இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மதுபானம் குடிப்பது பாவம் இல்லையா?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
மதுபானம் குடிப்பது பாவம் இல்லையா?
Permalink  
 


நீதிமொழிகள் 31 : 6 , 7 

 

மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்;

 

அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.

 

மதுபானம் குடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதே ? அது பாவம் இல்லையா?



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

பழைய ஏற்பாட்டில் மோசேயிடம் ஆண்டவர் சொன்னது

உபாகமம் 14:26 அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.

ஆண்டவராகிய இயேசு சொன்னது:

மாற்கு 7:15 மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது;

புறம்பே இருந்து போகும் எதுவுமே மனுஷனை தீட்டு படுத்தாது.


பவுல் சொன்னது : அடுத்தவருக்கு இடறல் உண்டானால் அதை செய்யாதே

ரோமர் 14:21 மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.

அடுத்தவருக்கு இடறல் உண்டானால் அதை செய்யாதே

பிரசங்கி 10:19 விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்;


மதுபானம் பருகுவது பாவம் என்பதுபோல் சொல்லப்படவில்லை ஆனால்.

மதுவை அருந்தியவன் எவனும் பாவம் செய்யாமல் தப்புவது மிக கடினம்.

நீதிமொழிகள் 20:1 திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.

நீதிமொழிகள் 23:31 மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.
32. முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.33. உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.

ஏசாயா 5:11 சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!

அது மனுஷனை கர்த்தரைவிட்டு விலகிப்போக வைக்கும். தீய சிந்தனைகள் தீய பழக்கங்களுக்கும் கொடூரமான என்னத்துக்கு
சரீரத்தை கெடுப்பதற்கு வழி வகுக்கும்.

நீதிமொழிகள் 6:27 தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?

நடைமுறையில் மது பானத்தால் அநேக தீமைகள் இருக்கிறது.

பொதுவாக பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் போதை தரும் எந்தவிதமான பொருட்க்களை எடுப்பதில் இருந்து விலகி இருப்பதே சிறந்தது.

அது தேவ பிரசன்னத்தை இழக்க செய்வதோடு ஆவியானவரையும் துக்கப்படுத்தும். .

(இது வசனத்தின் அடிப்படையில் என் சொந்த கருத்து )




__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Thanks anna

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard