இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மரித்தவர்கள் ஆவியாக அலைய முடியுமா? சற்று விளக்கவும்..


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
மரித்தவர்கள் ஆவியாக அலைய முடியுமா? சற்று விளக்கவும்..
Permalink  
 


மரித்தவர்கள் ஆவியாக அலைய முடியுமா? சற்று விளக்கவும்..

 

நான் இந்நாட்களில்  நீதிமொழிகள் புத்தகத்தை தியானித்து கொண்டிக்கிருக்கிறேன் அதில் நீதி 9  ஆம் அதிகாரத்தில் 

 

13. மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.

 

14. அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம்போட்டு உட்கார்ந்து,

 

15. தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து:

 

16. எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,

 

17. மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.

 

18. ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.

 

இவ்வசனத்தில் மரித்தவர்கள் அவ்விடத்தில் என்று குறிப்பிடுவது அவள் இருக்கும் இடத்திலா? அல்லது நரக பாதாளத்திலா? 

 

தெளிவாக விளக்கவும் 

 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
RE: மரித்தவர்கள் ஆவியாக அலைய முடியுமா? சற்று விளக்கவும்..
Permalink  
 


விளக்கவும்



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
மரித்தவர்கள் ஆவியாக அலைய முடியுமா? சற்று விளக்கவும்..
Permalink  
 


கீழேயுள்ள வசனத்தை சற்று நிதானமாக படிக்கவும்.


எசேக்கியேல் 37:9 அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.


எசேக்கியேல் 37:10 எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.


கொலையுண்டவர்களின் ஆவிகள் காற்று திசை நாலிலும் சிதறி அலைவதை இவ்வசனம் கூறுகிறதே.

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

எப்படிப்பட்டவர்கள் இப்படி ஆவியாய் அலைய முடியும்? ஏன் இப்படி ஆகிறது? மரித்த உடனே அவர் அவர்கள் பரதீஸுக்கும் பாதாளத்துக்கும் அல்லவா போவார்கள் அப்படி இருக்கையில் எப்படிப்பட்டவர்கள் இப்டி ஆவியாய் அலைவார்கள் ? வேத ஆதாரத்துடன் பதில் தரும்படி வேண்டுகிறேன்?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: மரித்தவர்கள் ஆவியாக அலைய முடியுமா? சற்று விளக்கவும்..
Permalink  
 


மனுஷனானவன்  ஆவி / ஆத்துமா / சரீரம் இவற்றின் தொகுப்பு!
 
ஒருவன் மரிக்கும்போது இம்மூன்றும் தனித்தனியே பிரிக்கப்டும்! 
 
சரீரம்: 
 
மண்ணில்  இருந்து எடுக்கப்படட சரீரம் மண்ணுக்கு திரும்பும்!
 
பிரசங்கி 12:7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி(பும்)
 
ஆத்துமா! 
 
புதிய ஏற்பட்டு காலத்தில் தேவனால் மன்னிப்பு பெற்ற பரிசுத்தவான்களின் ஆத்துமா பரதீசு செல்லும்!
 
லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 
 
(அது ஒரு தற்காலிக இளைப்பாறுதல் இடம் )
 
பாவ மன்னிப்பை பெறாத எல்லா ஆத்துமாக்களும் பூமியின் கீழுள்ள பாதாளம் என்னும்  இடத்துக்கு செல்லுவார்கள். 
 
சங்கீதம் 31:17 துன்மார்க்கர் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாயிருக்கட்டும்.  
 
(இதுவும் ஒரு தற்காலிக இடமே)
 
 
ஆவி :
 
மீட்க்கப்படடவர்கள் ஆவி அதை தந்த தேவனிடம் திரும்பும்! 
 
பிரசங்கி 12:7 ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும்,  
 
 
மீட்க்கப்படாதவர்கள் ஆவி பூமியில்  காற்று திசை நான்கிலும் சுற்றி திரியும்!
 
எசேக்கியேல் 37:9 அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
மரித்தவர்கள் ஆவியாக அலைய முடியுமா? சற்று விளக்கவும்..
Permalink  
 


மீட்க்கப்படாதவர்கள் thaan alaivaarkal enru eppadi solkireerkal ?

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard