தீர்க்க தரிசனங்கள் நடைபெறாமல் இருக்க வாய்ப்பு உண்டா?
தீர்க்க தரிசனங்கள் நடைபெறாமல் போக காரணம் என்ன?
வேதத்தில் அவ்வாறான சந்தர்ப்பங்கள் இருந்தால் விளக்கவும்....
எரேமியா 18:9கட்டுவேன், நாட்டுவேன் என்றும், ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு.10. அவர்கள் என் சத்தத்தைக்கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம் மாறுவேன்.
இந்த வசனம் தங்கள் கேள்விக்கு சரியான பதிலை சொல்கிறது.
தேவனே ஏலி வீடடையாரை பார்த்து அவ்வாறு தான் சொன்ன தீர்க்க தரிசனம் குறித்து மாற்றி சொல்லும் வசனம் இதொ.
I சாமுவேல் 2:30ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் தம்மை தேர்ந்தெடுத்துவிடடார் என்று சொல்லி இறுமாப்பாக இருக்க முடியாது. சவுலை கர்த்தரே தேர்ந்தெடுத்தார் ஆனால் அவரே அவனை தள்ளினார்.
எனவே எந்த தீர்க்க தரிசனமாக இருந்தாலும் அது subject to என்ற கண்டிஷனுக்கு உடபடத்தே. நமது நடக்கையை வைத்து அது தேவனால் எந்நேரமும் மாற்றப்படலாம்.
-- Edited by SUNDAR on Monday 4th of December 2017 06:33:56 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)