///தேவர்கள் என்று தேவன் யாரை குறிப்பிடுகிறார்? ///
யோவான் 10:35 தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,
தேவ வசனந்த்தை பெற்றுக்கொண்ட யாருமே தேவர்கள்தான். அன்று பழைய ஏற்பட்டில் இஸ்ரவேலர்கள் மாத்திரமே வசனத்தை பெற்றிருந்தார்களா ஆனால் இன்று நம்போன்ற வேத வசனத்தை பெற்று அறிந்து கொண்டுள்ளவர்கள் எல்லோருமே தேவர்கள்தான் என்று வசனம் சொல்வதாக தெரிகிறது.
///தேவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் ஏன் மனிதனை போல செத்து போனார்கள் ? ////
செத்து போனதாக வசனம் சொல்லவில்லை சிஸ்ட்டர்.
மனுஷர்களை போல "செத்து போவீர்கள்" என்று தேவன் எச்சரிக்கிறார்
வேத வசனத்தை பெற்றவர்கள் / தேவனை அறிந்தவர்கள் கூட தேவன் எதிர்பார்க்கும் காரியங்களை சரியாக செய்யவிடடால் அவர்களும் நித்திய ஜீவனை அடைய முடியாமல் இந்த லோகத்து மனுஷர்களை போல செத்துப்போக வாய்ப்பு இருப்பதாக வசனம் சொல்கிறது
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)