனவே அறிக்கை செய்து விட்டுவிடும்போது இயேசுவின் ரத்தத்தால் கழுவப்பட்டு ஆத்தும பாவமானது முற்றிலும் சுத்திகரிக்கப்படும் எனவே ஆத்தும விடுதலை மற்றும் நித்திய ஜீவனுக்கு எந்த பாதிப்பும் இருக்காது
ஆனால் சரீரம் என்பது இந்த மண்ணுக்கு சொந்தமானது எதை விதைக்கிறதோ அதை அது இங்கு நிச்சயம் அறுக்கும்.
நீதிமொழிகள் 11:31இதோ, நீதிமானுக்குபூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.
சரீரத்தில் வரும் வேதனை துன்பங்கள் அனைத்திற்கும் நம் மீறுதல் மட்டுமே காரணம். வேறு யாருமோ எதுவுமோ காரணம் அல்லவே அல்ல.
எனவே மன்னிப்பு கேட்டு விட்டுவிடடாலும் செய்த பாவத்துக்கு சரீரப்பிரகாரமாக சிறிய துன்பமாவது வந்து அது சரிகடடப்படும்
எரேமியா 46:28 என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; ...............................................உன்னை மட்டாய்தண்டிப்பேன்; ஆனாலும் உன்னை நான் குற்றமில்லாமல் நீங்கலாக விடுவதில்லையென்கிறார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)