தேவன் தாமே முழுமையாக பூமிக்கு வந்து பலியாகாமல் தன வார்த்தையை மாத்திரமே மாம்சமாக்கி பூமிக்கு பலியாக அனுப்பினார்.
யோவான் 1:1ஆதியிலேவார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 14. அந்த வார்த்தை மாம்சமாகி .....நமக்குள்ளே வாசம்பண்ணினார்;
அதனால்தான் ஒருபங்கு தேவனின் செயல்பாடு மறுபங்கு மனுஷனின் விசுவாசம் மற்றும் அறிக்கையிடுதல் தேவைப்படுகிறது.
ரோமர் 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
இங்கு இயேசுவை அறிக்கையிட வேண்டும் அவரை எழுப்பிய தேவனை விசுவாசிக்க வேண்டும்
தேவன் தன பங்குக்கு செய்யவேண்டியதை முழுமையாக செய்து முடித்துவிடடார். ஆனால் மனுஷர்களில் முழுமையான விடுதலைக்கு மனுஷன் செய்யவேண்டிய பங்கு இன்னும் பாக்கியிருப்பதால் முழுமையான விடுதலையை எடட முடியாமல் இருக்கிறது.
பவுல் தன்னுடைய காலத்திலேயே கிறிஸ்த்துவின் இரண்டாம் வருகை அமையும் என்று விசுவாசித்த்து இவ்வாறு எழுதினர்
I கொரிந்தியர் 15:51இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
இவ்வார்த்தையில் பவுல் தன்னையும் சேர்த்து "நாமெல்லாம் நித்தரை (சரீர மரணம்) அடைவதில்லை" என்று எழுதியிருக்கிறார்.
ஆனால் அப்படி நடக்கவில்லை அதுபோல் அநேகர் ஆண்டவர் வரும் நாளை முன்குறித்து ஏமாந்து போயிருக்கிறார்கள்.
எனவே ஆண்டவரின் வருகை மற்றும் முழுமையான விடுதலை குறித்து யாரும் சரியாக எழுதிவிட முடியாது என்றே எனக்கு தோன்றுகிறது.
எனக்கு தெரிவிக்கப்படடபடி ஆண்டவரின் வருகை நிகழ ஒரு காரியம் நிறைவேற வேண்டும் என்பது மாத்திரம் என்னால் அறிய முடிகிறது.
அது என்னவென்றால் "சத்துருவானவன் ஒரு மனுஷனால் ஜெயிக்கப்பட வேண்டும்"
எனவே எவ்வளவு தேவ வார்த்தைக்கு பயந்து கீழ்ப்படிந்து நடக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் முடிவு என்பது வர வாய்ப்புண்டு.
எப்படி ஆண்டவராகிய இயேசு தேவனுக்கு கீழ்ப்படிந்து சாத்தானை ஜெயித்தாரோ அதுபோல், ஒரு மனுஷன் அவர் கொடுத்துள்ள ஆவியானவரின் பெலத்தால் சந்துருவை முழுமையாக ஜெயிக்க வேண்டும். அங்கு மரணம் ஜெயிக்கப்படும்! அப்பொழுது சத்துருவுக்கு மனுஷர்கள் மேலுள்ள அதிகாரம் பிடுங்கப்பட்டு அவன் பாதாளத்தில் அடைக்கப்படுவான்.
வெளி 20:2பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்
அதன் பின்னரே முழுமையான முடிவு வரும்.
அதற்குரிய காரியங்கள் 99% நடந்து முடிந்து விட்டது என்பதை அறிய முடிகிறது.
விரைவில் முழுமையான விடுதலையை எதிர்பார்க்கலாம் ஆனால் சரியான நேரம் காலம் தேவன் ஒருவருக்கு மட்டுமே தெரியும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)