இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆண்டவர் என்னோடு இருக்கார் என்பதையும் உணர முடியவில்லை. அபிஷேகத்தின் அடையாளங்கள் என்ன ?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 627
Date:
ஆண்டவர் என்னோடு இருக்கார் என்பதையும் உணர முடியவில்லை. அபிஷேகத்தின் அடையாளங்கள் என்ன ?
Permalink  
 


அண்ணா எனக்கு ஆவியில் நிறைந்து ஜெபிக்க அதிக விருப்பம் மேலும் ஆண்டவரின் பிரசன்னத்தை நான் உணருவதுண்டு .. ஆனால் ஆவியின் வரத்தை பெற்றுக்கொள்ள முடிவதில்லை. சில நேரங்களில் ஆண்டவரின் பிரசன்னத்தை உணர முடிவதும் இல்லை, இதனால் நான் சோர்ந்து போவதுண்டு.. 

 

இதட்கு காரணம் என்ன? அபிஷேகத்தை பெற்று கொள்ளவும் முடிவதில்லை.. எனக்கு விளங்கவில்லையா அல்லது உணர முடியவில்லையா? இல்லாவிடின் நான் இன்னும் பெற்று கொள்ள வில்லையா என்று குழப்பமாக உள்ளது. 

ஆண்டவர் என்னோடு இருக்கார் என்பதையும் உணர முடியவில்லை. அபிஷேகத்தின் அடையாளங்கள் என்ன ? சற்று விளக்கவும்.

 

பதில் தரவும்.

 



-- Edited by SUNDAR on Thursday 27th of September 2018 12:09:50 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
ஆண்டவர் பிரசன்னத்தை அறியவேண்டுமா?
Permalink  
 


அன்பான சகோதரிக்கு, ஆண்டவர் உங்களுக்குள் இருந்து செயல்படுகிறார் இனத்தை என்னால் அறிய முடிகிறது. ஆகினும் நீங்களே அந்த உண்மையை அனுபவ பூர்வமாக அறிந்துகொள்ள ஒரு சுலபமான வழி சொல்கிறேன் முயன்று பார்த்து முடிவை சொல்லுங்கள்.
 
அநேக அலுவல்களால் அலைபாயும் மனமே ஆண்டவர்  செயல்பாடடை  நாம் அறியமுடியாமல் தடுத்து நிற்கும் பெரும் சுவர். நமது பிரச்சனைகளே நாலு புறமும் நெருக் ம்போது தேவன் பேசுவதை கேட்பது நமக்கு கூடாத ஒரு செயலாய் இருக்கிறது எனவே தேவனை உணர்வதற்கு ஒருமணப்பாடு என்பது மிகவும் அவசியம்.  
 
தனிமையான இடம் அமைதியான நேரம்  ஒன்றை செலக்ட் பண்ணிக்கொள்ளுங்கள்.
 
இப்பொழுது ஆண்டவர் நமக்குள்  இருந்து செயல்படுவதை அறிவது ஒன்றே நமது நோக்கமாக இருக்கட்டும்.
 
தரையில் சம்பளம் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடிக்கொள்ளுங்கள்  
 
வாயினால் நிதானமாக  சொல்லவேண்டிய வார்த்தை  :  
 
"தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் அவர்க்கு மகிமை உண்டாவதாக"
 
இந்த வார்த்தை வாயில் முடியும்முன்னே தொடர்ந்து மனதுக்குள் சொல்லவேண்டிய வார்த்தை 
 
"ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்"
 
ரொம்ப கவனமாக தொடர்ந்து ஒரு 5 நிமிடம் சொன்னால் போதும் நம் வெளி எண்ணங்கள் எல்லாம் மறந்துவிடும் 
 
அப்பொழுதே லேசாக தேவ பிரசன்னம் ஆட்க்கொள்வதை உணரமுடியும். 
 
தொடர்ந்து  நாம் உள் மன நிலைக்கு கடந்து போய்விடலாம்.
 
மனதில் இரண்டு நிலை உண்டு  "வெளிப்புற அல்லது மேலான மனது அடுத்து ஆள் மனது"
 
இப்பொழுது நாம் வாயால் சொல்லும் அந்த வார்த்தையை நிறுத்திவிட்டு 
 
மேல் மனதில்  "தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் அவர்க்கு மகிமை உண்டாவதாக" என்று சொல்லிவிட்டு அது முடியும் 
நேரத்தில் உள் மனதில்  "ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்" என்று சொல்ல வேண்டும் 
 
சிறிது நேரத்தில் கர்த்தரின் வல்லமை அபிஷேகமாக உற்றப்படுவதை அறிய முடியும். அந்நிய பாஷை அளவில்லாமல் புறப்பட்டு வரும். ஆண்டவர் நம்முள் இருந்து செயல்படுகிறார் என்பதை அனுபவ பூர்வமாக அறிந்து கொள்ளலாம்.
 
முதல் முறையாக முயற்சிப்பவர்களுக்கு ஆள் மனதுக்குள் கடந்து செல்ல கொஞ்சம் அதிக நேரம் எடுக்கலாம். முயன்று பாருங்கள் இன்னும் பல வழிகள் இருக்கிறது சொல்கிறேன். 
 
 
எரேமியா 13:16 அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும் நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குமகிமையைச் செலுத்துங்கள். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  
  

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 627
Date:
ஆண்டவர் என்னோடு இருக்கார் என்பதையும் உணர முடியவில்லை. அபிஷேகத்தின் அடையாளங்கள் என்ன ?
Permalink  
 


Ok anna thank u ..

__________________


புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
Permalink  
 

அபிஷேகம் என்றால் என்ன? விளக்கவும். நான் கிறிஸ்தவள் தான். ஆனாலும் இதைப்பற்றிய சரியான புரிதல் இல்லை.


// முதல் முறையாக முயற்சிப்பவர்களுக்கு ஆள் மனதுக்குள் கடந்து செல்ல கொஞ்சம் அதிக நேரம் எடுக்கலாம். முயன்று பாருங்கள் இன்னும் பல வழிகள் இருக்கிறது சொல்கிறேன்.// அந்த வழிகளைக் கூறினால் எனக்கு மிக்க பயனுள்ளதாயிருக்கும்.

அன்புடன்
ஜெயா

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

JayaVincent wrote:

அபிஷேகம் என்றால் என்ன? விளக்கவும். நான் கிறிஸ்தவள் தான். ஆனாலும் இதைப்பற்றிய சரியான புரிதல் இல்லை.


// முதல் முறையாக முயற்சிப்பவர்களுக்கு ஆள் மனதுக்குள் கடந்து செல்ல கொஞ்சம் அதிக நேரம் எடுக்கலாம். முயன்று பாருங்கள் இன்னும் பல வழிகள் இருக்கிறது சொல்கிறேன்.// அந்த வழிகளைக் கூறினால் எனக்கு மிக்க பயனுள்ளதாயிருக்கும்.

அன்புடன்
ஜெயா


 அன்பான சகோதரிக்கு கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

கீழ் தரப்படட திரிகளை சற்று வாசியுங்கள் பின்னர் உங்கள் கேழ்விகளை தரவும்

பரிசுத்தாவியைபெற வேதாகமம் காட்டும் வழிகள்! (Preview)

பரிசுத்தாவியைபெற வேதாகமம் காட்டும் வழிகள்!

 

 பரிசுத்தாவியைபெற வேதாகமம் காட்டும் வழிகள்! (Preview)

No New Postsபரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்றால் என்ன? (Preview)


-- Edited by SUNDAR on Tuesday 9th of May 2023 07:46:18 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard