இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாவி எனப்படுவானா?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
பாவி எனப்படுவானா?
Permalink  
 


பாவம் செய்த ஒருவன் தேவனிடம் மன்னிப்பு கேக்கும் பொது அவன் அந்த நிமிடமே பரிசுத்தமாக்கப்படுகிறானா? 

 

அதட்கு பின்னும் அவன் பாவி எனப்படுவானா?

 

வேத ஆதாரத்தோடு விளக்கவும். 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

அழுக்கான ஒரு பாத்திரத்தை கிளீனர் உபயோகித்து சுத்திகரிக்கும்போது அது சுத்தம் அடைந்து அடுத்த பயன்பாட்டுக்கு உகந்ததாக மாறுகிறது 
 
இங்கு வசனம் சொல்கிறது: 
 
I யோவான் 1:7  இயேகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்  
 
இப்படி பாவியாகிய ஒருவனுடைய  பாவ அழுக்கு  எல்லாம் ஆண்டவராகிய இயேசுவின் பரிசுத்த இரத்தத்தின் மூலம் சுத்திகரிக்கப்படடால் அவன் பரிசுத்தம் ஆகிவிடுவான் அல்லவா?  
 
எனவே அவன் "பாவி" எனப்படமாடடான். . 
 
ஆகினும் இந்த பாவ உலகத்தில் நாம் தொடர்ந்து வாழும்போது அறிந்தோ அறியாமலோ மீண்டும் அந்த பாவ கரை நம்மேல் படிகிறது 
 
யோவான் 8:34  பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் 
 
என்ற வார்த்தை இருப்பதால் ஒரு பாவம் செய்தாலும்  அவனை "பரிசுத்தவான்" என்றும் அழைத்துவிட முடியாது. 
 
எனவே   அடிக்கடி ஆண்டவர் சமூகத்தில் அமர்ந்து பாவங்களை 
அறிக்கையிட்டு சுத்திகரித்து வாழும் பொது 
 
ரோமர் 4:5 ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
 
எனவே இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படட ஒருவனை "பாவி" என்றும் சொல்ல முடியாது "பரிசுத்தவான்" என்றும் சொல்லமுடியாது . 
 
"விசுவாசத்தினால் நீதிமான்கள் ஆக்கப்படட நீதிமான்கள்" அவர்களின் பெயர் என்பதே எனது கருத்து.

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard