நீங்கள் தேவன் சொல்லும் "விசுவாசம்" எப்படி பட்ட்து என்று அறியாமல் சொல்கிறீர்கள் என்று கருதுகிறேன்
தேவன் எதிர்பார்க்கும் விசுவாசம் எப்படி இருக்க வேண்டும் என்று இயேசு சொல்கிறார் பாருங்கள்:
மத்தேயு 17:20கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இப்படியொரு விசுவாசத்தை நாம் என்னதான் முயன்றாலும் உருவாக்கிவிட முடியாது
எபிரெயர் 12:1விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி
நம்முடைய விசுவாசம் எல்லாம் விசுவாசமே அல்ல. தேவன் எதிர்பார்க்கும் விசுவாசத்தை அவரால் மட்டுமே தொடங்க முடியும் முடிக்க முடியும்.
சில வருடங்களுக்கு முன்னர் நானும் என்னுடைய இந்து நண்பர் ஒருவரும் மும்பையில் ரயில் தண்டவாளத்தில் நின்று ஆண்டவர் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். நான் சொல்வதை அவன் ஏற்கவே இல்லை அப்பொழுது எதிர் தண்டவாளத்தில் ஒரு ரயில் வந்தது நான் என் நண்பனை பார்த்து சொன்னேன் நான் ரயில் வரும் அந்த தண்டவாளத்தில் போய் நின்று ரயிலை கைகாட்டி நிறுத்துகிறேன் அந்த ரயில் என் பக்கத்தில் வந்ததும் நின்றுவிடும் எப்பொழுதாவது நீ இயேசுவை ஏற்பாயா எனக் கேட்ட்டேன். அந்நேரம் எனக்குழு அப்படியொரு விசுவாசம் வந்தது அந்த ரயிலால் என்னை தாண்டி போகவே முடியாது அது நிச்சயம் நிற்கும் என்றோரு அசைக்க முடியாத விசுவாசம். அவனோ பயந்து என்னை பிடித்து போகவிடடாமல் தடுத்துவிட்ட்ன ஆனால் நான் போய் நின்றாள் அந்த ரயில் நிச்சயம் நிற்கும் அதனால் என்னை ஒன்றும் செய்யவே முடியாது.
அப்படியொரு விசுவாசத்தை தேவன் மாத்திரமே உருவாக்க முடியும்.
அப்படியொரு விசுவாசத்தை நான் மீண்டும் பார்த்ததும் கிடையாது.
நம்முடையை விசுவாசம் வீணாக போவதற்கு பல காரணங்கள் உள்ளது.
1. கிரியை இல்லாத விசுவாசம் செத்தது
2. தேவ சித்தமில்லாத காரியங்களை விசுவாசத்தால் அது நடக்காது
3. பரிசுத்தமில்லாமல் என்னதான் விசுவாசித்தலும் அது நடக்காது
4. கீழ்ப்படிதல் இல்லாமல் விசுவாசித்தால் பயனிருக்காது
5. ஒருவர் இத்தனை காலம் பாடு அனுபவிக்க வேண்டும் என்று தேவன்
நியமித்திருக்க நம் சொந்த விசுவாசத்தை அங்கு பயன்படுத்தினால்
ஒன்றும் நடக்காது.
நம் விசுவாசம் தேவ சித்தத்துக்கு ஓத்திருந்தால் நிச்சயம் நடக்கும்.
-- Edited by SUNDAR on Monday 4th of December 2017 07:15:07 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
/////////////////////////////நம்முடையை விசுவாசம் வீணாக போவதற்கு பல காரணங்கள் உள்ளது.
1. கிரியை இல்லாத விசுவாசம் செத்தது 2. தேவ சித்தமில்லாத காரியங்களை விசுவாசத்தால் அது நடக்காது 3. பரிசுத்தமில்லாமல் என்னதான் விசுவாசித்தலும் அது நடக்காது 4. கீழ்ப்படிதல் இல்லாமல் விசுவாசித்தால் பயனிருக்காது 5. ஒருவர் இத்தனை காலம் பாடு அனுபவிக்க வேண்டும் என்று தேவன் நியமித்திருக்க நம் சொந்த விசுவாசத்தை அங்கு பயன்படுத்தினால் ஒன்றும் நடக்காது.
நம் விசுவாசம் தேவ சித்தத்துக்கு ஓத்திருந்தால் நிச்சயம் நடக்கும்.///////////////////////////
நீங்கள் குறிப்பிட்ட நிபந்தனைகள் யாவும் இருந்தும் சில காரியங்கள் நடக்காமல் போக வாய்ப்புண்டா?
அப்படி நடந்தால் அதட்கு காரணம் என்ன?
தேவன் எமக்கு தருகின்ற விசுவாசம் மட்டுமே அசாதாரணமான விசுவாசமாய் இருக்கும் அப்படி தானே அண்ணா.
//தேவன் எமக்கு தருகின்ற விசுவாசம் மட்டுமே அசாதாரணமான விசுவாசமாய் இருக்கும் அப்படி தானே அண்ணா.
நீங்கள் குறிப்பிட்டது போல. ///
ஆம்! மனுஷ சக்திக்கு அப்பாற்படட காரியத்தை விசுவாசித்து செய்யும் வல்லமையை தருவது தேவன் தரும் விசுவாசம் மட்டுமே.
யோசுவா போன்று சூரியனை நிற்க செய்வது தேவன் தரும் விசுவாசத்தால் மாத்திரமே முடியும்!
உலகத்தில் பிறந்த எல்லோரும் மரணித்துக்கொண்டு இருக்கு நிலைமையை நம் கண்களே பார்த்துக்கொண்டு இருக்கும்போது "அந்த மாம்ச மரணத்தை ஜெயிக்க முடியும்" என்றதொரு விசுவாசத்தை தேவனால் மட்டுமே தர முடியும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)