இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிறு வயதில் என் கையில் கிடைத்த கிறிஸ்த்தவ கைப்பிரதி! [அகலமான சாலை குறுகிய சாலை}


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
சிறு வயதில் என் கையில் கிடைத்த கிறிஸ்த்தவ கைப்பிரதி! [அகலமான சாலை குறுகிய சாலை}
Permalink  
 


நான் நான் பள்ளி பிள்ளையாக இருந்தபோது ஒரு கிறிஸ்த்தவ கைப்பிரதி என் கையில் கிடைத்தது.

அந்த கைப்பிரதியில் ஒரு படம் இருந்தது அந்த படத்தில் ஒரு பெரிய விசாலமான சாலை இருந்தது அதில் கூடடமாக ஜனங்கள் பேசிக்கொண்டே ஜாலியாக  நடந்துகொண்டு இருந்தார்கள் அந்த சாலையில் இருந்து ஒரு சிறிய சாலை பிரிந்து செல்வது போலவும் அங்கே ஒரு சிலுவை இருப்பது போலவும், அந்த சிறிய சாலையில் ஓரிருவர் மாத்திரம் நடந்து போவது போலவும் அந்த படம் இருந்தது.

இந்து குடும்பத்தில் இருந்த நான் வகுப்பு ஆசிரியர் மூலம் "ஆண்டவராகிய இயேசுவை பற்றியும் உலகம் அழிந்துவிடும் என்பது பற்றியும் பரலோகம் நரகம் பற்றியும்" ஒருசில வார்த்தைகள் கேட்டிருந்தேன். எனவே அந்த கைப்பிரதியை பார்த்ததும் எனக்கு இவ்வாறு தோன்றியது

அதாவது உலகம் அழியும் போது எல்லாமே காணாமல் போய் இப்படி இரண்டு சாலைகள் மட்டும்தான் இருக்கும் போலும் அதில் அநேகர் தெரியாமல் பெரிய சாலையில் போய் நரகத்தில் மாட்டிக்கொள்வார்கள் என்றும் விபரம் தெரிந்த சிலர் மாத்திரம் குறுகிய பாதையில் போய் கடவுளிடம் சேர்வார்கள் என்றும் நினைத்துக்கொண்டு, அப்படி ஒரு நிலை வந்தால் "நாம் எப்படியாவது  அந்த சிறிய சாலையில் திரும்பி போய்விட வேண்டும் யார் கூப்பிடடாலும் அந்த பெரிய பாதையில் போகவே கூடாது உஷாராக இருந்து எப்படியாவது தப்பித்துகொள்ள வேண்டும்" என்று நினைத்து கொண்டேன்.

ஆனால் ஆண்டவருக்குள் வந்து வேதத்தை படித்தபோதுதான் அந்த கைப்பிரதி பற்றிய உண்மை புரிந்தது.

மத்தேயு 7:13 இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

என்ற வசனத்தின் அடிப்படையில் ஒரு சிம்போலிக்ஆக அச்சிடப்பட்ட்து என்றும் நம் எண்ணம் தவறு என்றும் நாம் நினைப்பது போல இரண்டு சாலைகள் வராது, மாறாக இந்த பூமியில் ஆண்டவர் சொன்ன வார்த்தைகள்படி பிரயாசம் எடுத்து வாழும் வாழ்க்கையே குறுகிய வழி என்றும் மனம்போன போக்கில் உல்லாசமாக வாழ்வது விசாலமான வழி என்றும் அறிந்து கொண்டேன்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்,

வேதத்தில் உள்ள "முத்திரை போடுவார்கள்" என்ற வசனத்தை படித்த உடன் யாரோ சிலர் வந்து நம் கை கால்களை பிடித்து கொண்டு நெற்றியிலோ கையிலோ பெரிய ரப்பார் ஸ்டாம்பை வைத்து அடையாளம் போடுவார்கள் என்றோ அல்லது ஏதாவது சிப் கொண்டுவந்து பதித்து விடுவார்கள் என்றோ எண்ணிக்கொண்டு சிறு பிள்ளைகளுக்கு பள்ளியில் தடுப்பு ஊசி போட வரும்போது தப்பித்து ஓடி போய் ஒளிந்துகொள்வதுபோல நாமும் அந்த முத்திரையை வாங்காமல் அடம்பிடித்து ஓடிவிட வேண்டும் என்று உஷாராக எண்ணிக்கொண்டு இருந்தாலோ, இன்னும் நாம் ஆவிக்குள் தேவன் சொல்லும் அந்த வார்த்தைகளை சரியாக அறியாமல் அந்த குழந்தை நிலையில் இருந்து மாறவில்லை என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். வேறு எப்படி சொல்லி புரிய வைப்பது.

யோவான் ஆவிக்குளாகி தரிசித்த வெளிப்படுத்தின விஷேஷம் புத்தகத்தின் எந்த ஒரு காரியமும் மாம்சத்தில் நடக்காது! அவை அனைத்து ஆவிக்குரியது!

"ஆவிக்குரியத்தை ஆவிக்குரியத்தோடே சம்பந்தப்படுத்த வேண்டும்" அதை ஆவியிலேயே தரிசிக்க முடியும்! என்ற மேலான உண்மையை அறியாமல் இன்னும் வசனம் சொல்வதுபோல் "ஏழு தலை பத்து கொம்புள்ள மிருகம் சமுத்திரத்தில் இருந்து ஏறி வரும், அப்போது நாம் பைக்கை எடுத்து கொண்டு வேகமாக ஓடிவிடவேண்டும் என்று வெள்ளேந்தியாக எண்ணிக்கொண்டு இருப்பவர்களை என்ன சொல்வது?!

ஆவியில் அனலாய் விழிப்புடன் இருந்து ஆண்டவர் ஆவியில் உணர்த்துவதை அறிந்துகொள்ள எப்பொழுதும் திறந்த செவியுடன் அவருடன் ஆன்லைனில் தொடர்பில் இருப்போமாக. 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard