பல வியாதிகள் வந்த நேரம் எல்லாமே தேவன் எனக்கு சுகம் தந்துள்ளார்..
நான் பாடசாலை செல்லும் நாட்களில் அதிகாலை வேளையில் எனக்கு தண்ணீரை தொட முடியாது ஏனெனின் அப்படி தொட்டால் எனது கைகள் கால்கள் எல்லாமே தடித்து தடித்து ஒவ்வாமை ஏற்பட்டு உடம்பெல்லாம் அரிக்க தொடங்கும் வீங்கும். குளிர் காலங்கள் என்னால் இருக்க முடியாது இப்படி ஒவ்வாமை ஏற்படும்.. இது சில காலங்களாக இருந்து என்னை வேதனைப்படுத்தியது. ஆனால் இதற்காக ஜெபித்தேன் ஆண்டவர் என் ஜெபத்தை கேட்டு என்னை சுகமாக்கினார்.. ஒருநாள் எனது ஆலய சுகமளிக்கும் பெருவிழாவில் .volunteer ஊழியம் செய்துகொண்டிருக்கும் போது அடைமழை பெய்து நிக்க கூட முடியாத அளவிட்கு குளிராக இருந்தது அப்பொழுது எனக்கு மீண்டும் பயம் ஏற்பட்டது அப்பொழுது மேடையில் உள்ள ஊழியர்களால் கூறப்பட்டது தண்ணீர் சம்மந்தப்பட்ட வியாதிகளில் தேவன் சுகம் கொடுத்து கொண்டிருக்கிறார் உங்களை Check பண்ணி பாருங்கள் நோய்கள் சுகமாகிறது என்று அதேபோல் நானும் check பண்ணி பார்த்தேன் கர்த்தர் அந்த கொட்டும் மழையில் எனக்கு சுகம் கொடுத்தார் அன்றிலிருந்து இன்று வரை அவ்வியாதி எனக்கு வரவில்லை..
அதன் பின்னர் குருதி சோகை ஏற்பட்டது. இதற்காக தொடர்ந்து மருந்துகள் எடுத்தேன் பலவீனம் இருந்தாலும் இன்றும் உயிரோடு இருப்பது தேவனின் கிருபையே.. இதற்காக ஒருநாள் கிளினிக் போகும் போது வைத்தியரால் கூறப்பட்டது உடனே வயிற்றை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று ஸ்கேன் செய்தார்கள் அப்பொழுது ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு கர்ப்பப்பையில் ஒரு பிரச்சனை இருக்கிறது எனவே மீண்டும் ஒரு ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கூறி குறித்த திகதியில் வரும்படி அனுப்பினார்கள் அதை கேட்ட உடன் மனம் பதறி அழுகை வந்தது., ஆனாலும் தேவன் நன்மை செய்வர் என்ற விசுவாசம் எனக்குள் இருந்ததால் இதற்காக நான் பெரிதாக ஜெபிக்க கூட இல்லை ஆனால் எனது குடும்பம் எனக்காக ஜெபித்தது .. மீண்டும் குறித்த நாளில் ஸ்கேன் பரிசோதனைக்காக சென்றேன் அந்த நாளில் ஸ்கேன் செய்த வைத்தியர் உங்களுக்கு கர்ப்பப்பையில் ஒரு பிரச்சினையும் இல்லை. நீங்க ௫ குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என சிரித்துக்கொண்டே கூறினார் ... பெரிய ஒரு அதிசயத்தை தேவன் அன்று செய்தார் .. வைத்தியர்கள் ஆச்சரியப்படும் வகையில் தேவன் அற்புதம் செய்தார்.
இப்படி பல நேரங்களில் பல விதமான வியாதிகளை சுகமாக்கி தேவன் எனக்கு சுகம் தந்தார்.
பல் வழியில் இருந்து மறந்து எடுக்காமல் பல்லை பிடுங்காமல் சுகம் தந்தார்.
இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம்..
ஆனால் தற்போது கொஞ்சகாலமாக கழுத்து பகுதியில் வெள்ளைப்படலம் போல ஒன்று வர வைத்தியசாலைக்கு கடந்து சென்று காட்டிய போது அவர்கள் ஒரு டெஸ்ட்டை செய்தார்கள் முதல் ரிப்போர்ட் பிரச்சினை இல்லை என்று வந்தது ஆனால் மறுபடியும் அதே டெஸ்ட்டை செய்தார்கள் ஆனால் அந்த ரிப்போர்ட்டில் அது தொழுநோய் என்று வந்தது, அதன் பின்னர் இன்னொரு டெஸ்ட்டை செய்துவிட்டு வரச்சொன்னார்கள் மருந்துகளை ஆரம்பிக்க ஆனால் அன்று வந்ததில் இருந்து நான் மறுபடியும் வைத்தியசாலைக்கு செல்ல வில்லை அந்த காலப்பகுதியில் நான் அதிக மன உளைச்சலுக்கு ஆளானேன். ஏன் தேவன் இதை அனுமதித்தார் என்று.. ஆனால் தேவன் அனுமதி இல்லாமல் எம் வாழ்க்கையில் எதுமே நடப்பதில்லை மேலும் எம் தலை மயிர் கூட என்னப்பட்டிருக்கிறது என்று வேதம் சொல்கிறது எனவே இதையும் தேவன் சுகப்படுத்துவார் என்று விசுவசிக்கிறேன் ஆனால் இன்னும் எந்த மாற்றத்தையும் காணவில்லை எனவே சில நேரங்களில் மனது சோர்ந்து போகிறது. தேவன் சுகமாக்க வல்லவர் எனவே வைத்தியசாலைக்கு செல்ல அவசியமில்லை என்று எனக்கு தெரியும் ..
எனவே சுந்தர் அண்ணா எனக்காக ஜெபித்து ஏன் தேவன் எனக்கான சுகத்தை தாமதிக்கிறார் என்று விசாரியுங்கள். தேவன் எனக்கு சுகம் தந்து எனக்கு உள்ள அந்த வெள்ளைப்படலம் மறைய வேண்டும் என்று ஜெபியுங்கள். தேவன் வெளிப்படுத்துவதை எனக்கு தெரிவியுங்கள்.
தேவனின் சுகத்துக்காக காத்திருக்கிறேன்.. இம்மட்டும் தாங்கின சுகப்படுத்தின தேவன் இனியும் செய்ய வல்லவர் என்பதை விசுவாசித்து காத்திருக்கிறேன் ..
///தற்போது கொஞ்சகாலமாக கழுத்து பகுதியில் வெள்ளைப்படலம் போல ஒன்று வர வைத்தியசாலைக்கு கடந்து சென்று காட்டிய போது அவர்கள் ஒரு டெஸ்ட்டை செய்தார்கள் முதல் ரிப்போர்ட் பிரச்சினை இல்லை என்று வந்தது ஆனால் மறுபடியும் அதே டெஸ்ட்டை செய்தார்கள் ஆனால் அந்த ரிப்போர்ட்டில் அது தொழுநோய் என்று வந்தது, அதன் பின்னர் இன்னொரு டெஸ்ட்டை செய்துவிட்டு வரச்சொன்னார்கள்////
சிஸ்ட்டர் எந்த ஒரு நோயாலும் அதற்க்கு காரணம் மீறுதல்தான் என்பதை நான் மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறேன்.
கடந்த நாடகளில் என்னுடைய காலில் ஒரு சிறிய சொறி ஒன்று ஆரம்பித்து அது ஓரிரு வாரங்களில் அதிகமாகிவிட்டது. எங்கள் வீட்டில் ஆஸ்பிடல் போய் பார்க்க சொன்னார்கள் ஆனால் நான் ஒரு மாதமாக போகவில்லை விசுவாசத்தில் எப்படியாவது குணமாகும் என்று விட்டுவிடடேன் ஆனால் சொறி அதிகமாகிக்கொண்டே போனது
இதற்கிடையில் ஆண்டவரிடம் ஜெபித்து பார்த்ததில் பண விஷயத்தில் நான் செய்யவேண்டிய ஒரு காரியத்தை செய்யாமல் இருப்பதுதான் இதற்க்கு காரணம் என்று உணர்த்தபடடேன் . ஆகினும் அதை செய்து முடிக்க என்னிடம் போதுமான பணம் இல்லை. எனவே ஆண்டவரிடம் மன்னிப்பு கேடேன் ஆனால்
பயனில்லை சொறி அதிகமானது . எனவே அது மற்றவர்களுக்கும் வந்துவிடக்கூடாது என்று கருதி ஆச்பிடல் போய் பார்த்தேன்
அவர்கள் இரண்டு லோஷன்கள் எழுதி கொடுத்தார்கள் இதை போட்டும் கேடகவில்லை என்றால் காலில் சொறி இருக்கும் இடத்தில் ஊசி போடவேண்டும் என்று சொன்னார்கள்.
இரண்டில் ஒரு லோஷன் மட்டுமே வாங்க முடிந்தது அதை போட்டும் ஒரு வாரமாக சொறி போகவில்லை. இன்னொரு லோஷன் ஒரு வாரமாக கடைகளில் கிடைக்கவில்லை.
இறுதியாக ஒருநாள் மிகவும் பிரயாசம் எடுத்து கர்த்தர் சொன்ன அந்த பண விஷயத்தை முடித்துவிடடேன். அன்று இரவே அந்த இன்னொரு லோஷன் கடையில் கிடைத்தது அதை இரவு தடவினேன் காலையில் இருந்து சொறி போய்விட்ட்து.
எனவே நாம் எங்கு கர்த்தருடைய வார்த்தையை மீறுகிறோம் என்பதை சரியாக லொக்கெட் பண்ணினால் மட்டுமே இதுபோன்று மாம்ச பிரச்சனைகளில் இருந்து விடுதலைபெற முடியும்.
எனவே இந்த பிரச்சனை என்று உங்களுக்கு உருவானது என்று லொகேட் பண்ணி அந்த நாடகளில் இருந்து என்னவிதமான தவறு நடந்திருக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை ஆராய்ந்து கண்டு பிடித்து உடனே மன்னிப்பு கேட்டு தவறை திருத்துங்கள்.
அது ஒன்றுதான் இதற்க்கு நிரந்தர தீர்வு.
மற்றபடி ஜெபத்தால் வியாதி ஒருவேளை குணமாக்கலாம் ஆனால் வேறொரு ரூபத்தில் வர வாய்ப்புண்டு.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)