அப்பமும் ரசமும் நாம் எடுக்க பிரதான காரணம் கர்த்தராகிய இயேசு சொன்னது..
இந்த அப்பத்தையும் இரசத்தையும் பானம் பண்ணும் முன் பாவ அறிக்கை செய்வதுண்டு. இந்த சமயத்தில் நாம் பாவ அறிக்கை செய்து புனித அப்பத்தையும் ரசத்தையும் பானம் பண்ணும் போது நாம் புதிதாக்கப்படுகிறோமா? இதை புசித்து பானம் பண்ணின பின்பு நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதம் என்ன?

வேத ஆதாரத்துடன் பதில் தெரிந்தவர்கள் சொல்லவும்.
வசனம் சொல்வதை மாத்திரமே நான் இங்கு பதிவிட விரும்புகிறேன்.
I கொரிந்தியர் 11:25போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
I கொரிந்தியர் 11:26 ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
கர்த்தருடைய பந்தி எடுப்பதன் மூலம்:
ஆண்டவராகிய இயேசுவின் மரணத்தை நினைவு கூறுகிறோம் அவரில் அவருக்குள் நிலைத்திருக்க்கிறோம்.
அவருக்குள் நிலைத்திருப்பதே மேலாக பாக்கியம் அல்லவா! கடைசி நாளில் கர்த்தர் நம்மை எழுப்புவார் அதைவிட மேலாக எதிர்பார்க்க எதுவும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)