இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்தவர்கள் ஒன்றுக்கு மேல் திருமணம் பண்ணலாமா?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
கிறிஸ்தவர்கள் ஒன்றுக்கு மேல் திருமணம் பண்ணலாமா?
Permalink  
 


கிறிஸ்தவர்கள் ஒன்றுக்கு மேல்  திருமணம் பண்ணலாமா? 

இது குறித்து வேதம் என்ன சொல்கிறது? 

 

இது வேதத்தின் பிரகாரம் தவறாயின் அதட்கான தண்டனை என்ன ? 

 

தாவீது பத்சாபாலை ஏற்றுக்கொண்டது போல இக்காலத்திலும் முடியுமா? 

 

வேத ஆதாரத்தோடு விளக்கவும். 

 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

வசனங்களை நான் ஆராய்ந்த வரையில் பார்த்தால்,  ஒரு பாஸ்டடரோ அல்லது ஏதாவது ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவரோ அவனுக்கு துணை பாஸ்ட்டராக  இருப்பவர்களோ சபை மூப்பர்களோ ஒரே மனைவியை உடையவராக இருக்க வேண்டும் என்று பவுல் சொல்கிறார்:
 
I தீமோத்தேயு 3:2 ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும்,(மாக)......... இருக்கவேண்டும்    
 
I தீமோத்தேயு 3:12 மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும் 
 
 தீத்து 1:6 குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே (மூப்பராக)  ஏற்படுத்தலாம்.
 
ஆனால்  சாதாரண விசுவாசி ஒருவன் (ஒருவள் இல்லை) சூழ்நிலையினிமித்தம்  ஒன்றுக்கு மேற்படட திருமணம் பண்ணினால் பாவம் கிடையாது என்பதே என்னுடைய கருத்து.  
 
 
ஆதியாகமம் 1ம் அதிகாரத்தில் தேவன் மனுஷனுடைய ஆகாரமாக வெஜ் ஆயிடடம் மட்டுமே கொடுத்தார்  
  1. 29. பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
 
மனுஷனோ இடுப்பு பண்ணி கண்ட ஜீவன்களையும் அடித்து திங்க ஆரம்பித்துவிட்டான்  எனவே ஆண்டவர் அதை அனுமதித்ததோடு  லேவியராகமத்தில் எதை புசிக்கலாம் எதை புசிக்க கூடாது என்று ஒரு விளக்கத்தை கொடுத்தார் 
 
    1. 2.  பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தக்க ஜீவ ஜந்துக்கள் யாதெனில்:


  1. 3. மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
 
 
அதுபோல், 
 
ஆதியில் தேவன் மனுஷனை படைக்கும்போது ஒருவனுக்கு ஒருத்தியைத்தான் படைத்தார்.  அந்த தேவ நியமனத்தின்படி ஒருத்தியோடு வாழ்வதுதான் சிறந்தது தேவனுக்கு உகந்தது. 
 
நாளடைவில் ஒருவன் முரடடடம் பண்ணி  பல பெண்கள் மீது ஆசை பட்டபோது  தேவன் அதை அனுமதித்ததோடு  யாரையும் தள்ளிவிட கூடாது என்று சொல்லி "தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன்" என்று சொன்னார்.
 
எனவே ஒன்றுக்கு மேற்படட பெண்ணை திருமணம் செய்வது பாவம் கிடையாது ஆனால் அது நம் பரிசுத்தத்தை கெடுக்கும் ஒரு காரியம்.
 
(திருமணமாகி விவாகரத்து செய்யப்படட பெண்ணையோ பிறன் மனைவியையோ எக்காரணம் கொண்டும் திருமணம் செய்ய கூடாது. விதவைகளை திருமணம் செய்ய தடையில்லை.} 
 
(அடங்கா பிடாரியாகிய மனுஷனுக்காக தேவன் பல நேரங்களில் அட்ஜஸ்ட் பண்ணி போயிருப்பதை இதன் மூலம் அறிய முடியும்) 


-- Edited by SUNDAR on Monday 26th of November 2018 06:19:27 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard