உபாகமம் 32:4அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.
தேவன் தன வழிகளில் எல்லாம் நீதியுள்ளவர்.
உபாகமம் 32:4அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.
அவர் யாரையும் மனப்பூர்வமாக தண்டிப்பவர் அல்ல.
புலம்பல்3 33. அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.
எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்பதே தேவனின் சித்தம்
மத்தேயு 18:14இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
I தீமோத்தேயு 2:4எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
யோபு 36:5இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்;
(தேவனுக்கு ஒரு சித்தம் இருந்தால் அதற்க்கு ஒரு வழியும் அவரிடம் நிச்சயம் இருக்கும் அல்லவா? மேலும் தெரிந்துகொள்ளப்படடவரை பரலோகத்தில் வைத்துக்கொண்டு மற்றவர்களை நரகத்தில் தள்ளுவது தேவனின் சித்தம் அல்ல என்பது வசனம் மூலம் புரியும்)
அவர் எதிர்பார்க்காத சில காரியங்கள் நடந்ததற்காக அவர் பல இடங்களில் மனஸ்தாப பட்டிருக்கிறார்.
ஆதியாகமம் 6:6தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர்மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
தேவன் மனதில் தோன்றாதத்தைகூட சுய சித்தம் செய்யும் அதிகாரம் பெற்ற மனுஷனால் செய்யமுடியும் என்று கர்த்தரே சொல்கிறார்.
எரேமியா 7:31தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என்மனதில்தோன்றவுமில்லை.
நான் பிறர் படும் பிற உயிரிகள் படும் வேதனையை பார்த்து அழுதுது கண்ணீர் சிந்துபவன்தான் ஆனால் தேவனோ என்னைவிட 1000 மடங்கு இரக்கம் உள்ளவர் சில காரியங்கள் நடப்பதை பார்த்து பார்த்து அவர் கண்ணீர் விடுகிறார்.
எரேமியா 13:17என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.
எரேமியா 14:17என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.
சிலர் தேவன் திடடம்போட்டுதான் இதை எல்லாம் செய்கிறார் என்று சொல்கிறார்கள் ஆனால் அவர் திடடப்படி நடக்கும் ஒரு காரியத்தை பார்த்து தேவன் கண்ணீர் விட்டு அழ வேண்டிய அவசியம் இல்லையே.
தேவன் தீமையை பார்க்கக்கூட விரும்பாதவர் அவர் ஒருநாளும் தீமையை வேண்டும் என்று பூமிக்குள் அனுமதிக்கவும் இல்லை
யாக்கோபு 1:13சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
எந்த உயிரையும் அவசியம் இன்றி பலியிடச்சொல்லவும் இல்லை அவர் பலியை விரும்புகிறவரும் அல்ல
அடுத்து முக்கியமாக அவர் "இரக்கங்களுக்கு முடிவவே இல்லை" என்று வசனம் சொல்கிறது
புலம்பல் 3:22நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
அப்படியே முடியாத இரங்கம் முடிந்தாலும் அடுத்த நாள் காலையில் அது புதியதொரு வேறு பரிணாமம் உள்ள ஒரு இரக்கமாக உருவாகியிருக்கும்.
23. அவைகள் காலைதோறும் புதியவைகள்;
நான் அனுபவித்துள்ளதால் பேசுகிறேன். தேவன் சொன்னதை சரியாக புரியாமல் ஒரு இடத்தில் மீறி நடந்துவிட்ட்தால் " ஊருக்கு போகும் வழியை அறியாத மூடன்" என்று என்னை தேவன் ஒருநாள் கடிந்துகொண்டார். மிகுந்த வருத்தத்தோடு இரவு தூங்க சென்றேன் ஆனால் விடியற்காலையில் அவரே என்னை எழுப்பினார், புது வழி புது இரக்கம் புது கிருபை.
எனவே ஒருவேளை தன நீதியுள்ள நியாயாதிபதியாக சிலரை தேவன் நரகத்துக்கு ஒப்புக்கொடுத்தாலும் முடிவில்லாத அவருடைய இரக்கம் அவர்களுக்காக பரிதபிக்கவே செய்யும்.
என்னை மீட்க்க தன்னை ஒரு சித்த்ரவதையான கொடூர மரணத்துக்கு ஒப்புக்கொடுத்த என் தகப்பனாகிய தேவனை நான் சற்றேனும் தவறுதலாக சிந்தித்தால் நான் ஒரு மனுஷன் அல்ல!
வேறுமாதிரி கருத்து இருந்தால் இப்போதே அதை ஓரம்கட்டிவிட்டு தேவனை உங்களுக்காக மட்டுமல்ல, அவரால் படைக்கப்படட ஒவ்வொரு ஜீவனுக்காகவும் பரிதபிக்கும் ஒரு இரக்கமுள்ள தகப்பனாக நினைவில் நிறுத்துங்கள்.
யோனா 4:11வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.
தேவனின் மென்மையான குணங்களை சொல்லும் வேதாகமம் அவர் பட்சிக்கிற அக்கினி/ எரிச்சலுள்ள தேவன் / பலியிட சொல்லும் தேவன் / மனுஷர்களை அடித்தே கொல்பவர் தீமையை உண்டாக்கியவர் / ஏத்தியர் எமோரியரை கூண்டோடு அழிக்க சொன்னவர் என்பது போன்ற பல கோணங்களில் நமக்கு காண்பிக்கும். அது அனைத்தும் உண்மைதான்.
ஆனால அவர் செய்த எந்த ஒரு காரியத்தையும் யாரையும் மனப்பூர்வமாக துன்புறுத்த செய்யப்பட்ட்து அல்ல. எப்படியாவது பாவத்த்தில் வீழ்ந்த்து கிடைக்கும் மனுஷ குலத்தை மீட்டுவிட வேண்டும் என்று ஏக்கத்தில் செய்ததேயன்றி மற்றபடியல்ல.
அதுபோல் தேவனை பற்றி வசனம் சொல்லும் இந்த எல்லா காரியத்துக்கும் நாம் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு தேவனால் சொல்லப்படட விளக்கம் உண்டு.
உதாரணத்துக்கு ஒன்றே ஒன்றை சொல்கிறேன். தேவன் ஏத்தியர் எமோரியர் போன்ற பல சந்ததிகளை அழிக்கும் பொது ஒருவரையும் உயிரோடு வைக்க கூடாது என்று கொடூரமாக சொல்வதுபோல் சொல்லியிருக்கிறார்.
அதற்க்கு கரணம் என்ன தெரியுமா?
வெறி நாய் ஒருவரை கடித்து விஷம் தலைக்கு ஏறிவிடால் அவர் யாரை கடித்தாலும் அவரும் அவரும் விஷம் ஏறி நாயை போல் குலைத்து கண்ணில் படடவரை கடித்து குதறுவார்.
இப்படி படடவரை இரக்கம் பார்த்து விடடால் இன்னும் அநேகருக்கு அதே கதிதான் ஏற்படும் அத்தோடு செயல்பாட்டுக்கே அது தடையாக நிற்கும் எனவே மனதை கல்லாக்கிக்கொண்டு அவர்களை கொன்றுவிடுவதுதான் நல்லது.
அதுபோல் கொடிய பாவங்கள் என்ற வெறிநாயால் கடிபடட அக்கிரமம் மிகுந்த அந்த சாதியில் ஒரே ஒரு ஜீவன் தப்பித்தலும் அது இஸ்ரவேல் கோத்திரத்தினாயே வெறியர்கள் ஆக்கிவிடும் எனவேதான் அவர்கள் மேல் மனதை கல்லாக்கிக்கொண்டு இரக்கம் வைக்காமல் கொன்றுபோட சொல்லியிருக்கிறார் என்பதை நாம் அறிய வேண்டும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நல்ல கருத்துள்ள தேவனின் அன்பையும் இரக்கத்தையும் சொல்லும் வார்த்தைகள் .. தேவ அன்பை நினைக்கும் போது கண்ணீர் மட்டுமே வருகிறது..
ஆனால் அண்ணா
//////////////////////////////////////தேவனின் மென்மையான குணங்களை சொல்லும் வேதாகமம் அவர் பட்சிக்கிற அக்கினி/ எரிச்சலுள்ள தேவன் / பலியிட சொல்லும் தேவன் / மனுஷர்களை அடித்தே கொல்பவர் தீமையை உண்டாக்கியவர் / ஏத்தியர் எமோரியரை கூண்டோடு அழிக்க சொன்னவர் என்பது போன்ற பல கோணங்களில் நமக்கு காண்பிக்கும். அது அனைத்தும் உண்மைதான்.///////////////////////////
தீமையை உண்டாக்கியவர் என்ற கருத்தை என்னால் ஏற்க முடியாது.. ஏன் அண்ணா அப்படி சொல்கிறீர்கள்.