அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,
தேவன் ஏன் யோசேப்பின் கூடாரத்தை புறக்கணித்தார்
வேத வசனத்தோடு விளக்கவும்
தேவன் ஒருவரையோ அல்லது ஒரு கோத்திரத்தையோ புறங்கணிக்க காரணம் என்ன? பல்வேறு கரணங்கள் இருந்தாலும் வசனம் இவ்வாறு சொல்கிறது
I சாமுவேல் 16:7கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
இருதயத்தை பார்க்கும் கர்த்தருக்கு எப்பிராயீம் கோத்திரத்திலோ யோசேப்பின் கூடாரத்திலோ தாவீதை போன்ற இருதயத்துக்கு ஏற்றவன் இல்லாமல் இருந்தததால் அந்த கோத்திரத்தை புறங்கணித்ததாக கூறுவதாக நான் கருதுகிறேன்
மேலும் இங்கு அவர் புறங்கணித்தேன் என்று கூறுவது அந்த கோத்திரத்தை முற்றிலும் தூர தள்ளுவதற்கு பொருள் அல்ல.
ராஜ்யபாரம் பண்ணும் ஒருவனை தெரிந்துகொள்ளுவதற்கு மாத்திரம்தான் இது பொருந்தும் என்று எண்ண தோன்றுகிறது.. காரணம் அடுத்து வரும் வசனங்கள் தாவீதை தேவன் தன ஜனங்களை மேய்ப்பதற்கு தேர்ந்தெடுப்பது பற்றி கூறுகிறது