நாம் தங்கியிருக்கு ஒரு அறையில் உள்ள காற்றில் எத்தனையோ TV செனல்களின் படங்கள் காற்றில் மிதந்துகொண்டு இருக்கிறது அதுபோல் எத்தனையோ டெலிபோன் கால்கள் காற்றில் மிதக்கிறது எத்தனையோ வானொலி நிகழ்ச்சிகள் காற்றில் மிதந்துகொண்டு இருக்கிறது அப்படியிருந்தும் அதில் எதுவும் நம் கண்ணுக்கு தானாக தெரிவதும் இல்லை, நம் காதுகளுக்கு தானாக கேட்பதும் இல்லை.
ஆனால்
அதற்குரிய கருவியாகிய TV யோ அல்லது மொபைல் போனோ ரேடியாவோ வைத்து சரியாக TUNE பண்ணும்போது நமக்கு தேவையானதை சரியாக நாம் பார்க்க முடியும்.
அதுபோல்
தேவன் நமக்கு வைத்திருக்கும் நன்மைகள் மற்றும் தரிசனங்கள் அவருடைய வார்த்தைகள் எல்லாமே நம் அருகிலேயே எப்பொழுதும் இருக்கிறது ஆனால் நாம்தான் நம் மனதை சரியாக TUNE பண்ணி அவற்றை கேட்க்கவும் பார்க்கவும் முடியாத ஒரு நிலையில் இருக்கிறோம்.
நம் சிந்தனை யாவும் தேவனை நோக்கியே இருக்குமாயின் நிச்சயமாக அவர் சொல்லும் வார்த்தைகள் அவர் காட்டும் தரிசனங்கள் அவர் வைத்திருக்கும் நன்மைகளை நாம் நேரடியாகவே பார்க்க முடியும்!
ஒரு தண்ணீர்த் துரவு அருகிலேயே இருந்து தேவனை தேடாத காரணத்தால் ஆகாரால் பார்க்க முடியாமல் இருந்தது.
ஆதியாகமம் 21:19 தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
உருவிய படடயத்துடன் தூதன் நின்றதை கழுதையால் பார்க்க முடிந்தது ஆனால் பிலேயாமின் பொருளாசை/புகழாசை அதை பார்க்க முடியாமல் மறைத்தது
எண்ணாகமம் 22:31 அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற தூதனைக் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.
எலிசாவின் கண்களுக்கு தெரிந்த அக்கினி ரத்தமும் குதிரையும் வேலைக்காரன் கண்களுக்கு தெரியாத அளவுக்கு அவர்கள் தேவனை அறியாது இருந்தார்கள்.
II இராஜாக்கள் 6:17 அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.
எனவே அன்பானவர்களே தேவன் நமக்கு சொல்லும் வார்த்தைகளை கேட்பதற்கு எப்போதும் திறந்த செவியுடனும் தேவனுக்கேற்ற இருதயத்தோடும் இருப்போமாக.
-- Edited by SUNDAR on Tuesday 6th of February 2018 11:42:53 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)