ஆண்டவராகிய இயேசு பல இடங்களில் சிறுபிள்ளைகளை குறித்து பேசியிருக்கிறார்.
மத்தேயு 18:2இயேசு ஒரு சிறு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து: அதை அவர்கள் நடுவே நிறுத்தி: 3. நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
4. ஆகையால் இந்தப்பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.
மேலேயுள்ள வசனங்கள், ஒருவன் சிறு பிள்ளைகள்போல ஆகாவிடடால் பரலோகம் போகமுடியாது என்பகிறது அப்படியிருக்க சிறுபிள்ளைகள் நிச்சயம் பரலோகம் போய்விடுவார்கள் என்று அறிய முடிகிறது.
இங்கும் ஆண்டவர் பரலோக ராஜ்ஜியம் சிறுபிள்ளைகளுக்குரியது என்பதுபோல் சொல்கிறார். எனவே அவர்கள் பரலோகம் போவது நிச்சயமாகிறது.
மத்தேயு 18:10இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இறுதியாக ஒவ்வொரு சிறு பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு தூதர்கள் பரலோகத்தில் பிதாவின் சமூகத்தில் தரிசிக்கிறார்கள் எனவே அந்த சிறு பிள்ளைகள் மரித்தால் உடனே அந்த தூதர்கள் அவர்களை பரலோகத்துக்கு, பரம பிதாவின் சமூகத்துக்கு கொண்டு செல்வார்கள்
எனவே நன்மை தீமை அறியாத சிறுபிள்ளைகள் மரித்தால் அவர்கள் பரலோகத்துக்கு கொண்டுபோகப்படலாம் என்பதை வசனம் மூலம் நிதானிக்கலாம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)