தேவனை பற்றி கூறும் பொது அநேக இடங்களில் வல்லமையுள்ள தேவன் என்று கூறப்படுகிறது.
ஆதியாகமம் 17:1 ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
ஆதியாகமம் 28:3 சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி;
உபாகமம் 4:34 அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.
உபாகமம் 7:21 அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.
உபாகமம் 10:17 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.
நெகேமியா 1:10 தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே.
சங்கீதம் 24:8 யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமுமுள்ள கர்த்தராமே.
ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
லூக்கா 1:49வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.
லூக்கா 4:36 எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப்போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
இவ்வாறு பல வசனங்கள் தேவன் வல்லமையுள்ளவர் என்பதை கூறுகிறது.. அதாவது நீங்கள் கூறுவது போல் வல்லமை என்பது ஒரு சக்தி என்றும் கூறலாம்,
வல்லமை அதாவது தேவனால் எதையும் செய்ய முடியும் என்பதை இந்த வார்த்தை மூலம் சொல்லலாம்.. வல்லமையை சக்தி (பவர்) என்றும் சொல்லலாம் . அதுதான் அந்த ஸ்திரீயை சுகமாக்கியது.
அதிகாரம் என்பது வேறு அது உரிமை என்றும் சொல்லலாம். ஒரு பொருள் என்னுடையதாயின் அதின்மேல் எனக்கு அதிகாரம் இருக்கிறது ஆனால் என்னுடையது இல்லாவிட்டால் எனக்கு அதிகாரம் இல்லை... ஆனால் தேவனுக்கோ சகலத்திலும் அதிகாரம் உண்டு ஏனெனில் சகலமும் அவருடையது. அவர்மூலமே சகலமும் உண்டாயிற்று..
நாம் தேவன் மேல் அதிகாரம் செலுத்த முடியாது. ஆனால் தேவன் எமக்கு அதிகாரம் கொடுத்தால் எமக்கும் அசாதாரணமான காரியங்களையும் செய்ய முடியும்..
அதிகாரம் மற்றும் வல்லமை இரண்டுமே தேவனுக்கு சமம் .. அவருக்கு அதிகாரம் இருக்கிறது ஆதலால் அவரின் வல்லமையை கொண்டு சுகப்படுத்துகிறார் காரியங்களை நடப்பிக்கிறார்.
அதிகாரம் மற்றும் வல்லமை இரண்டுமே மனுஷனுக்கு வேறு வேறு அதாவது அவன் அரசியல்வாதியாய் அல்லது ஒரு நாட்டின் தலைவராய் / ஒரு நீதிபதியாய் இருக்கும் போது அவனுக்கு அதிகாரம் இருக்கும் .. ஆனால் அவன் நினைத்ததை செய்யும் வல்லமை அவனுக்கு இல்லை.
அதிகாரம் - Authority என்பது - ஒரு மனுஷன்மேலோ ஜனத்தின்மேலோ அல்லது உயிரினங்கள் மெலோ தேவனால் அருளப்படும் ஆணையுரிமை.
மத்தேயு 10:1அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
அவர் கொடுத்தாலேயன்றி யாருக்கும் யார்மேலும் அதிகாரம் கிடையாது.
ரோமர் 13:1தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
யோவான் 19:11இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது;
வல்லமை என்ற சக்தியை பெற்றாலும் அதை பயன்படுத்தும் அதிகாரம் இல்லை என்றால் பயனில்லை. எனவே தேவன் வல்லமையோடு அதிகாரமும் சேர்த்தே அருளுகிறார்.
லூக்கா 9:1அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,
சாத்தானுக்கும் வல்லமையும் அதிகாரமும் உண்டு. அதுவும் அவனுக்கு தேவனால் அருளப்படடாதே. கடைசி நாளில் சகல வல்லமைகளையும் அதிகாரங்களையும் தேவன் பரிகரிப்பார்
I கொரிந்தியர் 15:24அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)