இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனிடம் இருந்து உண்மைகளை அறியவேண்டுமா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
தேவனிடம் இருந்து உண்மைகளை அறியவேண்டுமா?
Permalink  
 


வேத வசனங்கள் குறித்த எந்த ஒரு விளக்கமும் பிறர் மூலம் கேட்பதைவிட  தேவன் நமக்கு விளக்குவதுபோல் முழுமையாக  ஆத்மாத்மாக திருப்தியாக இருக்கும்.  அப்படி எந்த மனுஷனாலும் விளக்கவே முடியாது 
 
எனவேதான் நம் கேள்விக்கான பதிலையும் தேவனிடம் கேட்டு தெரிந்துகொள்வதுதான சிறந்தது.
 
தேவன் எல்லோருக்கும் பதில் கொடுப்பாரா? என்றால் நிச்சயமாக கொடுப்பார்!
 
வசனம் இவ்வாறு சொல்கிறது:
எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.  
 
என்றும் 
ஏசாயா 45:11 இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்;   
 
ஏசாயா 28:23 செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.  
 
என்றும் சொல்வதால் அவர் நிச்சயமாகவே நம் கேள்விக்கு பதில் தருவார். 
 
ஆனால் சில நிபந்தனைகள்  உண்டு,
 
நாம் விடாப்பிடியாக ஆத்மாத்தமமாக கேட்க்கவேண்டும் உண்ணும்போதும் உறங்கும்போதும் வேலை பார்க்கும்போதும் அதே சிந்தனையில் இருக்கவேண்டும்  மேலும் 
 
உதாரணமாக 
"ஆதாம் ஏவாள் இருக்கும் தோடடத்தில் தேவன் சர்ப்பத்தை ஏன் அனுமதித்தார்"  என்ற கேள்வி எழுமானால் 
 
அந்த கேள்வியை நீங்கள் கேட்க்கும் நோக்கம் என்ன? 
அதன் பதிலை அறிந்து நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?
அதன் பதிலை உங்களுக்கு சொல்வதால் தேவனுக்கு என்ன சாதக பாதகங்கள் உண்டாகும் ? 
அதன் பதிலை அறிந்த பிறகு தேவன் சொல்வதுபோல் நீங்கள் செயல்படுவீர்களா? 
 
என்ற உண்மைகள் தேவனால் அவரவர்  இருதய நிலைகளின் அடிப்படையில் ஆராயப்பட்டு, அதற்க்கு ஒருவர்  மனதில் ஏற்ற பதில்கள் உண்டாகுமானால் அதற்க்கான பதிலை தேவன் நிச்சயம் தருவார்.
 
அப்படியில்லை தேவனுக்கு அதை சொல்லும் அளவுக்கு சாதகமான நிலை இல்லை ஆனாலும் ஒருவர் விடாப்பிடியாக அதை அறிய விரும்புகிறார் என்றால் தேவன் அதை நேரடியாக அவர்களுக்கு சொல்லாமல் அந்த பதிலை அறிந்த வேறு யாரையாவது அனுப்பி அவர்களுக்கு தெரிவிப்பார்.
 
நம் நோக்கம் எங்கேனும் தவறுதலாக இருக்குமானால் சத்துரு இடையில் புகுந்து பலரை அனுப்பி குழப்பி விட்டுவிடுவான் பின்னர் தேவன் அனுப்பிய மனுஷரின் வார்த்தைகளை நம்மால் நம்ப முடியாத நிலை உண்டாகிவிடும் 
 
ஆனால வாஞ்சிப்போருக்கு தேவன் ஏதாவது ஒரு வழியில்  தனது பதிலை நிச்சயம் தெரிவிக்கவே செய்வார்.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 627
Date:
Permalink  
 

HMMM Good msg...

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard