இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவன் ஏன் மனுஷரை தூரமாக விலக்குகிறார்?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தேவன் ஏன் மனுஷரை தூரமாக விலக்குகிறார்?
Permalink  
 


கீழ் கூறப்பட்ட வசனங்களில் தேவன் ஏன் இப்படி செய்கிறார்? ஏன் அவர்களை உணராமல் இருங்கள் என்று சொல்ல சொல்கிறார் ? ஏன் மனுஷரை தூரமாக விலக்குகிறார்? இந்த சூழ்நிலை எப்படிப்பட்டது? விரிவாக விளக்கவும்.
 
ஏசாயா 6 : 
 
9. அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி: நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.
 
10. இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தில் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
 
11. அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி,
 
12. கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் அசைக்கப்படும்வரைக்குமே.
 
13. ஆகிலும் அதில் இன்னும் பத்திலொரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளின் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரமும் பரிசுத்த வித்தாயிருக்கும் என்றார்.  இதை விளக்கவும்.


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

சிஸ்ட்டர்  மிக முக்கியமான யாரும் சடடென்று யோசிக்க கூட முடியாத இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள். மிக ஆழமான கேள்வி பதில் புரிவது கடினம். 

 
நான் சுருக்கமாக பதில் தருகிறேன் 
 
மனுஷனுடைய இருதயம் / கண்கள் / செவிகள் எல்லாமே தேவனால் அடைக்கப்பட்டுளள்து என்பதை மேலேயுள்ள வசனம் சொல்கிறது.
 
இவ்வாறு அடைக்கப்பட்டு இருப்பதன் மூலம் நாம் சரியானதை காணமுடியாது   கேட்க்க முடியாது அதேபோல் காணும் காட்சிகளின் கேட்க்கும் வார்த்தைகளின்  சரியான பொருளை உணர முடியாத ஒரு நிலையில் இருக்கிறோம்.
 
ஆகாருக்கு தேவையான நீர்நிலை அவளுக்கு பக்கத்தில் இருந்தும் அவளால் காண முடியாத ஒரு நிலை இருந்தது அவளுடைய அடைத்திருந்த கண்களை தேவன் திறந்த போதோ அவளுக்கு தேவையான நீர்நிலை அருகில் இருப்பதாய் அறிந்தாள்.
 
 ஆதியாகமம் 21:19 தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
 
அதேபோல் உருவிய படடயத்துடன் கர்த்தரின் தூதன் இருப்பதை பிலேயாமின் அடைபடட கண்களால் காண முடியவில்லை கர்த்தர்  கண்களை திறந்தபோது 
 
எண்ணாகமம் 22:31 அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற தூதனைக் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.  
 
 
தேவன் ஏன் இப்படி செய்தார்? செய்கிறார்? 
 
இப்படி எதுவுமே புரியாத நிலையில் செய்திவிட்டு நம்மை நோக்கி உண்மையை அறிந்துகொள் என்று சொன்னால் எப்படி நம்மால் சரியான உண்மையை அறிய முடியும் என்று பல கேள்விகள் எனக்கும் எழுந்தது.
 
ஆனால் இப்படி அடைக்கப்பட்டு இருப்பதால் சில தீமைகள் இருந்தாலும் பல நன்மைகள் நமக்கு இருக்கிறது.
 
மிக முக்கியமாக சத்துருவானவன் தேவன் உருவாக்கியுள்ள பரலோக வழியை கண்டடைய  கூடாது என்பதற்காக மனுஷ இதயம் அடைபட்டுள்ளது. மனுஷனுக்கு சுலபமாக தெரிபவைகள் எல்லாம், அவனுள் வந்துபோகும் சத்துருவுக்கும் சுலபமாக தெரிந்துவிடும்.  எனவே மிக மிக பரிசுத்தம் அடையும்போது மட்டும்தான் நம் இருதயம் தேவனால் திறக்கப்பட்டு தேவன் நியமித்துள்ள சில முக்கியமான காரியங்களை காணமுடியும் மற்றெல்லோராலும் காண முடியாது 
 
அடுத்து இந்த உலகமானது கடந்த ஆயிரமாயிரம் ஆண்டுகளில் கேடுகெட்டு புகையும் துர்வாசமும் கெடும் கபடமும் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. 
 
நம் இருதயமும் கண்களும் திறக்கப்படடாள் இந்த பிசாசு கூட்ட்ங்களுடன் நாம் சகஜமாக பழகவோ வாழவோ முடியாது. இந்த உலகத்தின் துர் நாற்றத்தை சகிக்ககோ அல்லது ஒருவர் செய்த நம்பிக்கை துரோகத்தை மறக்கவோ முடியவே முடியாது.  ஆனால் தேவன் இருதயத்தை அடைத்து வைத்திருப்பதன் மூலம் நாம் எந்த பெரிய சோதனை வேதனைகளையம் எவ்வளவு பெரிய இழப்பையும் சீக்கிரம் மறந்து அதில் இருந்து வெளியே வந்துவிடுகிறோம் 
 
இன்னும் பல காரியங்களினிமித்தம் கர்த்தர் நம் இருதயம் செவி கண்களை மூடி போட்டுள்ளார் அவர் நினைத்தால் மாத்திரமே அவைகளை திறந்து உண்மை நிலையை நமக்கு காட்டிட முடியும்.


-- Edited by SUNDAR on Monday 15th of October 2018 04:52:12 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 


நம் கண்கள் திறக்கப்படடாள் உலகத்தில் உள்ள 99% மனுஷர்கள் பிசாசின் ஆவியால் பீடிக்கப்பட்டு இருப்பதை அப்படியே நம் கண்கல்லால் காண முடியும்.

இப்படி மனுஷர்கள் எல்லோரும் பிசாசின் ஆவியால் பீடிக்கப்பட்டு இருந்ததால் தேவன் பழைய ஏற்பாட்டு காலத்தில் மனுஷனிடம் அதிகம் நெருங்க முடியாமல் தூர விலக்கினார்

சில தேர்ந்தெடுக்கப்படட தேவ தாசர்களுடன் மட்டுமே அந்நாடகளில் பேசினார்

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard