மனு புத்திரர்களாகிய நாம் இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு நாளும் அநேக ஜனங்களை சந்திக்க நேர்கிறது.
சிலரை அன்போடு சந்திக்கிறோம் சிலரை அனுதாபத்தோடு சந்திக்கிறோம் / சிலரை விரும்பி சந்திக்கிறோம் சிலரை வேண்டா வெறுப்பாக சந்திக்கிறோம் / சிலரை தேடி சந்திக்கிறோம் சிலரை தேடாமல் சந்திக்கிறோம் / சிலரை ஆதாயத்துக்காக சந்திக்கிறோம் சிலருக்கு ஆதாயம் செய்ய சந்திக்கிறோம் / சிலரை தினம்தோறும் சந்திக்கிறோம் சிலரை தினங்கள் பல சென்று சந்திக்கிறோம் / சிலரை சந்திக்க நினைத்தும் முடிவதில்லை சிலரையோ சந்தித்தே ஆகவேண்டும் என்ற காடடயத்தில் சந்திக்கிறோம்.
இவர்கள் எல்லாம் யார்? இவரைகளை ஏன் நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது? என்று கர்த்தருக்குள் ஆராய்ந்த போது .....
நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் டைரக்ட்டர் ஒருவர் என்னை எப்படியாவது வேலையை விட்டு அனுப்பிவிட குறியாய் இருந்தார் அவருடன் எவ்வளவோ சமாதானமாக போக நினைத்தாலும் அவருக்கு நான் அங்கு இருப்பது பிடிக்கவே இல்லை. ஆனால் இன்னொரு டைரக்ட்டர் என்மேல் மிகவும் மதிப்புள்ளவராக இருந்ததால் அவரால் என்னை உடனடியாக அனுப்ப முடியாமல் இருந்தது ஆகினும் பலவாறு முயற்சசி செய்து கொண்டே இருந்த அவர் திடீர் என்று தனது முதலாளி பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய்விடடார்.
எனக்கே மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. நான் ஆண்டவரிடம் அவரை பற்றி ஏதும் பிராது பண்ணவேயில்லை காரணம் அவர் மிகவும் நல்லவர் மிகவும் நேர்மையான ஒரு இந்து சகோதரர். அப்படியிருந்தும் ஒரு சாதாரண வேலைக்காரனாகிய என்னை அனுப்ப முடியாமல் "கம்பனி ஓனர்".அவர் போனதற்கான காரணமா என்ன ? என்று ஆண்டவரிடம் விசாரித்தபோது நான் அறிந்துகொண்ட உண்மை இதுதான்...
இந்த உலகம் ஒரு ஒடடபந்தய சாலை. இங்கு வரும் எல்லோருமே ஒடடபந்தய வீரர்கள்.
ஓடுவதற்கான விதி முறைகள் எதுவென்றால் வானத்தில் நிலைநிற்கும் "தேவனுடைய வசனங்களே".
நல்லவன் நல்லவனோடே சேர்ந்து நாளெல்லாம் ஓடுவான் துன்மார்க்கன் துன்மாக்கனோடு சேர்ந்தே துரோகம் செய்ய ஓடுவான். பரியாசக்காரன் பரியாசக்காரனோடு சேர்ந்து பாதாளம் நோக்கி ஓடுவார்கள் பரிசுத்தவனாகள் பரிசுத்தவான்களோடு சேர்ந்து பரலோகத்தை நோக்கி ஓடுவார்கள். ரௌடிகள் ரௌடிகளோடு சேர்த்து ரகசியமாக ஓடுவார்கள். ரட்சிப்பை பெற்றவர்களோ ரத்த சாட்சிகளாக மரிக்கவும் தயங்காமல் ஓடுவார்கள்.
நம் பக்கத்தில் நம்மோடு ஓடுபவர்கள் எல்லாம் பரிசுத்தத்தில் நம் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடுபவர்கள்.
சுருக்கமாக சொன்னால்.
நாம் அன்றாடம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் நமக்கு இணையாக பந்தய சாலையில் ஓடிக்கொண்டு இருக்கும் நம்மை போன்றவர்கள்.
நாம் எவ்வளவு அதிகமாக ஒருவரை அடிக்கடி சந்திக்கிறோமோ அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய நல்ல விஷயம் அநேகம் இருக்கிறது என்றும் எவர்களை நாம் ஓரிரு நேரங்களில் சந்திக்கொறோமோ அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விஷயம் ஒன்றிரண்டு இருக்கிறது என்பதுதான் உண்மையான காரியம்.
யாரும் யாரையும் காரணம் இல்லாமல் சந்திப்பதும் இல்லை. யாரும் எவர் முன்னும் காரணம் இல்லாமல் வருவதற்கு தேவன் ஒருபோதும் அனுமதிப்பதும் இல்லை. தேவன் அனுமதித்த ஒருவரை விட்டு நாம் விலகிப்போக முடிவதும் இல்லை. ஒருவேளை நாம் நம் சுய பெலத்தால் விலகி போனாலும் அதே ஆவி வேறு ஒரு இடத்தில் வேறு ஒருவர் மூலம் உங்களை சந்திக்க காத்திருக்கும்.
எனவே அன்பானவர்களே நாம் அன்றாடம் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் எதோ ஒரு விதத்தில் நம்மைவிட மேலானவர்கள் என்ற உண்மையை அறிந்துகொள்வது அவசியம்.
எந்த ஒரு மனுஷனையும் ஜெயிப்பது என்பது வேத வசனத்தின் அடிப்படையில் தாழ்மை மற்றும் கீழ்படிதலால் மட்டுமே முடியுமேயன்றி வேறு எந்த வழியிலும் முடியவே முடியாது.
ஆண்டவராகிய இயேசு தன மரண பரியந்தம் கீழ்ப்படிதல் மூலம் அதைத்தான் நமக்கு கற்று தந்திருக்கிறார்.
ஒருவரை நாம் தாழ்மையாலும் கீழ்படிதலாலும் ஜெயித்துவிடால் உடனே அந்த நபர் நாம் இருக்கும் இடத்தைவிட்டு கடந்துபோய்விடுவார் அவரை அடிக்கடி காணகூட தேவன் அனுமதிக்க மாடடார்.
எனவே அன்பானவர்களே, வேலை செய்பவர்கள் தங்கள் கீழ் அல்லது மேல் வேலை செய்பவர்களையோ பணியாட்கள் முதலாளியையோ, குடும்ப தலைவர்கள் மனைவி பிள்ளைகளையே குடும்ப தலைவிகள் கணவன் பிள்ளைகளையே திட்டி தீர்க்கவேண்டிய அவசியமே இல்லை.
நீங்கள் தேவனுக்குள் சரியானால் உங்கள் முதலாளி அல்லது உடன் வேலைக்காரர் உங்களுக்கு ஏற்றபடி சரியாக வேண்டும் அல்லது அந்த இடத்தைவிட்டு அவர்கள் ஓடவேண்டும். ஒருவேளை அந்த இடமே சரியில்லாதவர்களால் நிறைந்திருந்தால் நீங்கள் வேறு ஒரு நல்ல இடத்துக்கு மாற்றப்படுவீர்கள்.
அதுபோல்
நீங்கள் தேவனுக்குள் சரியானால் உங்கள் கணவன்/ மனைவி / பிள்ளைகள் உங்களுடன் சேர்ந்தே இருப்பவர்கள் ஆகையால் நிச்சயம் சரியாக மாற்றப்படுவார்கள்.
மேலும்
ஒருவேளை காதலன் காதலிகளாக இருந்தால் - யாரோ ஒருவர் இன்னொருவருக்கு ஏற்ற பரிசுத்தம் மற்றும் தாழ்மை இல்லை என்றால் அவர்கள் கண்டிப்பாக பிரிந்தே ஆகவேண்டும். ஓன்று தங்களை தாங்களே ஆராய்ந்து பரிசுத்த நிலைக்கு வரவேண்டும் இல்லையேல்
அதற்காக கவலைப்பட்டு பயனில்லை. இருவரில் யாரோ ஒருவர் இன்னொருவருக்கு ஏற்றவர் அல்ல எனவே தேவன் பிரித்துவிடார் என்று சமாதானமாக விட்டுவிட்டு தேவனிடம் ஒப்புக்கொடுங்கள். உங்கள் பரிசுத்த நிலைக்கு ஏற்ற ஒரு சரியான துணையை தேவன் நிச்சயம் கொண்டு வருவார்.
மேலான இந்த உண்மையை அறிந்துகொண்ட நீங்கள் ஒவ்வொருவரை உங்கள் வாழ்வில் சந்திக்கும்போதும் அவர்களை உங்களைவிட அவர்களை மேன்மையாக எண்ணி அவர்களிடம் உள்ள தேவனுக்கேற்ற நல்ல குணம் எது என்பதை ஆராய்ந்து அறிந்து அவர்களை தாழ்மையாலும் பரிசுத்தத்தாலும் வெல்லுங்கள்.
தோற்றாலும் துவள வேண்டாம் நம் ஆண்டவர் நாம் எத்தனைமுறை விழுந்தாலும் நம்மை தூக்கிவிட வல்லவர் எனவே,
நீங்கள் (பந்தயபொருளை) பெற்றுக்கொள்ளத்தக்கதாகஓடுங்கள்.I கொரி 9:24
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)