இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆண்டவர் மரிக்க வேண்டிய நிர்பந்தம் என்ன? வேதத்துடன் விளக்கவும் ..


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
ஆண்டவர் மரிக்க வேண்டிய நிர்பந்தம் என்ன? வேதத்துடன் விளக்கவும் ..
Permalink  
 


ஆண்டவர் மரிக்க வேண்டிய நிர்பந்தம் என்ன? வேதத்துடன் விளக்கவும் ..



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: ஆண்டவர் மரிக்க வேண்டிய நிர்பந்தம் என்ன? வேதத்துடன் விளக்கவும் ..
Permalink  
 


ரோமர் 5:16 ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது;  
 
எண்ணாகமம் 35:33   இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.  
 
தேவ நியமனபடி  ஆபேலின் இரத்தம் சிந்திய காயீன் இரத்தம் சிந்தப்பட்ட வேண்டும்!  ஆனால்  தேவன் அவனை  கொல்லாமல் அனுப்பிவிடடார் அதற்க்கு பதில் அவனுடைய பாவத்திற்கும் எல்லோருடைய பாவத்திற்கும் பதிலாக இயேசுவின் இரத்தம் 
சிந்தப்படது 
 
//மீள் பதிவு// 
கிராமங்களில் ஆடு மாடுகளை அடைப்பதற்கு "பவுண்டு" என்று ஓன்று உண்டு. அதாவது காடுகளில்  மேய்வதற்காக போகும் ஆடு மாடுகள் வேலிகளை தாண்டி வயற்க்காட்டுக்குள் இறங்கிவிட்டால் அந்த ஆடு மாடுகளை பிடித்து கொண்டுவந்து அந்த பவுண்டு என்னும் அவ்விடத்தினுள் அடைத்துவிடுவார்கள் பிறகு அந்த கால்நடையின் உரிமையாளர்கள் அதற்குரிய  அபராத தொகையை கட்டிய பிறகே அந்த கால்நடைகளை மீட்க முடியும். மீட்கப்படாத கால்நடைகள் ஏலமிடப்பட்டு விடும் / கொல்லபப்டும்.  
 
அதுபோல் தேவனுடைய வார்த்தைகள் மனிதன் சுகமாக வாழ்வதற்கு அனைத்து வழிமுறைகளையும் கூறுகின்றன எனினும் அவரது வாத்தை   என்னும் வேலியை தாண்டி ஒரு மனிதன்  செயல்படும்போது அவர்  சாத்தானின் கரத்தால் பிடிக்கபட்டு அவனுக்கு சொந்தமானவர்  ஆகிவிடுகிறார். காணாமல் போன ஆடுகளை தேடும் நமது ஆண்டவர் அவனை விடுவிக்க வேண்டும் என்றால் அதற்க்கு  ஒரு கிரயம் செலுத்த வேண்டும். இங்கு சாத்தான் கேட்கும்  கிரயம்  என்னவென்றால்,  அந்த உயிருக்கு பதில் இன்னொரு உயிர்.  அவ்வாறு பாவம் செய்த மனிதனுக்கு பதில் இன்னொரு பாவமரியா  உயிரை வாங்கிகொண்டு பாவம் செய்த மனிதனை தற்காலிகமாக  விடுவிக்கிறான்.  எவ்வாறேனும் தேவன் படைத்த பாவமறியா உயிரினங்கள் துடிதுடிக்க சாக வேண்டும் அதை பார்க்கும் தேவன் வேதனை அடைய வேண்டும் என்பதுதான் சாத்தானின் நோக்கம்.
 
தன்னை ஆகாதவன் என்று கீழே தள்ளிய தேவனை எவ்வதத்திலாவது மனஸ்தாப பட வைத்து பழிதீர்க்க வேண்டும் என்பதே  சாத்தானின் குறிக்கோள். அதற்காக சாத்தான் கேட்டதே உயிரினங்களின் பலி என்பது.
 
ஆயிரம் ஆயிரம் உயிரினங்கள் துடி துடித்து சாகும்  பலி என்பதை தேவன் நிர்பந்தத்தின் அடிப்படையில் செய்ததால்  "நான் பலியை அல்ல இரக்கத்தையே விரும்பிகிறேன்" என்று அவர்  தனது  இருதய  எண்ணங்களை நமக்கு எழுதி கொடுத்தார்.
 
ஓசியா 6:6 பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்
மத்தேயு 12:7 பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
 
மேல்கண்ட வசனங்கள் தேவன் பலியிடுவதை நிர்பந்தத்தின் அடிப்படயிலேயே  செய்ய சொன்னார் என்றும் அவர் அதை விரும்பவில்லை என்பதையும் நமக்கு உணரத்துகின்றன. 
 
ஆயிரம் ஆயிரம் ஆடு/ மாடுகளின் பலியின்  இரத்தத்தால்   நிவர்த்தி செய்யமுடியாத பாவத்தை ஆண்டவராகிய இயேசு பலியாகி  தன் சொந்த இரத்தத்தை  செலுத்தி எல்லோருடைய பாவத்துக்கும் இறுதி கிரயம் செலுத்திவிட்டார்.  அவரது இரத்தத்தால் நிவர்த்தி செய்ய முடியாத  பாவம்  என்று  எதுவுமே இல்லை. 
 
அத்தோடு "பலி" என்ற செயல் முடிவுக்கு வந்தது. 
 
எபிரெயர் 7:27 அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார்.  
 
எபிரெயர் 10:14 ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.  
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
ஆண்டவர் மரிக்க வேண்டிய நிர்பந்தம் என்ன? வேதத்துடன் விளக்கவும் ..
Permalink  
 


நன்றி அண்ணா

ஆனால்

ஆடுமாடுகளையே பலியிட்டு அதை நிவர்த்தி செய்யாமல் ஏன் அவ்வளவு பெரிய வேதனையை அவரே ஏற்றுக்கொண்டார் ?



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: ஆண்டவர் மரிக்க வேண்டிய நிர்பந்தம் என்ன? வேதத்துடன் விளக்கவும் ..
Permalink  
 


Debora wrote:

 

ஆடுமாடுகளையே பலியிட்டு அதை நிவர்த்தி செய்யாமல் ஏன் அவ்வளவு பெரிய வேதனையை அவரே ஏற்றுக்கொண்டார் ?


 ஆண்டவர் தாமே மரிக்க வேண்டியதன் முக்கிய காரணம் 

 
1. சாக வேண்டியது மனுஷன் அவனுக்கு  ஈடான  ஆடு மாடுகளின் பலி  ஒரு தற்காலிக விடுதலையே.
 
2. ஒவ்வொரு மனுஷன் செய்யும் ஒவ்வொரு பாவத்துக்கும் ஒவ்வொரு பாவமரியா ஜீவன் பலியாக வேண்டும். (எவ்வளவு மனுஷன் எவ்வளவு பாவம் எத்தனை கோடி ஜீவன் வேண்டும் என்று எண்ணி பாருங்கள் அவைகளும் தேவனின் படைப்புகளே அதற்காகவும் ஆண்டவர் பரிதபிக்கிறார் என்பதை யோனா புஸ்தகத்தில் பார்க்கலாம் 
 
3. மிக முக்கியமாக மனுஷன் பூமியில் பிறந்ததே பாவம் அவன் பாவத்தால் கர்ப்பம் தரிக்கப்பட்டு பிறக்கிறான். என்று சங்கீத புஸ்தகம் சொல்கிறது 
 
சங்கீதம் 51:5 இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
 
அதாவது தேவன் அனுமதிக்காமல் அவனே கனியை உண்டதால் ஆண் பெண் வேறுபாடு தெரிந்து சந்ததி உண்டானது. எனவே இந்த  பூமியில் ஒருவன் பிறந்ததே பாவம் அந்த பாவத்தை எந்த பலியாலும் நிவர்த்தி செய்ய முடியாது. இப்படியே போனால் மரணத்தை ஒருவரும் ஒருக்காலும் ஜெயிக்கவே முடியாது.
 
வேத வசனப்படி மாடு முட்டி ஒருவன் இறந்தால் மாட்டின் உரிமையாளன் அதற்கான உத்ரவாதி 
 
யாத்திராகமம் 21:29 தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்றுபோட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலைசெய்யப்படவேண்டும்.  
 
எனவே தேவனால் படைக்கப்படட மனுஷன் பாவம் செய்தால் ஓன்று மனுஷன் சாக வேண்டும் அல்லது அவனை படைத்தவர் அவனுக்கு ஈடாக சாக வேண்டும். 
 
இங்கு சகல தீமை மற்றும் மரணத்துக்கும்  ஒரு முடிவை கொண்டுவரும் பொருட்டு  படைத்தவரே பலியாக வேண்டிய நிர்பந்தம் உண்டானது. 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
ஆண்டவர் மரிக்க வேண்டிய நிர்பந்தம் என்ன? வேதத்துடன் விளக்கவும் ..
Permalink  
 


Thanks na

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard