அதாவது ஒளியை படைத்தபோது இருள் என்ற ஓன்று உண்டானது அதற்க்கு காரணரும் தேவனே
சமாதானத்தை படைத்தபோது - தீங்கு என்று ஓன்று உண்டானது அதற்க்கு காரணரும் தேவனே
புரியவில்லை என்றால் ஒரு உதாரணத்தின் மூலம் புரிய வைக்கிறேன்.
முன்பெல்லாம் அடுப்பு எரிக்க விறகை பயன்படுத்துவார்கள் எனபது எல்லோருக்கும் தெரியும்.
நம் பசியை போக்க நாம் உணவு தயாரிக்க வேண்டும் என்றால் அநேக விறகுகளை எரிக்க வேண்டும். விறகை எரித்து சாப்பாடு சமைத்த பிறகு இறுதியில் அந்த இடத்தில் கரி சாம்பல் போன்றவை மீதமாக கிடைக்கும். அந்த சாம்பல் / கரி போன்றவை துணி/ முகத்தில் படடால் முகமெல்லாம் கரியாகிவிடும். அது ஒரு கழிவு என்று எடுத்து கொள்வோம்.
இப்போது என்னுடைய நோக்கம் என்ன?
சமையல் செய்து பசி ஆறுவது.
இப்படி என்னுடைய நோக்கத்தை நான் நிறைவேற்றும்போது கரி என்ற கழிவு அங்கு உண்டாகிவிட்ட்து.
இப்போது அந்த கரி என்ற கழிவை உண்டாக்கியது யார்?
நானே தான்.
ஆனால் என் நோக்கம் கரியை உருவாக்குவதா? கிடையாது
நான் பசியாற ஒரு நல்லதை செய்தேன் ஆனால் இன்னொரு கழிவு அங்கே உண்டாகிவிட்ட்து.
இதே நிலைதான் தேவனுக்கும் உண்டானது.
அவர் நல்லவைகளை தன் நோக்கமாக கொண்டு அதை ஒன்றாக இணைத்து எல்லாம் நல்லது என்றே கண்டார் அப்போது தீயவைகளை தனியே பிரிக்கப்படடன.
நல்லதை தேவன் படைத்தார்!
அதன் கழிவாக சில தீயவைகளை உண்டாகின!
அது உண்டாக காரணம் தேவனே!
இதையே வசனம் இவ்வாறு சொல்கிறேது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)