ஆண்டவருக்கு அட்வைஸ் பண்ணிய ஆபிரகாமின் வார்த்தைகள் இது!
ஆபிரகாம் ஆண்டவரை / அவரின் இருதய எண்ணங்களை / அவர் இரக்கங்களின் ஆழங்களை எந்த அளவுக்கு புரிந்து வைத்திருந்தான் என்று தெரியவில்லை. தேவனை பற்றி முழுமையாக தெரிந்திருந்தால் அவன் நிச்சயம் இப்படி ஆண்டவருக்கு அட்வைஸ் பண்ணியிருக்க மாடடான் என்றே எண்ண தோன்றுகிறது.
ஆனால் கர்த்தரோ அதற்க்கு கொஞ்சமும் கோபப்படாமல் அவன் கேட்பதற்கு எல்லாம் பதில் தருகிறார்.
ஆ! என்னே நம் தேவன்!
சிலநேரம் நாம் அறிவீனமாக கேட்க்கும் கேள்விக்கும் அகங்காரத்தின் பேசும் வார்த்தைகளுக்கும் நாம் அவருக்கு சொல்லும் அட்வைசுக்கும்கூட அவர் செவிகொடுத்து பதிலளிக்கினார் என்ற உண்மையை அறியும்போது வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவன் சில நேரங்களில் ஒரு குழந்தையை போல நடந்துகொள்வதை நினைத்து ஆச்சர்யமாக இருக்கிறது.
சர்வ வல்லமையுள்ள அவர் ஒரு சர்வாதிகாரிபோல நம்மிடம் நடக்காமல் ஒரு தகப்பனைபோல அல்லது ஒரு சிநேகிதனைப்போலவே நம்மிடம் நடந்துகொள்ளுகிறார்.
யோவான் 9:31ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
அத்தோடு லோத்தின் சம்பவத்தில் அவர் நடந்துகொண்டவிதத்தை பாருங்கள்:
1. ஆபிரஹாம் என்ற தன சிநேகிதனுக்காக லோத்தை பாதுகாக்க அக்கறையோடு செயல்படுகிறார்.
2. லோத்து என்ற நீதிமானுக்காக அவன் குடும்பத்தார் மட்டுமல்ல அவன் மருமகன்மார்களைகூட விடுவிக்க தேவன் சித்தம் கொள்கிறார்.
3. லோத்து தாமதித்தபோது அவர் தன் மிகுந்த இரக்கத்தினிமித்தம் அவனை கையை பிடித்து வெளியில் கொண்டுவந்து விடுகிறார்.
4. அவர்கள் அழிவில் மாட்டிக்கொள்ளாமலே தப்பிக்க செய்யவேண்டிய வழியும் சொல்கிறார்.
5. அவர்கள் தப்பித்து அந்த ஊருக்கு போகும்வரை அவர் அழிவை தள்ளிபோடடார்.
ஆதியாகமம் 19:22. தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது என்றார்;
இதேபோலவே நினிவேயின் ஜனங்களை அழித்தே தீரவேண்டும் என்று எரிச்சலோடு பிடிவாதம் பிடித்துக்கொண்டு நின்ற யோனாவுக்கும் தேவன் அன்போடு பதில் சொல்லிக்கொண்டே இருந்தார்.
ஞானத்தில் மொத்த ஊற்றாகிய தேவனின் செயல்பாடுகள் நம் அறிவுக்கு எடடாதது. அவரின் கொண்டுவரும் முடிவு எப்படி இருக்கும் என்பது நம்மால் யூகிக்க முடியாது.
அதுபோல் இன்றும் உலகத்தில் வரப்போகும் அழிவில் இருந்து ஒருவன் தப்பித்துக்கொள்ள தன சொந்த குமாரனையே ஒப்புக்கொடுத்தது மட்டுமல்லாமல் இன்னும் தன்னால் என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறார்.
அப்படிபடட தேவனை நாம் கேள்விகேட்பதை விட்டுவிட்டு அவர் சொன்னதை மாத்திரம் பின்பற்ற காட்டுவோம்
முடிவின் விழிப்பில் இருக்கும் இந்த உலகத்தில் ஓரு நாள் தள்ளிப்போவதும் தேவனை அறிந்தும் பின்வாங்கியிருக்கும் தன ஜனங்களுக்காகவும், சன்மார்க்கராக இருந்தும் தேவனை அறியாமல் இருக்கும் மனுஷர்களுக்காகவும் அவர்கள் குடும்பக்காகவுமே தள்ளப்படுகிறது என்பதை உணர்ந்து செயல்படுவோமாக.
ஓசியா 11:8எப்பிராயீமே, நான் உன்னைஎப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னைஎப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னைஎப்படிஅத்மாவைப்போலாக்குவேன்? உன்னைஎப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.
-- Edited by SUNDAR on Friday 21st of December 2018 04:41:20 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஓசியா 11:8 எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படிஅத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.
இந்த தேவ வார்த்தையை பார்க்கும் பொது கண்கள் கலங்குகின்றது.
தேவனின் அன்பை நினைத்தால் கண்ணீர் மட்டுமே வருகிறது..
ஓசியா 11:8 எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படிஅத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.
இந்த தேவ வார்த்தையை பார்க்கும் பொது கண்கள் கலங்குகின்றது.
தேவனின் அன்பை நினைத்தால் கண்ணீர் மட்டுமே வருகிறது..
உண்மை சிஸ்ட்டர்.
ஒரு மனுஷன் நித்தியா தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்ள உச்ச பட்சமாக என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் தேவன் செய்துவிடடார் இன்றும் செய்துகொண்டு இருக்கிறார்.
ஆனால் சத்துருவால் குருடாக்கப்படட மனுஷ இதயமோ அதை அறிந்துகொள்ள முடியாதபடி மாயையில் அடைபட்டு கிடக்கிறது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)