இவ்வார்த்தைகளின் உட்கருத்து என்ன? தம் தாசனை ஏன் குருடர் என்று கூறுகிறார்? தூதனை ஏன் செவிடன் என்கிறார்? உத்தமனை ஏன் குருடனென்கிறார்? கர்த்தரின் ஊழியக்காரனை அந்தகன் என்கிறது ஏன்? புரியவில்லை தெரிந்தவர்கள் தெளிவாக விளக்கவும்
ஏசாயா
42 அதிகாரம்
19. என் தாசனையல்லாமால் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்?
ஏசாயா 42: 18. செவிடரே, கேளுங்கள்; குருடரே, நீங்கள் காணும்படி நோக்கிப் பாருங்கள்.
19. என் தாசனையல்லாமால் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்?
கர்த்தருடை
ய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்?
20. நீ அநேக காரியங்களைக் கண்டும் கவனியாதிருக்கிறாய்; அவனுக்குச் செவிகளைத் திறந்தாலும் கேளாதே போகிறான்.
இவ்வசனங்களில் புரிய வருவது என்னவெனில்
செவிடரே கேளுங்கள் என்று சொல்லும் அவர்
யார் செவிடன்? என்று சொல்லி நான் அனுப்பிய தூதனே செவிடன் என்கிறார்
"குருடரே காணும்படி நோக்கி பாருங்கள்" என்று சொல்லிவிட்டு
யார் குருடன் ? என் தாசனேயல்லாமல் வேறு யாருமல்ல என்கிறார்.
கர்த்தருடைய ஊழியக்காரனை அந்தகன் என்கிறார்
இப்படி கடின வார்த்தையாய் பேச காரணம் என்னவென்பதை 20ம் வசனத்தில் சொல்கிறார்
அவர்கள் அ நேக காரியங்களை கண்டும் அதை கவனிக்கவில்லை
அவர்கள் செவியை திறந்தாலும் கேட்க்க வேண்டியதை கேளாமல் போகிறார்களாம்.
அதனாலே அவ்வாறு கடிந்து கொள்கிறார்.
இந்த உலகத்தில் வாழும் அநேகர்கள் தேவனின் வேலையை செய்து முடிப்பதற்காக தேவனால் அனுப்பபடட தேவ தாசர்களும் தேவ தூதர்களும் ஆவர்.
ஆனால் அவர்களோ தேவ காரியங்களையே விட்டுவிட்டு மாயையில் சிக்குண்டு உலக காரியங்களையே செய்துகொண்டு உலக பொருடகளை தேடி வீணாக நடந்து கர்த்தர் சொல்லும் காரியங்களை கவனியாதே போவதால் ஆண்டவரின் சித்தம் நிறைவேற முடியாமல் போகிறது
எனவே இவ்வாறு அவர் ஆதங்கத்தோடு சலித்துகொள்கிறார்.
சாதாரண ஆடுகளை பற்றி கவலையில்லை ஆனால் பொறுப்புள்ள தேவ மனுஷர்கள் கர்த்தரின் செயல்பாடடை கவனிக்காமல் தங்கள் சுய இச்சையை நிறைவேற்ற துடிக்கும்போது, கர்த்தர் காண்பிக்கும் எதையும் காண முடியாத குருடராயும் கர்த்தர் சொல்லும் எதையும் கேட்க்க முடியாத செவிடராயும் போகிறார்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)