இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தாவீதின் எந்த நிலையில் தேவனின் பதில் தாமதிக்கிறது?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
தாவீதின் எந்த நிலையில் தேவனின் பதில் தாமதிக்கிறது?
Permalink  
 


கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!

 

கடந்த காலங்களில் நான் சங்கீத புத்தகத்தை தியானித்து வருகிறேன் அதில் அநேக இடங்களில் தாவீது ராஜா நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் என்னை தள்ளி விடாதேயும், எனக்கு பதில் அழியும் என்று அநேக நேரங்களில் தேவனை நோக்கி கெஞ்சுவதை காணலாம்.

 

உதாரணமாக 

 சங்கீதம் 42 : 9,10 

நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.

உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.

சங்கீதம் 43 : 1 , 2 

தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.

 

என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?

 

இதில் தாவீது எந்த நிலையில் இவைகளை கூறுகிறார்? தேவன் அவருக்கு தாமதமாக பதில் அளித்தாரா? தாவீதின் சத்துரு என்று அவர் கூற முட்படுவது யாரை? தாவீது பாவம் செய்த பின்னர் அவரின் நிலை இப்படியாக இருந்ததா? அல்லது எப்படி? 

 

சற்று தெளிவாக விளக்கவும் 

 



-- Edited by Debora on Tuesday 28th of November 2017 11:02:31 AM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: தாவீதின் எந்த நிலையில் தேவனின் பதில் தாமதிக்கிறது?
Permalink  
 


Debora wrote:

கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!

 கடந்த காலங்களில் நான் சங்கீத புத்தகத்தை தியானித்து வருகிறேன்  

 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கர்த்தருக்குள் மகிழ்கிறேன்  தங்கள் தியானங்களில் கர்த்தர்தாமே  இடைப்பட்டு காரியங்களை விளங்கப்பண்ணுவாராக. 

 

Debora wrote:

///இதில் தாவீது எந்த நிலையில் இவைகளை கூறுகிறார்?///
 
நீங்கள் நினைப்பதுபோல் அவன் பாவம் செய்த பிறகே தேவன் அவனுக்கு செவிகொடுக்க மறுத்தார் என அறிய முடிகிறது. 
 

யோவான் 9:31 பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்

 
 
உபாகமம் 1:45 நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருடைய சமுகத்தில் அழுதீர்கள்; கர்த்தர் உங்கள் சத்தத்தைக்கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை
 
 
மேலேயுள்ள வசனங்கள் மிக தெளிவாக சொல்கிறது. பாவிகளுக்கும்  தேவனின் வார்த்தைகளை மீறி நடப்பவர்களுக்கு தேவன் செவி கொடுப்பது இல்லை என்று.
 
தாவீது பாவம் செய்வதற்கு முன்னர் அவனுடைய வார்த்தைகளை எல்லாம் கெம்பீரமாக இருந்தது! பாவம் செய்த பின்னரோ அவன் வார்த்தைகள் கெஞ்சுதலாக மாறிப்போனது.
 
Debora wrote:
///தேவன் அவருக்கு தாமதமாக பதில் அளித்தாரா?///
 
பாவம் செய்வதற்கு முன்னர் கர்த்தர் அவன் மேலே தங்கியிருந்தார். தாவீதை கொண்டு பேசினார்.  
 
I சாமுவேல் 16:13  அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்;
II சாமுவேல் 23:2 கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.
 
ஆனால் பாவம் செய்தபோது அவனை விட்டு தூரமாக விலகி போனார்.
 
சங்கீதம் 38:21 ர்த்தாவேஎன்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்.
சங்கீதம் 70:5 நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: 
 
அது ரொம்ப சிம்பிள் சிஸ்ட்டர். எதோ ஒரு பாவம்தான் தேவனுக்கு நமக்கும் இடையில் பிரிவினை உண்டாக்குகிறது. வேறு எதுவும் கிடையாது.    
 
ஏசாயா 59:2 உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
 
தாவீதுக்கு மட்டுமல்ல, இன்றும் நாமும் கூட சில காரியங்களுக்கு தேவனிடம் இருந்து பதிலை பெறமுடியாத நிலையில் இருப்பதற்கு காரணம் நமது மீறுதல்களே.
 
Debora wrote:
////தாவீதின் சத்துரு என்று அவர் கூற முட்படுவது யாரை?////
 
"சத்துரு" என்ற வார்த்தை ஒரு மனுஷனுக்கு எதிரியாக இருப்பவனை குறிக்கிறது.  எல்லா மனுஷனுக்கு ஒரே எதிரி (சத்துரு) பிசாசுதான். அவன் வெவேறு மனுஷர்கள் மூலம் வெவேறு ரூபத்தில் வந்தாலும் நமக்கு எதிரியாக வரும் மனுஷனுக்குள் இருந்து செயல்படும் ஆவி என்பது சாத்தானின் ஆவிதான்.
 
தாவீதை வேடடையாட சவுல் பின் தொடர்ந்தாலும் சவுலுக்கும் இருந்த அந்த பொல்லாத ஆவியே அவனை அவ்வாறு செய்ய தூண்டியது. எனவே நாம் சவுலை சத்துருவாக எண்ணாமல் அவ்னக்குள் இருந்து செய்லபடட அந்த பொல்லாத ஆவியையே சத்துருவாக தீர்மானிக்க வேண்டும். மாம்சம் ரத்தத்தோடு நமக்கு போராடடம் இல்லை.
 
எனவே சத்துரு என்று தாவீது சொல்வது ஆவிக்குரிய பார்வையில் 
பார்த்தால்அ வனுக்கு எதிரியாக செயல்படும் சாத்தனையே என்று நான் கருதுகிறேன். 
 
Debora wrote:
////தாவீது பாவம் செய்த பின்னர் அவரின் நிலை இப்படியாக இருந்ததா? அல்லது எப்படி?/// 
 
சங்கீதமானது காலங்களின் ஆர்டர் படி எழுதப்படாமல் மாரி மாறி எழுதப்பட்டிருப்பதால் எது எப்போது சொல்லப்பட்ட்து என்பதை தீர்க்கமாக சொல்ல முடியாது. 
 
ஆகினும் தாவீது பாவம் செய்யும் முன்னர் அவரின் நடப்படிகளை ஆராய்ந்து பார்த்தால், அப்பொழுதும் கூட அவர் சவுலுக்கு பயந்து தேசாந்தரியாக ஓடிக்கொண்டு தான் இருந்தார். சவுல் அவரை ஓரூ தெள்ளு பூச்சைபோல வேடடையாடினார் என்று வேதம் சொல்கிறது .அப்பொழுதும் அவர் தேவனை நோக்கி பலமுறை புலம்பியிருக்கலாம்.  
 
பாவம் செய்த பிறகு மகன் அப்சலோமுக்கு பயந்து நாடடைவிட்டு ஓடும்போதும் அவன் தேவனிடம் புலம்பியிருக்கலாம்.
 
தாவீதை பொறுத்தவரை அவர் கர்த்தரை எப்பொழுதும் தேடுபவனாக அவரோடு பேசுபவனாக இருந்தால் எனவே அவன் எப்பொழுதும் தேவனிடம் புலம்பியிருக்க வாய்ப்புண்டு.
 
ஆனால் தேவனை அறிந்த ஒருவர்  பாவம்  செய்வதற்கு  முன்னர் வரும் தண்டனைக்கும் அறிந்த பின்னர் செய்த பாவத்துக்கு வரும் தண்டனைக்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு.
 
பாவம் செய்யும் முன்னர் அவன் அலைக்கழிக்க படடாலும் சவுலின் கையில் அவனை ஒப்புக்கொடுக்காமல் அவனுக்கு அனுசரணையாக இருந்து,  சவுல் தாவீதின் கையில் மாட்டும்படி தேவன் இடையில் செயல்படடார். வர வர அவன் மஹா பெரியவனானான்.
 
ஆனால் பாவம் செய்த பின்னரோ!
 
பிறந்த குழந்தை கர்த்தரால் அடிக்கப்பட்டு இறந்துபோனது. (அவன்  சாக வேண்டும் அதற்க்கு பதிலாக அந்த குழந்தையை  செத்தது.) 
 
அவன்  சொந்த மகன் அப்சலோமே அவனுக்கு சத்துருவானான் அவனுக்கு பயந்து தனக்கு சொந்தமான நாட்டை விட்டு ஓடினான்.
 
மகன்களுக்கும் பிரச்சனை வந்து அம்னோன் அடித்து கொல்லப்பட்டான்.  
 
செத்த நாயை போல இருந்த சீமேயி அவனை தூஷித்தான் 
 
அவன் மறுமனையாட்டிகள் அவன் மகனாகிய அப்சலோமேலே கெடு  க்கப்படடார்கள்.
 
எல்லாவற்றிக்கும் மேலாக கொள்ளை நோய் மூலம் அநேக ஜனங்கள் மடிந்தார்கள்.
 
இப்படி அவன் பாவம் செய்த பிறகு அவன் சந்தித்த கொடிதான் பிரச்சனைகள் ஏராளம். எனவே அநேக புலம்பல்கள் அவன் பாவம் செய்தபிறகு நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.. 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
தாவீதின் எந்த நிலையில் தேவனின் பதில் தாமதிக்கிறது?
Permalink  
 


நன்றி அண்ணா 

சிறந்த விளக்கம் 


//////////////ஆனால் தேவனை அறிந்த ஒருவர் பாவம் செய்வதற்கு முன்னர் வரும் தண்டனைக்கும் அறிந்த பின்னர் செய்த பாவத்துக்கு வரும் தண்டனைக்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு./////////////////

பாவம் செய்ய முன் தண்டனையா? அது ஏன்?

 

யோவான் 9:31 பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்;

 

ஒருவன் தன் பாவத்தை அறிக்கை செய்த பின்பும் அவன் பாவியாக கருதப்படுவானா? 

 

உண்மையாய் மனம்திரும்பி மன்னிப்பு கேட்டால் தேவன் மன்னிப்பார் அல்லவா... 

 

துன்மார்க்கன் தன் வழியில் சாவது எனக்கு பிரியமோ? என்று தேவன் கேட்கிறார் அல்லவா? அப்படியாயின் அவன் மனம் திரும்பி மன்னிப்பு கேட்டதன் பின்பும் தேவன் அவனுக்கு செவி கொடுப்பது இல்லையா? தயவு செய்து விளக்கவும்.. 

 

பாவம் செய்த ஒருவனை தேவன் கட்டாயம்   தண்டிப்பாரா? தண்டிப்பதை  அவர் செய்யாமலும் விட வாய்ப்புண்டா? அவன் மேல் வைத்த இரக்கத்தின் நிமித்தம். 

 



-- Edited by Debora on Saturday 2nd of December 2017 11:51:45 AM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

Answer pls

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: தாவீதின் எந்த நிலையில் தேவனின் பதில் தாமதிக்கிறது?
Permalink  
 


////ஒருவன் தன் பாவத்தை அறிக்கை செய்த பின்பும் அவன் பாவியாக கருதப்படுவானா? 

 உண்மையாய் மனம்திரும்பி மன்னிப்பு கேட்டால் தேவன் மன்னிப்பார் அல்லவா... ///

பாவத்தை அறிக்கை செய்து விடடபின்னர் அவன் பாவியாக கருதப்படுவது இல்லை. தேவன் நிச்சயம் மன்னிப்பார். 

மன்னிப்பு என்பது இரண்டு நிலையில் பார்க்கப்படும் ஓன்று ஆத்தும மன்னிப்பு இன்னொன்று சரீர மன்னிப்பு. ஆத்தும மன்னிப்பு என்பது நிச்சயம் உண்டு எனவே எந்த பாவமும் மன்னிக்கபடப்பின் அது நமது நித்திய வாழ்வை பாதிக்காது.  

ஆனால் செய்த பாவத்தால் சரீரத்தில் உண்டாகும் பாதிப்பு என்று ஓன்று இருக்கிறதல்லவா?  அது சரிகட்டப்படும்வரை அதற்கான தண்டனைக்கு அவன் பாத்திரவானாக இருக்கிறான். உதாரணமாக ஒருவன் இன்னொருவனை கொலை செய்துவிடடான் 

என்று வைத்துக்கொள்வோம் கொலை செய்தவன் திருந்தி மன்னிப்பை பெற்றுவிடடாலும் கொலை மாணவனின் மனைவி பிள்ளைகள் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாக இருக்கும் அவர்கள் படும் அவஸ்தைகள்  கொலை செய்தவனை பாதிக்கவே செய்யும் 

நாம் தேவனிடம் மன்னிப்பு கேட்டு மனம் திருப்பினாலும் அந்த பாவத்தால் பாதிக்கப்படடவர்கள் தேவனால் சரிகட்டிடப்படும்வரை அது செய்தவனை பாதிக்கவே செய்யும். 

நீதிமொழிகள் 11:31 இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.

நீதிமானுக்கு அவன் தேவ மன்னிப்பை பெற்றாலும் செய்த பாவத்துக்குக்கான தண்டணை மாடடாகவேனும் பூமியில் சரிகாடடபடும்.  

////பாவம் செய்த ஒருவனை தேவன் கட்டாயம்  தண்டிப்பாரா? தண்டிப்பதை  அவர் செய்யாமலும் விட வாய்ப்புண்டா? அவன் மேல் வைத்த இரக்கத்தின் நிமித்தம்.//

 
இந்த கேள்விக்கான பதிலை தேவனால் இருதயத்துக்கு ஏற்றவன் என்று சொல்லப்படட தாவீதின் வாழ்வில் நடந்த காரியங்களை வைத்தே ஆராயலாம்.
 
நாத்தான் வந்து தாவீதிடம் பாவத்தை உணர்த்தியபோது அவன் மறுப்பு ஏதும் சொல்லாமல் உடனே மன்னிப்பு கேடகிறான். தேவனும் அவன் பாவத்தை நீக்கிப்போடுகிறார்.
 
II சாமுவேல் 12:13 அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்குகர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்
 
அவன் சாகாத படிக்குதான் பாவத்தை நீக்கி போடடார் அதற்க்கு எந்த தண்டனையும் கொடுக்காமல் அவனை அப்படியே விட்டுவிடவில்லை என்பதை அறியவேண்டும். 
 
தாவீதுக்கு பிறந்த பிள்ளை இறந்தது பின்னர் மகனுக்கு பயந்து நாடடைவிட்டு அழுதுகொண்டு ஓடிப்போனது எல்லாமே அந்த பாவத்தினிமித்தம் வந்த தண்டனையே.
 
அதேபோல் நாம் மன்னிப்பை பெறும்போது நாம் நித்திய ஜீவனை இழந்துபோகாதபடி இயேசு நம் பாவத்தை மன்னிக்கிறார் ஆனால் சரீரப்பிரகாரமாக சில தண்டனைகளை நாம் அனுபவித்தே ஆகவேண்டும். எனவேதான் இயேசு "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு" என்று சொல்லியிருக்கிறார். அந்த உபத்திரவம் எல்லாமே பாவத்தினிமித்தம் வருவதுதான்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
தாவீதின் எந்த நிலையில் தேவனின் பதில் தாமதிக்கிறது?
Permalink  
 


சிறந்த விளக்கம் அண்ணா
ரொம்ப நன்றி

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard