மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?
இவ்வசனத்தின் சரியான விளக்கம் என்ன? மிஞ்சின நீதிமானாயிருக்க கூடாது என்று ஏன் கூறப்படுகிறது?
16. மிஞ்சின நீதிமானாயிராதே,
மிஞ்சின நீதிமான் என்பது தேவனின் விருப்பம் என்னவென்பதை அறியாமல் நமது அறிவுக்கு ஏற்றபடி தேவ சித்தத்துக்கு மேலாக நம்மைப்போல் தோன்றுவதை செய்வது என்று நான் நிதானிக்கிறேன்.
இன்று உலகில் அநேக காரியங்கள் நமது பார்வைக்கு நல்லது போலவும் அப்படி செய்வதால் எந்த தவறும் யாருக்குமே ஏற்படாது போலவும் தெரியும்.
உதாரணமாக பொய் சொல்வதை எடுத்துகொள்ளுங்கள்.
உலகில் அநேகர் ஏதாவது நனமை நடப்பதாக இருந்தால் பொய் சொல்வதில் தவறு இல்லை என்று சொல்கின்றனர் திருவள்ளுவரும் "பொய்மையும் வாய்மையிடத்து" என்று அதையே சொல்கிறார்.
ஆனால் நமது ஆண்டவரோ "உள்ளதை உள்ளது என்றும் இல்லதை இல்லது என்றும் சொல்லுங்கள்" என்று சொல்கிறார்.
மத்தேயு 5:37உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
உண்மை சொல்வதால் தீமை நடக்கும்போல் ஒரு நிலை இருந்தாலும்கூட நாம் தேவனின் வார்த்தைக்கு உட்பட்டு உண்மையைத்தான் சொல்ல வேண்டும் யாரையோ காப்பாற்ற போகிறோம் என்று மிஞ்சிய நீதியில் பொய் சொல்லக்கூடாது.
இதுபோல் எந்த ஒரு காரியத்துக்கும் அளவுகோல் தேவனின் வார்த்தையே அதிமீறி நன்மைபோல் தோன்றும் ஒரு காரியத்தை செய்தால் அங்கே அது மிஞ்சிய நீதியாக எண்ணப்படுவதோடு அது அங்கீகரிக்கப்பட மாடடாது.
வேத பகுதியின்படி பார்த்தால்
ஆண்டவனாகிய இயேசு தன சிலுவை மரணத்தை பற்றி கூறும்போது பேதுரு தன சுய நீதியின்படி "அது சம்பவிக்க கூடாதே" என்று சொல்வதை எடுத்துகொள்ளலாம்.
அவ்வார்த்தை பேதுருவின் பார்வைக்கும் நமது பார்வைக்கும் கூட பெரிய நீதியானது போல் திரியும் ஆனால் அது தேவனின் பார்வைக்கு சாத்தானின் வார்த்தையாக மாறிபோனதே.
அதுபோல் தேவ வார்த்தையை அளவு கோலாக வைத்தே நம் செயல்பாடு இருக்க வேண்டும் அதற்க்கு மிஞ்சியது தீமையால் உண்டாயிருக்கும்.
உசியா ராஜா தூபம் காட்ட சென்றதையும் / சவுல் பலியிட துணிந்ததையும்கூட மிஞ்சிய நீதிமானுக்கு ஒப்பிடலாம் அதை கர்த்தர் அங்கீகரிக்கவில்லை.
இவைகள் கர்த்தருக்காக செய்யப்படடதுதான். ஆனால் அதை யார் செய்யவேண்டும் எனபதற்கு தேவ கடடளை உள்ளது அதை மீர எந்த ராஜாவுக்கும் கூட அதிகாரம் கிடையாது
எனவேதான் மிஞ்சின நீதிமான் பற்றி சொல்லும் பிரசங்கி கடைசியாக இப்படி சொல்கிறார்