இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அசுத்த ஆவி என்பது எப்படி உருவானது?

வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
அசுத்த ஆவி என்பது எப்படி உருவானது?
Permalink  
 
அசுத்த ஆவி என்பது எப்படி உருவானது? 

இது எப்போது இருந்து இருக்கிறது? 

__________________

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 
Debora wrote:

அசுத்த ஆவி என்பது எப்படி உருவானது? 

இது எப்போது இருந்து இருக்கிறது? 

 இப்பொழுதுதான் மிகவும் ஆழமான ஒரு சரியான கேள்வியை கேட்டுள்ளீர்கள் சிஸ்ட்டர்.

இந்த அசுத்த ஆவிதான் தொடக்கத்தில் இருந்தே  கொல்லுதல் அழித்தல்   துன்பப்படுத்துதல்  போன்ற அனைத்து தீமைக்கும்  அடிப்படை காரணமாகும்.
 
இந்த அசுத்த ஆவியாலேயே லூசிபருக்குள் தீய எண்ணம் உருவானது மற்றபடி அவனும் தேவனால் படைக்கப்படட ஒரு கேரூப்.
 
அது எப்படி உருவானது என்று கேடடால் 
 
பரிசுத்த ஆவி எப்படி உருவானதோ அதேபோல்தான் அசுத்த ஆவியும் உருவானது.

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 
அசுத்த ஆவி இப்போது எங்கே இருக்கிறது என்றால் 
 
அது பூமியிலும் ஆகாய மண்டலங்களிலும் பொல்லாத அசுத்த சேனைகளாக இருக்கிறது  இருக்கிறது.
 
ஆனால் ஆண்டவர் சொல்கிறார் 
 
சகரியா 13:2  தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 
 
ஒருநாளில் இந்த அசுத்த ஆவியை முற்றிலும் விரட்டிவிடுவார்.  
 
__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 
சரி அண்ணா 

எந்த ஒரு விடயத்துக்கும் ஒரு எதிர்  உண்டு என்பது போல நல்லவராகிய நம் தேவனுக்கு  எதிராக ஒரு தீய சக்தி உண்டு அதுவே அசுத்த ஆவி.. 

இது சரியான புரிதலா? 

1. ஆக இந்த அசுத்த ஆவி எப்படி தேவனுடைய தூதனாகிய லுசிபருக்குள் கிரியை செய்தது?

2. சாத்தான் என்று வேதத்தில் குறிப்பிடப்படுவது இந்த அசுத்த ஆவியையா? 

யோபு 1:7

  1. கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.

3. இந்த அசுத்த ஆவியை இன்னும் விரட்டாமல் தாமதமாக்க என்ன காரணம்? 

4. இந்த அசுத்த ஆவியை அழித்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை அல்லவா. ஏன் இன்னும் அழிக்கவில்லை?

5. மற்றும் தேவ சந்நிதிக்கு வர இந்த சாத்தானால் எவ்வாறு முடிந்தது.. ? தேவனுடைய  மகிமை நிறைந்த தேவ சந்நிதிக்கு வர தீய சக்தியான இவனுக்கு எவ்வாறு முடிந்தது? 

-- Edited by Debora on Wednesday 23rd of May 2018 03:01:17 PM

__________________

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 
சிஸ்ட்டர் அசுத்த ஆவி என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல எடுத்தவுடன் விரட்டிவிடுவதற்கு.
 
அசுத்த ஆவிகளை பிரபஞ்சத்தை விட்டு விரட்டி அதை பாதாளம் என்ற குழியில் அடைப்பதற்கு தேவன் தீட்டிய திடடமும் அதன் நிறைவேறுதலுமே  பிரபஞ்சம் தோன்றியதில் இருந்து இன்றுவரை நடக்கும் அத்தனை போராடடமும்.
 
ஏறக்குறைய தேவனுக்கு சமமான வல்லமையுடைய அதற்க்கு ஞானம் ஒன்றுதான் இல்லாமல் இருந்தது.
 
ஆனால் அது என்று ஞானத்தில் சிறந்தவனாகிய லூசிபருடன்  இணைந்ததோ அன்றோடு அதற்க்கு தேவையான ஞானமும் கிடைத்து விட்டது. தேவன் சாத்தான் என்று சொல்லுவது அசுத்த ஆவியோடு இணைந்துள்ள லூசிபரைத்தான். 
 
இப்போதோ  எங்கும் எதிலும் அசுத்த ஆவியின் தாக்கம் இருக்கிறது அது யாரையும் விட்டுவைக்க வில்லை. எல்லோருமே அதற்க்கு அடிமைகள் நல்லவன் ஒருவனாகிலும் இல்லை. இருக்கவும் முடியாது.   
 
இந்த உலகத்துக்குள் வந்துவிடடாலே அசுத்த ஆவியின் பாதிப்பு நம் மீது கிரியை செய்ய ஆரம்பிக்கும்.
 
அதனால்தான் ஆண்டவராகிய இயேசு "தேவன் ஒருவரை தவிர நல்லவன் ஒருவரும் இல்லையே" என்று சொன்னார்.   
 
இன்னும் அநேக காரியங்கள் இருக்கிறது சிஸ்ட்டர். நீங்கள் இங்கு சென்னையில் இருந்தால்  ஆதிமுதல் என்ன நடந்தது என்று விளக்கமாக சொல்ல முடியும்.  இதற்குமேல்  பகிரங்கமாக எழுத முடியாது. அசுத்த ஆவிகளால் எதிர்ப்புகள் உருவாகும்.
 
தொடர்ந்து ஆண்டவரிடம் இது குறித்து விசாரியுங்கள் அவர் நிச்சயம் முழு உண்மைகளையும் வெளிப்படுத்துவார்.
 
__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 
nandi anna

ஆனால் இந்த அசுத்த ஆவி ஆரம்பத்திலே இந்த உலகில் காணப்பட்டது என்பதட்கு வேத ஆதாரம் உண்டா?

இந்த லூசிபருக்குள் அசுத்தஆவியே கிரியை செய்தது என்பதட்கும் வேத ஆதாரம் உண்டா?

__________________

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 
Debora wrote:

nandi anna

ஆனால் இந்த அசுத்த ஆவி ஆரம்பத்திலே இந்த உலகில் காணப்பட்டது என்பதட்கு வேத ஆதாரம் உண்டா?

இந்த லூசிபருக்குள் அசுத்தஆவியே கிரியை செய்தது என்பதட்கும் வேத ஆதாரம் உண்டா?

 இந்த கேள்விக்கு தேவன் எனக்கு கீழ்கண்ட வசனந்த்தை பதிலாக தந்து விளக்கினார்: 

எண்ணாகமம் 24:20  : அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவிலே முற்றிலும் நாசமடைவான் என்றான். 
 
யாத்திராகமம் 17:16 அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.

தங்களுக்கு எந்த அளவுக்கு புரியும் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை.
 
பரிசுத்த வேதாகமம் என்பது "ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்ட்டித்தார்" என்று ஆரம்பித்து  தேவன் தன்னுடைய செயல்பாடுகளை மற்றும்  நடப்படிகளையை பற்றியே முழுமையாக  எழுதி கொடுத்தது. 
 
அதில் எதிரியானவனின் செயல்பாடுகள் பற்றி  அதிக விளக்கமாக கொடுக்கப்படவில்லை.
 
நான் சொல்வதை நம்பவேண்டும் என்று நான் யாரையும் கடடாயபடுத்த்துவது இல்லை காரணம் சரியான உண்மையை தேவன் ஒருவரே விளக்க முடியும்.    
 
__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 
அமலேக்கு என்று சொல்லப்படுவது சாத்தனையா?

__________________

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 
Debora wrote:

அமலேக்கு என்று சொல்லப்படுவது சாத்தனையா?

சிஸ்ட்டர் சில நேரங்களில் நீங்கள் கேட்க்கும் கேள்விகள் ஒன்றுமே அறியாத சிறு குழந்தை கேட்பதுபோல் இருக்கிறது.

இயேசு பேதுருவை பார்த்து "அப்பாலே போ சாத்தானே" என்றார்.
 
பேதுரு சாத்தானா? 
 
அதன் உட் கருத்து என்ன? 
 
உங்களுக்கு புரிந்ததை எழுதுங்கள்.      

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 
புரிந்தது அண்ணா

பேதுருவுக்குள் சாத்தானின் யோசனை இருந்தது அதாவது சாத்தான் அவனுக்குள் கிரியை செய்தபடியால் அப்பாலே போ சாத்தானே என்று இயேசு கடிந்து கொண்டார் .

யாத்திராகமம் 17:16 அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.

அமலேக்கு என்று தேவன் இந்த இடத்தில குறிப்பிடுவது லூசிபர் என்பது எனது புரிதல் அது சரியா?

ஏனெனின் கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாய் சிந்தனை கொண்டது லூசிபர் தானே

__________________

வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 
Answer pls

 உண்மை அதுதான். அதாவது அசுத்த ஆவி யாருக்கும் புகுந்தாலும் அவன் தேவனுடைய சித்தத்துக்கு விரோதமாக செயல்படுவான். 

எனவே அமலேக்குக்குள் இருந்து சாத்தான் கர்த்தரின் சிங்காசனத்துக்கு விரோதமாக போராடியது.
 
மேலும் அசுத்த ஆவி / சாத்தான் / லூசிபர் இப்படி பல பெயர்களில் தேவனின் சத்துருக்கள் இருந்தாலும் அவர்கள் எல்லோருடைய செயல்பாடும் ஒன்றுபோலவே இருக்கும்.
 
 எனவே அசுத்த ஆவி லூசிபருக்குள் நுழைந்தாலோ அல்லது அமலேக்குக்குள் நுழைந்தாலோ அவர்கள் கர்த்தருடைய சித்தத்துக்கு எதிராக போராட ஆரம்பிப்பார்கள்.
 
எனவே அனைத்து தீமைக்கும் காரணம் இந்த அசுத்த ஆவிதான். அது வெவேறு உருவத்தில் இருக்கிறது.   

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 
 புரிந்தது அண்ணா

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard