சிஸ்ட்டர் இவ்விஷயத்தில் பலருக்கு பலவிதமான கருத்து இருப்பதால் நான் விட்டுவிடடேன்.
எனக்கு ஆண்டவர் தெரிவித்தன் அடிப்படையில் கருத்தை பதிவிடுகிறேன்:
கிறிஸ்த்தவர்கள் பணத்தை வட்டிக்கு கொடுக்க கூடாது என்பது வேத வசனத்தின் அடிப்படையில் என்னுடைய கருத்து.
யாத்திராகமம் 22:25உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.
எசேக்கியேல் 18:8வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி,
எசேக்கியேல் 18:13வட்டிக்குக் கொடுத்து, பொலிசைவாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை,
சகோதரன் அதாவது கிறிஸ்த்தவர்களிடம் வட்டி வாங்க வேண்டாம் மற்றவர்களிடம் வட்டி வாங்கலாம் என்று கீழ்கண்ட வசனம் சொல்கிறது:
உபாகமம் 23:20அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும்வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காயாக.
ஆகினும் நாம் வங்கியில் வட்டிக்கு பணத்தை வட்டிக்கு போடடால் அவர்கள் கிறிஸ்த்தவர்களிடம் எல்லாம் வட்டி வாங்கி உங்களுக்கு தர வாய்ப்பு இருப்பதால் அதுவும் தவிர்க்க கூடியதே என்பது என்னுடைய கருத்து.
சிலர் இயேசு சொன்ன கீழ்கண்ட வசனத்தின் அடிப்படையில் வட்டிக்கு கொடுக்கலாம் என்பதுபோல் சொல்கிறார்கள்.
மத்தேயு 25:27அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, என்று சொல்லி,
ஆனால் இந்த வசனம் வட்டிக்கு கொடுப்பதை பற்றி கூறவில்லை மாறாக நமக்கு கிடைத்துள்ள தாலந்துகளை பயனின்றி வைத்திருக்க கூடாது எனபதை குறிக்கவே உவமையாக கூறப்பட்டுள்ளது. மேலும் காசுக்காரர் வசம் ஒப்புவிக்க சொன்னது அவனுடையது அல்ல பிறர் கொடுத்து வைத்தது,
இவ்வசனங்கள் அடிப்படையில் என் பணத்தை போட்டு வைக்க நான் வங்கியில் SAVING ACCOUNT கூட வைத்திருக்கவில்லை
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)