எசேக்கியேல் 37:9 அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.
எசேக்கியேல் 37:10 எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.
கொலையுண்டவர்களின் ஆவிகள் காற்று திசை நாலிலும் சிதறி அலைவதை இவ்வசனம் கூறுகிறதே.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எப்படிப்பட்டவர்கள் இப்படி ஆவியாய் அலைய முடியும்? ஏன் இப்படி ஆகிறது? மரித்த உடனே அவர் அவர்கள் பரதீஸுக்கும் பாதாளத்துக்கும் அல்லவா போவார்கள் அப்படி இருக்கையில் எப்படிப்பட்டவர்கள் இப்டி ஆவியாய் அலைவார்கள் ? வேத ஆதாரத்துடன் பதில் தரும்படி வேண்டுகிறேன்?
மீட்க்கப்படடவர்கள் ஆவி அதை தந்த தேவனிடம் திரும்பும்!
பிரசங்கி 12:7ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும்,
மீட்க்கப்படாதவர்கள் ஆவி பூமியில் காற்று திசை நான்கிலும் சுற்றி திரியும்!
எசேக்கியேல் 37:9அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)