உண்மையாகவே இத்தலத்தின் மூலம் நான் அநேக காரியங்களை கற்றுக்கொள்கிறேன்.
மிகவும் மிக மிக பயனுள்ளதாய் இருக்கிறது.
நான் அறியாத தெரியாத அநேக காரியங்களை கற்றுக்கொள்ள கூடியதாய் இருக்கிறது.
இத்தலம் மூலம் இன்னும் அநேகர் பயனடைவார்களாக .
சுந்தர் அண்ணாவை ஆண்டவர் தாமே இன்னும் அதிகமாய் ஆசீர்வதித்து இன்னும் பல காரியங்களை அவர் மூலம் வெளிப்படுத்துவாராக.
என்ன வேலைப்பளு இருந்தாலும் எப்போ என்ன கேள்வி கேட்டாலும் தான் பெற்றதை யாவரும் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஆண்டவரின் பதிலை பெற்று அதை விளக்கமாக எமக்கு தருபவராக இருக்கும் உங்களை அளவில்லாமல் ஆண்டவர் ஆசீர்வதிக்க வேண்டும்.
யாருக்கு எப்படியோ ஆனால் எனக்கும் எனது ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் இந்த தளமும் சுந்தர் அண்ணாவின் பதிவுகளும் ஒரு காரணமாய் இருக்கிறது.
மிகவும் நன்றி அண்ணா.
என்னை இத்தலத்திட்க்கு கொண்டு வந்த தேவாதி தேவனுக்கும் நன்றி. இத்தலத்தை காண செய்ததட்காகவும் ஆண்டவருக்கு நன்றி.
இந்த தளத்தின் மூலம் அநேக ஆவிக்குரிய காரியங்களை அறிந்து உணர்ந்து, மிகவும் அருமையாக சாட்சியை பதிவிட கிருபை செய்த தேவனுக்கு சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக. .
சில நேரங்களில் உங்கள் கேள்விகள் எனக்கு சலிப்பை உண்டாக்கினாலும் தேவையான கருத்துக்களை பதிவிட தேவன் தாமே கிருபை செய்தார்.
உண்மைகளை அறியும்படிக்கு தேவன் உங்கள் இருதயத்தை திறந்தமைக்கு அவருக்கு சதாகாலம் ஸ்தோத்திரம்
இதற்க்கு முன் இன்னும் மூன்று சகோதரர்கள் மட்டுமே இவ்வார்த்தைகளை படித்து என்னை நேரில் சந்தித்து சுமார் 2 வருட காலமாக கலந்து ஆலோசித்து அநேக ஆவிக்குரிய உண்மைகளை அறிந்து பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.
இன்னும் அநேக காரியங்கள் ஆச்சர்யப்பட வைக்கும் உண்மைகள்
கண்கள் திறக்கப்பட்டு நான் கண்டு அனுபவித்த காரியங்களை கால நேரங்கள் போதாமையால் இங்கு எழுதவில்லை.
கர்த்தர் அனுமதிப்பாராகில் நாம் நேரில் சந்திக்க வாய்ப்பை உண்டாக்குவாராக. அவருக்கு அது பெரிய காரியம் அல்ல.
தேவனுக்கே மகிமை!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)