ஆசாரியர்கள் / லேவியர்கள் என்ற தனிப்படட பிரிவினர் இருந்தது எல்லாம் பழைய ஏற்பட்டு காலத்தில்தான்.
அவர்கள் தேவனின் ஆலயத்துக்கடுத்த ஊழியங்களை செய்தவர்கள்.
இயேசுவின் மரணத்துக்கு பிறகு பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வந்துவிட்ட்தால் பழைய ஆசாரியர்கள் நமக்கு தேவையில்லை.
இப்போது. நித்தய பிரதான ஆசாரியர் ஆண்டவராகிய இயேசு மட்டுமே!
எபிரெயர் 4:14வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.
புதிய ஏற்ப்படடை பொறுத்தவரை பரிசுத்த ஆவியை பெற்ற ஒவ்வொருவரும் ஆசாரியர்களே.
வெளி 1:6நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும்
ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)