இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சொர்க்கம் நரகம் உள்ளதா? பாண்டவர்கள் நரகத்தில் பிரவேசிக்க காரணம் என்ன ?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
சொர்க்கம் நரகம் உள்ளதா? பாண்டவர்கள் நரகத்தில் பிரவேசிக்க காரணம் என்ன ?
Permalink  
 


அன்பானவர்களே!

இன்றைய நாட்களில் அநேகரால் உடனே பதில் சொல்ல முடியாத கேள்விகளில் “சொர்க்கம் நரகம் உள்ளதா இல்லையா” என்ற கேள்வியும் ஓன்று !

செத்துப்போகும் ஒரு மனிதன் எங்கே போகிறான் என்பதை பல்லாண்டுகளாக ஆராய்ந்தும் ஆராய்ச்சியாளர்கள் யாரும் இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஆனால் மரணத்துக்கு பிறகு ஒரு வாழ்வு இருக்கிறது என்பதை அநேக ஆராச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் எல்லோரும் மரித்து ஓர்நாள் இந்த உலகத்தை கடந்து போவதால், மரித்தவர்கள் போகும் இடம் எது? உண்மையில் சொர்க்கம் நரகம் இருக்கிறதா என்பதை பற்றி சற்று ஆராய்வது நல்லது என்று நினைக்கிறேன்.

இன்று உங்களிடம் "சொர்க்கம் நரகம் உள்ளதா?" என்று கேட்டால் நீங்கள் கீழ்க்கண்ட பதில்களில் ஏதாவது ஒன்றை தான் கூற முடியும்

1. சொர்க்கம் நரகம் இல்லை.
2. சொர்க்கம் நரகம் இருக்கா இல்லையா என்று தெரியாது.
3. சொர்க்கம் நரகம் உண்டு

இந்த முற்று பதில்களுக்கான விளக்கத்தை சற்று விரிவாக ஆராய்ந்து பார்க்கலாம்.

1.சொர்க்கம் நரகம் இல்லை என்று சொல்பவரா நீங்கள்?

இன்று உலகில் அனேகர் "சொர்க்கம் நரகம்" என்று எதுவும் கிடையாது, இந்த உலகம் தான் எல்லாமே என்றும், சொர்க்கம் நரகம் என்பது நாம் வாழும் வாழ்க்கையில்தான் இருக்கிறது என்றும் வாதிடுகின்றனர்.

நான் கேட்கிறேன், நம் கண்ணுக்கு தெரியவில்லை என்ற ஒரே காரணத்தினால் எந்த ஒன்றையும் இல்லை என்று சொல்வது ஒரு சரியான பதில் தானா? நம்முடைய உயிரை கூட நமது கண்ணால் பார்க்க முடியாது அனால் உயிர் இல்லை என்றால் மனிதன் ஒரு பிணம் தானே! சுமார் 1000 வருடத்துக்கு முன்பு மின்சாரம் ஒன்று இருக்கிறதா என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. அப்படி எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை என்று தான் சொல்வார்கள். ஆனால் இன்று நாம் அதன் மேம்பட்ட பயனை அனுபவித்து வருகிறோம். அதை யாரும் கண்ணால் பார்த்தது உண்டா? அது போல் எத்தனையோ வருடங்களாக சூரியன் தான் பூமியை சுற்றுகிறது என்று நினைத்தார்கள் ஆனால் உண்மையில் இந்த பூமிதான் சூரியனை சுற்றி வருகிறதாம் அதை நம் கண்களால் பார்க்க முடிகிறதா?

இதேபோல் இன்னும் எத்தனையோ காரியங்கள் நேற்று இல்லை என்று சொல்லப்பட்ட்து இன்று உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது அதுபோல் இன்று இல்லை என்று சொல்லப்படுவது நாளை உண்மை என்று நிரூபிக்கப்படலாம். ஒரு பொருளை அல்லது இடத்தை உண்டு அல்லது இல்லை என்று தீர்மானிக்க நமது கண் ஒரு அளவுகோல் அல்ல. நாம் இருந்த இடத்தில் இருந்துகொண்டு எனது கண்ணுக்கு தெரியவில்லை எனவே வைரஸ் என்றோரு கிருமி இல்லை என்று சொல்லலாம் ஆனால் அது இருப்பது எப்படி உண்மையோ அதுபோல் அநேக நம் கண்ணுக்கு தெரியாத காரியங்கள் இந்த உலகில் உண்டு. எனவே சொர்க்கம் நரகம் இல்லை என்று சொல்வது தவறான வாதம் "அது இருக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது என்று சொல்வதே ஒரு சரியான பதில்.

இப்போது தெரியாது என்று சொல்பவர்களுடைய பதிலை சற்று விரிவாக பார்க்கலாம்.

2. சொர்க்கம் நரகம் இருக்கிறதா எனபது எனக்கு தெரியாது என்று சொல்பவர்களுக்கு:

எதாவது ஒரு முக்கியமான காரியம் நமக்கு தெரியவில்லை என்றால் நாம் அதை பற்றி தெரிந்தவர்களிடம் விசாரித்து தெரிந்து கொள்கிறோம் அல்லது அது சம்பந்தமான புத்தகங்கள், செய்திகள் இவற்றை கேட்டு தெரிந்து கொள்கிறோம். ஆகினும் பலருக்கு தெரிந்த இன்னும் எவ்வளவோ விஷயங்கள் நம் அறிவுக்கு எடடாத நிலையில் இருக்கிறது!

பணம் சம்பாதிப்பதில் இருந்து பக்கத்து தெருவுக்கு போவது வரை எல்லாவற்றையும் பிறரிடம் கேட்டு தெரிந்துகொள்ளும் நாம், இந்து மதத்தில் இருந்து கிறிஸ்த்தவம், இஸ்லாம் என்று எல்லா மதங்களும் நரகம் என்று ஒரு இடம் இருக்கிறது என்று திட்டவட்டமாக சொல்லும் அந்த இடத்தை பற்றி ஏன் கேட்டு தெரிந்துகொள்ள விருப்பம் இல்லது இருப்பது ஏன்?

தெரிந்து கொண்டால் நாம் நினைத்தபடி வாழ முடியாது என்ற பயமா? அல்லது பொய் சொல்லக்கூடாது ஏமாற்ற கூடாது திருட கூடாது நேர்மையான வாழ்வு வேண்டும் என்று திட்டவட்டமாக கட்டளையிடும் மதங்களே இப்படி சொர்க்கம் நரகம் உண்டு என்று பொய் சொல்கிறது என்ற பொதுவான எண்ணமா? ஏன் நீங்கள் சொர்க்கம் நரகம் இருக்கிறதா என்று அறிய விரும்பவில்லை?

"நெருப்பில்லாமல் புகையாது" என்பார்கள். அதுபோல் அப்படி ஒரு இடம் இல்லாமல் அதை பற்றி எல்லா மதமும் குறிப்பிட வாய்ப்பு இல்லையே. சொர்க்கம் நரகத்தை பார்த்தவர்கள் எழுதிய அனேக புத்தகங்கள் உலகில் உண்டு "நரகத்தை பற்றிய ஒரு தெய்வீக வெளிப்பாடு" "நான் கண்ட நரகமும் பாதாளமும்" " பரலோக வாசலும் நரக அக்கினியும்" இது போல் புத்தகம் எழுதியவர்களை தவிர இன்னும் எத்தனையோபேர் பேர் அந்த இடங்களை பார்த்து நரகத்தின் மிக மிக கொடிய தன்மையை விளக்கியுள்ளனர். நான் கூட நரகம் பாதளம் இவற்றை நேரடியாக பார்ப்பதுபோல் பார்த்து கதறி துடித்துள்ளதால்தான் அந்த வேதனை மிகுந்த இடத்துக்கு யாரும் போய்விட கூடாது என்று இந்த செய்தியையே . எழுதுகிறேன். .

"தெரியவில்லை" என்ற பதில் யாருக்கும் மன்னிப்பை கொடுக்காது. சட்டத்தை பற்றி தெரியாது என்று சொல்லி கொண்டு ஒருவர் தப்புசெய்தால் அவருக்கு தண்டனை கிடைக்காமல் போவது இல்லை.

உண்பதற்கு உறங்குவதற்கு வாழ்வதற்கும் சம்பாதிப்பதற்கு அநேக காரியங்களை அறியாத நாம் அதைப்பற்றி அறிந்த அடுத்தவரிடம் கேட்டு கேட்டு தெரிந்துகொள்ளும்போது எல்லோரும் மரித்த பிறகு போகப்போகிற அந்த அதி முக்கியமான காரியத்தை கண்டிப்பாக தெரிந்தவரிடம் விளக்கம் கேட்டு அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் அதற்காகவே கடவுள் நமக்கு சிந்திக்கும் திறனை தந்திருக்கிறார்.

இந்த அற்ப கால வாழ்க்கை உள்ள உலகில் சுகமாக வாழ்வதற்கு எவ்வளவு முயற்சி எடுக்கிறோம். அதோடு ஒருபடி அதிக முயற்சி எடுத்து நித்யமாக இருக்க்போகும் இடத்தை பற்றி ஆராய்ந்தால் அதன் உண்மை தன்மையை அறிய முடியும்.

3. சொர்க்கம் நரகம் உண்டு என்று நம்பும் அருமையானவர்களே!

சொர்க்கம் நரகம் உண்டு என்று நம்பும் நண்பர்களே நீங்கள் நரகம் என்ற அந்த கொடிய இடத்துக்கு போக மாட்டீர்கள் என்பதற்கு நிச்சயம் ஏதாவது உங்களிடம் உண்டா?

அல்லது நான் நரகம் போகும் அளவுக்கு பெரிய பாவி நான் அல்ல சின்ன சின்ன பாவங்கள் தான் என்னிடம் உண்டு என்று சொல்கிறீர்களா?

மஹாபாரதத்தில் மிகவும் உண்மை உத்தமம் நேர்மையாக வாழ்ந்த பாண்டவர்களே நரகத்துக்கு போனார்கள் என்று இந்து மதம் சொல்கிறது.

காரணம் என்னவென்று விசாரித்தபோது "தர்மன் ஒரே ஒரு பொய் சொன்னதால் நரகத்துக்கு போகவேண்டி வந்தது, திரௌபதி தன் ஐந்து கணவர்களில் அர்ஜுனன் மீது மட்டும் அதிக காதல் கொண்டிருந்தால், நகுலனோ தனது அழகின் மீது அளவுக்கதிகமான கர்வம் கொண்டிருந்தான், சகதேவனோ தன் புத்திக்கூர்மையை நினைத்து தற்பெருமை கொண்டவன், பீமனோ தன் பலத்தை நினைத்து கர்வம் கொண்டதோடு உணவின் மீது எப்போதும் பேராசை கொண்டிருந்தான், அர்ஜுனன் போரில் கர்ணனை கொன்றான், ஏகலைவன் விரல் வெட்டுற காரணமாய் இருந்தான் என காரணங்கள் அடுக்கப்பட்டது.

இப்படி ஒருவர் மீது அதிக காதல் கொள்வது தன அழகை நினைத்து / படிப்பை நினைத்து / பலத்தை நினைத்து / சொத்து சுகத்தை நினைத்து மனதில் கர்வம்/ பெருமைப்படுவது / நமக்கு பிடித்த உணவின்மீது அதிக ஆசை கொள்வது, அடுத்தவர் துன்பத்து காரணமாக இருப்பது எல்லாமே பாவம் அதற்க்கு தண்டனை நரகம் என்று இந்து புராணமே சொல்கிறது. 
"பொய்யன் இரண்டாம் மரணமாகிய அக்கினி கந்தகம் எரியும் இடத்தில் பங்கடைவான் என்று கிறிஸ்த்தவ மதம் சொல்கிறது, "இறுதி நாளில் பொய்யர்கள் நஷ்டம் அடைவார்கள் என்று திருக்குரான் சொல்கிறது.

இப்படி பொய் சொல்வது சிறு சிறு தவறுகள் செய்வது மட்டுமே நம்மை நரகத்துக்கு பாத்திரவானாக தீர்க்கும் என்றால் நமது வாழ்க்கையில் இந்நாள் வரை நாம் எவ்வளவு பொய் மட்டுமல்தாது மேலேயுள்ள இன்னும் எத்தெத்தனையோ இறைவனுக்கு பிடிக்காத கேடுகெடட செயல்கள் நாம் செய்துள்ளோம் என்பதை சற்று யோசித்து பாருங்கள் அன்பர்களே. எனவே நாம் எப்படி நரகத்துக்கு தப்பிப்போம்.

ஒரு கால் டம்ப்ளர் சாக்கடை (கூவத்து ) தண்ணியுடன் எவ்வளவு தான் நல்ல சுத்தமான தண்ணீரை கலந்தாலும் நம்மால் அதை குடிக்க முடியாது. அது போல நம்மிடம் உள்ள ஒரு சின்ன பாவம் கூட நம்மை இறைவன் ஏற்றுக்கொள்ள தகுதி அற்றவனாக மாற்றிவிடும். அப்படிஎன்றால் ஒரு பாவம் கூட செய்யாமல் யாரும் இந்த உலகத்தில் வாழவே முடியாதே, இதற்க்கு என்னதான் தீர்வு? என்ற கேள்வி எழும்புகிறதா?

ஆம்! அது நம்மை படைத்த ஆண்டவருக்கும் நன்றாக தெரியும். பாவம் நிறைந்த இந்த உலகில் பாவமே செய்யாமல் வாழ்வது என்பது கடினம் என்பது அவருக்கு நிச்சயமாகவே தெரியும். எனவேதான் அவர் தாமே மனிதனாக பிறந்து வந்து நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை அவரே அனுபவித்து பாடுபட்டு சகித்து நமக்காக ஒரு விடுதலையை வாங்கி தந்துவிடடார். அவர்தான் ஆண்டவராகிய இயேசு. அவர் வாங்கித்தந்த இரட்சிப்பு இலவசமாக வந்தாலோ என்னவோ அதன் மதிப்பு நமக்கு தெரியாமல் இருக்கிறது.

இலவசமாக ஒரு வேட்டி சேலை கிடைத்தாலே ஊரே திரண்டுபோய் காலையில் இருந்து காத்துக்கிடக்கும் காலகட்ட்ங்களில் வாழும் நாம் ஆண்டவர் அடிபட்டி உதைபட்டு வாங்கித்தந்துள்ள விலையேறப்பற்ற அந்த நித்திய இலவச இரட்சிப்பை பற்றி அக்கறை இல்லாமல் இருக்கிறோமே என்னசெய்வது?

அந்த இரட்சிப்பு இல்லை என்றால் எவரும் நரகத்தில் இருந்து தப்பிக்கவே முடியாது.

இயேசு சொல்கிறார் "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:6

எனவே நம்இருதயத்தில் நிறைந்துள்ள எல்லா அசுத்தமான செயல்கள், எண்ணங்களையும் முழுவதும் கீழே கொட்டிவிட்டு பாவங்களை கழுவ சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் என்னும் டெட்டால் போட்டு கழுவினால் மட்டுமே நமது பாவம் மன்னிக்கப்பட்ட ஒரு முழு நம்பிக்கை நமக்கு ஏற்படும் நமது மனம் இறைவனுக்கு ஏற்றதாக மாறும் நாமும் நரகத்தை தவிர்த்து இறைவனிடம் போக முடியும்.

எனவே அன்பானவர்களே பி காம் படட படிப்பை 1985ல் முடித்த நான், உலகில் நடக்கும் கொடுமைகளை பார்த்து கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா சொர்க்கம் நரகம் இருக்கிறதா என்ற உண்மையை அறியவேண்டும் என்று அழுது புலம்பி அநேக நாள் வேண்டுதல் செய்தபோது ஆண்டவர் தாம் இருப்பதை எனக்கு உறுதி படுத்தினார். அத்தோடு சொர்க்க நரகம் இருப்பதை அறிந்ததோடு எல்லாவற்றையும் நேரில் பார்ப்பதுபோல் பாத்துள்ள காரணத்தால் இந்த கைப்பிரதியை தயாரித்து வழங்குகிறேன்.

உங்களுக்கு எந்த சந்தேகம் என்ன விளக்கம் தேவைப்படடாலும் அருகில் இருக்கும் ஒரு கிறிஸ்த்தவ சபையை அணுகி விசாரியுங்கள். அவர்கள் உங்களுக்கு சரியான வழியை போதிப்பார்கள்.

பின் குறிப்பு: இயேசு ஒரு வெளி நாட்டு கடவுள் என்றோ வெள்ளைக்காரன் கொண்டுவந்த கடவுள் என்றோ எண்ணி அவரை நிராகரிக்க வேண்டாம். ஆண்டவராகிய இயேசுவை பற்றி இந்திய வேதமாகிய ரிக்வேதம் யஜுவ்ர் வேதம் போன்றவற்றில் தெளிவான குறிப்புகள் இருப்பதாக ஆராச்சியாளர்கள் ஆதாரத்துடன் கூறுகின்றனர். கடவுள் இந்தியாவில் மட்டும்தான் பிறக்க வேண்டும் என்று கடடாயமில்லையே. உலகம் முழுவதும் அவருக்கு சொந்தம் அவர் எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம் அல்லவா? எனவே அவர் அந்நிய கடவுள் என்று எண்ண வேண்டாம்! இன்றே அவரிடம் ஓடி வாருங்கள் அவர் தன்னிடம் வரும் ஒருவரையும் வேண்டாம் என்று ஒதுக்குவது இல்லை. அவர் உங்கள் பாவங்களை கழுவி சுத்திகரித்து உங்கள் வீட்டில் உள்ள பிரச்சனைகள் துன்பங்கள் நோய்கள் எல்லாவற்றையுமே நீக்கி உங்களை பரலோக பிள்ளைகளாக மாற்றுவார்.

அவர் என் பாவத்துக்காகத்தான் மரித்தார் என்று முழு மனதோடு நம்புகிற ஒருவரும் நரகத்தை குறித்து பயப்படவேண்டிய அவசியமே இல்லை!

 
(இது ஒரு சுவிசேஷ கைப்பிரதியாக தயாரிக்க எழுதப்பட இருக்கிறது. இதில் ஏதாவது முக்கியமான கருத்துக்கள் சேர்க்கலாம் அல்லது ஏதாவது வரிகளை நீக்கலாம் என்று நினைப்பவர்கள் ஆலோசனை தரலாம்)



-- Edited by SUNDAR on Monday 26th of November 2018 07:34:46 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard