யோபு உத்தமன் சன்மார்க்கம் என்று தேவனே அவனை குறித்து சாட்சி கொடுக்கிறார்.
யோபு 1:8கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும்சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
இப்படிபடட ஒரு உத்தமமான மனுஷனை கர்த்தர் கொடிய சாத்தான் கையில் சோதனைக்கு ஒப்புக்கொடுக்க காரணம் என்ன?
இன்று எவனாவது ஒரு கேடு கெடடவன் வந்து உன் பிள்ளையில் உத்தமமான பிள்ளையை நான் சோதிக்க விரும்புகிறேன் அவனை அடிப்பேன் உதைப்பேன் சூடு வைப்பேன் அதிலும் அவன் உத்தமமாக இருக்கிறானா என நான் பார்க்க வேண்டும் என்று கேடடால் நாம் விடுவோமா?
சாத்தானை பற்றி வேதம் சொல்லும்போது "மோசம் போக்குகிறவன்" "சத்துரு" "பொய்யன்" "மனுஷ கொலை பாதகன்" என்றெல்லாம் சொல்கிறது. அவன் மோசமானவன் என்று தேவனுக்கு நன்றாகவே தெரியும் அப்படிபடட ஒருவன் கேடட உடன் கர்த்தர் அவனுக்கு அனுமதி கொடுக்க காரணம் என்ன?
சுருக்கமாக சொன்னால்,
மோசமான கேடுகெடட ஒருவரனுக்கு தன பிள்ளை நல்ல பிள்ளை என்று நிரூபித்து காட்டிட வேண்டிய அவசியம் என்ன?
"போடா உன்னைவிட அவன் உத்தமன் என்பது எனக்கு தெரியும், அதை உன்னைப்போல கேடுகெடட ஒருவனுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி அனுப்பிவிடலாமே!
ஆனால் கர்த்தரோ அவன் கேடட உடனே அனுமதி கொடுக்கிறார் ஏன்?
பதில்
முதல் மனுஷனாகிய ஆதாமை சாத்தான் தன் வஞ்சகத்தால் வீழ்த்தினான். அவன் சொல்லை கேட்டு தேவனின் வார்த்தையை மீறி ஆதாம் பாவம் செய்துவிட்ட்தால் அவன் சந்ததியில் வரும் எல்லா மனுஷனையும் தன தந்திரத்தால் நிச்சயம் வீழ்த்திவிடலாம் என்ற மமதையில் இருந்தான் சாத்தான்.
எனவேதான் அவன் கர்த்தரிடம் "மனுஷன் இப்படி செய்தால் உண்மை தூஷிகானோ பாரும் அப்படி செய்தால் உம்மை தூஷிகானோ பாரும்" என்று தன திடடத்தை சொல்லி கொக்கரிக்கிறான்.
ஆனால் எல்லா மனுஷனும் ஆதாம் போல் அல்ல என்றும், நீ என்ன செய்தாலும் அசைக்க முடியாத உன் எந்த தந்திரமும் ஒன்றும் செய்ய முடியாத, உன் தலையையே நசுக்கக்கூடிய மனுஷர்களும் வருவார்கள் என்பதை சாத்தானுக்கு உணர்த்தவே யோபுவை சோதிப்பதற்கு சாத்தானுக்கு அனுமதி கொடுத்தார்.
சோதித்து சோதித்து எதுவும் யோபுவிடம் பலிக்காமல் போகவே சோர்ந்து போனான் சாத்தான். அன்றே அவனுடைய அஸ்திபாரம் ஆடடம் காண ஆரம்பித்தது
கடைசியாக மனுஷ குமாரனாக வந்த ஆண்டவராகிய இயேசுவையே சோதித்து பார்த்து "அப்பாலே போ சாத்தானே" என்று விரடடபட்டு அவர் பக்கத்தில் கூட நிற்க முடியாமல் பயந்து ஓடிப்போனான். அவர் பெற்ற வெற்றி மாம்சமான யாவருக்கும் கிடைத்த வெற்றி. இன்று இயேசுவின் நாமத்தில் பேசும் மனுஷர்களை கண்டும் சாத்தான் பயப்படுகிறான்.
எனவே சத்துருவின் முடிவுக்கு முதல் புள்ளியை வைக்கவே யோபுவை சோதிக்க சாத்தானுக்கு அனுமதி வழங்கப்பட்ட்து.
-- Edited by SUNDAR on Thursday 11th of January 2018 02:09:01 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)