அண்ணா மயிர் கத்தரிக்க கூடாது என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளதா?
எனக்கு சரியாக தெரியாது..
அப்படி வேதத்தில் உள்ளதா? அப்படியாயின் அவ்வசனத்தை குறிப்பிட்டு மேலும் அப்படியாயின் இன்று எல்லோரும் தலை மயிர் வெட்டுகிறார்கள் அல்லவே அது தவறா? விளக்கவும்..
நசரேய விரதம் இருப்பவர்கள் மாத்திரமே தலையில் சவரகன் கத்தி படமால் இருக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது
எண்ணாகமம் 6:5 அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்றுவிரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.
தலை மயிரை கத்தரிக்கலாம் என்று வேதம் சொல்கிறது
எசேக்கியேல் 44:20 அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக்கடவர்கள்.
அதே நேரம்
தலைமயிரை சுற்றி ஒதுக்க கூடாது என்றும் தாடியின் ஓரங்களை மாத்திரம் கத்தரிக்க கூடாது என்றும் வேதம் சொல்கிறது
லேவியராகமம் 19:27 உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தாடியை கத்தரிக்கோல் வைத்து கத்தரித்து ட்ரிம் செய்ய கூடாது என்பதே.
தலை மயிரை சுற்றி கத்திவைத்து வழித்து ஒதுக்க கூடாது ஏதாவது ஒரு இடத்த்தில் வழிக்காமல் விட்டுவிடவேண்டும் என்பதே.
(முக்கியமாக இது சொல்லப்பட்ட்தான் நோக்கம் சில மதத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் சாமிக்காக சிலவிதமான தலை சிரைப்பை கைக்கொள்கின்றனர் அதை செய்யக்கூடாது என்பதற்க்கே)
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இந்த கேள்விகளை இதுவரை யாரும் என்னிடம் கேட்ட்து கிடையாது உங்களுக்கு சம்பந்தம் இல்லாது இருந்தும் ரொம்ப ஆழமாக விசாரிக்கிறீர்கள்
நான் இதை எல்லாம் ஆராய்ந்து அறிந்து கைக்கொள்வதோடு
யாத்திராகமம் 35:3 ஓய்வுநாளில் உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீர்களாக என்னும் இவ்வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி கர்த்தர் கட்டளையிட்டார் என்றான்.
என்ற வார்த்தைகள்படி எங்கள் வீட்டில் ஒய்வு நாடுகளில் நெருப்பு மூட்டுவது கூட கிடையாது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நான் கர்த்தரின் கடடளைகளுக்கு எதற்கும் காரணம் கேட்பது கிடையாது சிஸ்ட்டர்.
அவர் எனது தேவனாகிய கர்த்தர் என்பதை நான் அறியும்படிக்கு அது ஒரு அடையாளமாக நான் நினைக்கிறேன்.
எசேக்கியேல் 20:20 என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.
-- Edited by SUNDAR on Tuesday 8th of January 2019 12:21:40 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)