இன்றைய நாடகளில் ஏதாவது நோய் நொடியில் வாழும் ஊழியர்கள் அல்லது விசுவாசிகள் ஓன்று யோபுவைபோல் தங்களுக்கு துன்பம் வந்ததாக சொல்வார்கள் அல்லது பவுலை போல் தங்களுக்கு ஒரு நோய் இருப்பதுபோல் சொல்வார்கள்.
அதாவது தாங்கள் தங்களை இப்படி உத்தமனான யோபுவுடனோ அல்லது மேன்மையான பவுலுடன் ஒப்பிட்டு சொல்வதன் மூலம் தங்களை தாங்களே மோசம் போக்கி தாங்கள் செய்யும் அல்லது செய்துகொண்டிருக்கும் பாவம் என்னவென்பதை அறியாமல் மேன்மை பாராட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
இங்கு பவுல் சொல்வதை சற்று ஆராய்வோம்!
II கொரிந்தியர் 12:7எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது
இந்த வசனத்தை படிக்கும்போது பவுல் தனக்கு கிடைத்த வெளிப்பட்டினிமித்தம் தன்னைத்தானே உயர்வாக நினைக்கும் ஒரு மனோ நிலையில் இருந்தார் என்பதை அறிய முடிகிறது!
அதாவது நான் ஆண்டவர் மூலம் அநேக காரியங்களை அறிந்துவிடடேன் என்று அவர் பெருமையாக தன்னை உயர்வாக எண்ணும்போதெல்லாம் அந்த முள் வந்து அவரை வேதனைப்படுத்தி அப்படியொரு நினைவில் இருந்த் கீழே கொண்டு வரும்.
அவர் ஏன் தன்னை உயர்த்த வேண்டும் அந்த முள் ஏன் அவரை கொட்ட வேண்டும்?
பெருமை என்ற பாவம் அவருக்குள் இருந்தது அதனால் அந்த முள் அவரை அடிக்கடி வேதனை படுத்தியது!
இதுதான் அதன் சுருக்கம்.
இப்படியிருக்க பாவம்தான் நோய்கள் வருவதற்கு காரணம் என்ற உண்மையை எல்லோரும் நிச்சயமாக அறியவேண்டியது அவசியம்.
உண்மை இவ்வாறு இருக்க தங்களுக்கு ஏதாவது நீண்ட நாள்படட நோய் இருக்குமாயின் பவுலையோ அல்லது யோபுவையோ ஆதாரணாக சுட்டிக்காட்டி தங்களை பரிசுத்தவான் போல் காட்டிக்கொண்டு பெருமைபட்டுக்கொண்டு இருக்காமல். தன்னிடம் உள்ள பாவம் என்னவென்பதை வேத வெளிச்சத்தில் ஆராய்ந்து அறிந்து ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு திருத்துங்கள் அந்த நோய் தானாக ஓடிப்போகிறதா இல்லையா என்று பாருங்கள்!
உபாகமம் 7:15கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டுவிலக்குவார்;
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)