பூர்வ இந்து மதத்தை சார்ந்த நான் உலகத்தில் நடக்கும் பாடுகள் வேதனைகள் கொடூரங்களை பார்த்து பார்த்து மனம் நொந்து இறைவன் என்று ஒருவர் இருக்கிறாரா இல்லையா? என்பதை என் அனுபவத்தில் அறிந்துகொள்ளவேண்டும் என்று வாஞ்சித்து நீண்ட தேடுதலுக்கும் அநேக பாடுகளுக்கும் மத்தியில் இறைவன் இருப்பது உண்மை என்பதை அனுபவ பூர்வமாக அறிந்ததோடு, இந்த உலகம் என்பது வெறும் மாயை இதன் செயல்பாடுகள் எல்லாம் ஓர் நாளில் முற்றிலும் முடிந்துபோகும் என்பதை நிதர்சனமாக அறிந்துள்ளேன். அந்த நாள் நீண்ட தொலைவில் இல்லை என்பதையும் உணர்ந்துள்ளேன்.
மரணத்துக்கு பின் என்ன நடக்கும் என்பதை நானே மரித்து போய் அறிந்தது போல அறிந்து வந்துள்ளேன்.
1992ல் பாபர் மசூதி இடிக்கப்படத்தில் இருந்து பாம்பே குண்டு வெடிப்பு குஜராத் கலவரம் தொடங்கி சென்னை வெள்ளம் அம்மாவின் மரணம் மற்றும் இன்று வரை தமிழ் நாட்டில் நடக்கும் நிலையில்லாத ஆட்சி வரை அனைத்தும் நடப்பதற்கும்,. கேரளா வெள்ளம் சபரி மலை பிரச்சனை போன்றவெற்றிக்கும் ஆண்டவரின் திடடத்துக்கும் உள்ள தொடர்பை இறைவன் தெளிவாக விளக்கியுள்ளார்.
நடப்பது எதுவுமே சரியான காரணம் இல்லாமல் நடக்கவில்லை. அகல ரயில்பாதை போடுவதில் இருந்து பான் பராக் திண்பதுவரை வரையில் அனைத்தும் ஓர் அடிப்படையிலேயே நடக்கிறது. உலகத்தில் வைக்கப்படும் கட்அவுட்கள் சுவரில் வரையப்படும் சித்திரங்களில் இருந்து ரோட்டில் நடக்கும் மாடுகள் வரை அனைத்துமே காரணத்தோடுதான் செயல்படுகிறது.
அடியேனை பொறுத்தவரை பதில் தெரியாதே கேள்வி என்று இதுவரை எதுவும் இல்லை.
புதிதாக கேள்வி எழுப்புவோருக்கு முடிந்த அளவு தியானித்து ஆண்டவரிடம் விசாரித்து பதில் தர வாஞ்சிக்கிறேன்
எந்த மதத்த்தில் உள்ளவர்களானாலும் சரி ஆன்மிகம் சமந்தமான தங்கள் மனதில் எழும்பும் பொதுவான கேள்விகளுக்கு முடிந்த அளவு தியானித்து பதில் அளிக்கப்படும்.
ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் தங்கள் விருப்பம்! ஆனால் சில பதில்கள் உடனே கிடைக்கும் சில பதில்கள் கிடைக்க கால தாமதம் ஆகலாம் ஆண்டவர் எப்போது வெளிப்படுத்துகிறாரோ அப்போதுதான் பதில் எழுதப்படும். எனோ தானோ என்று எழுத மாடடேன் ஆண்டவரால் வெளிப்படுத்தப்பட்டு எனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே எழுதுவேன் அதுவரை பொறுத்திருத்தல் அவசியம்.
நீங்கள் இறைவன் இருக்கிறார் எனபதை எப்படியாவது அறியவேண்டும், அவர் தரும் விடுதலையை பெறவேண்டும் என்பதே அடியேனின் நோக்கம்!
இறைவனை அறியவேண்டும் என்ற உண்மை வாஞ்சை உள்ளவர்கள் தங்கள் கேள்விகளை முன்வைக்கலாம். எனக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை அதனால் இறைவனை நம்பமுடியவில்லை என்று சொல்வதற்கு இடமில்லாமல், சாக்குபோக்கு சொல்லி தப்பிக்ககூடாத வகையில் இந்த பதிவை இடும்படி ஆண்டவர் ஏவியபடியால் எழுதுகிறேன்.
நான் ஒரு சராசரி மனுஷன்தான் அனைத்தும் அறிந்தவன் அல்ல! ஆகினும் அனைத்தும் அறிந்த ஆண்டவரை அநேக நாடகளாக அறிந்தவன்! அவரோடு அமர்ந்து அவரோடு பேசி அவரோடு உறவாடி அவரோடு நடப்பவன் எனவே அவரால் எல்லா கேள்விக்கும் பதில் தர முடியும் என்ற நம்பிக்கையிலேயே இந்த பதிவை முன்வைக்கிறேன்!
ஆண்டவர்தாமே இடைப்பட்டு தங்கள் இருதய வேண்டுதல்களை நிறைவேற்றுவாராக!
-- Edited by SUNDAR on Tuesday 11th of December 2018 12:24:07 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)