இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வல்லமை அதிகாரம் என்றால் என்ன?


புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
வல்லமை அதிகாரம் என்றால் என்ன?
Permalink  
 


இன்று சபைகளில் வல்லமை வல்லமை என்று சத்தம் போடுகின்றனர்.. வல்லமை என்றால் சக்தியா?

மாற்கு, Chapter 5
 
30. உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.
 
மேல உள்ள வசனத்தில் வல்லமை ஒரு சக்தி போன்றா சென்று குணம் அடைந்தாள்.

வல்லமை அதிகாரம் உள்ள வேறுபாடு என்ன

விசுவாசிகளின் அதிகாரம் வல்லமை தேவனுடைய அதிகாரம் வல்லமை பற்றி கொஞ்சம் விளக்கவும்



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

தேவனை பற்றி கூறும் பொது அநேக இடங்களில் வல்லமையுள்ள தேவன் என்று கூறப்படுகிறது. 

ஆதியாகமம் 17:1 ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.

ஆதியாகமம் 28:3 சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி;

எண்ணாகமம் 14:18 என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக.

உபாகமம் 3:24 கர்த்தராகிய ஆண்டவரே, நீர் உமது அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய கிரியைகளுக்கும் உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யத்தக்க தேவன்யார்?

உபாகமம் 4:34 அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.


உபாகமம் 7:21 அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.

உபாகமம் 10:17 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.

நெகேமியா 1:10 தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே.

சங்கீதம் 24:8 யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமுமுள்ள கர்த்தராமே.

நீதிமொழிகள் 8:14 ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது.

ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


லூக்கா 1:49 வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.

லூக்கா 4:36 எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப்போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.

இவ்வாறு பல வசனங்கள் தேவன் வல்லமையுள்ளவர் என்பதை கூறுகிறது.. அதாவது நீங்கள் கூறுவது போல் வல்லமை என்பது ஒரு சக்தி என்றும் கூறலாம், 

 

வல்லமை அதாவது தேவனால் எதையும் செய்ய முடியும் என்பதை இந்த வார்த்தை மூலம் சொல்லலாம்..  வல்லமையை சக்தி (பவர்)  என்றும் சொல்லலாம் . அதுதான் அந்த ஸ்திரீயை சுகமாக்கியது. 

 

அதிகாரம் என்பது வேறு அது உரிமை என்றும் சொல்லலாம்.  ஒரு பொருள் என்னுடையதாயின் அதின்மேல் எனக்கு அதிகாரம் இருக்கிறது ஆனால் என்னுடையது இல்லாவிட்டால் எனக்கு அதிகாரம் இல்லை... ஆனால் தேவனுக்கோ சகலத்திலும் அதிகாரம் உண்டு ஏனெனில் சகலமும் அவருடையது. அவர்மூலமே சகலமும் உண்டாயிற்று.. 

 

நாம் தேவன் மேல் அதிகாரம் செலுத்த முடியாது. ஆனால் தேவன் எமக்கு அதிகாரம் கொடுத்தால் எமக்கும் அசாதாரணமான காரியங்களையும் செய்ய முடியும்.. 

 

அதிகாரம் மற்றும் வல்லமை இரண்டுமே தேவனுக்கு சமம் .. அவருக்கு அதிகாரம் இருக்கிறது ஆதலால் அவரின் வல்லமையை கொண்டு சுகப்படுத்துகிறார் காரியங்களை நடப்பிக்கிறார். 

 

 

அதிகாரம் மற்றும் வல்லமை இரண்டுமே மனுஷனுக்கு வேறு வேறு அதாவது அவன் அரசியல்வாதியாய் அல்லது ஒரு நாட்டின் தலைவராய் / ஒரு நீதிபதியாய் இருக்கும் போது அவனுக்கு அதிகாரம் இருக்கும்  .. ஆனால் அவன் நினைத்ததை செய்யும் வல்லமை அவனுக்கு இல்லை. 

 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

வல்லமை Vs அதிகாரம்  அநேக வசனங்களை பயன்படுத்தி  நீண்ட விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நன்றி.
 
சுருக்கமாக  ஆவிக்குரிய நிலையில் பார்த்தால்: 
 
வல்லமை என்பது  -  POWER - விஷேஷ சக்தி - தேவனிடம் மாத்திரம் இருப்பது / அவரிடம் இருந்து  புறப்பட்டு வருவது 
 
ஏசாயா 45:24 கர்த்தரிடத்தில்மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்;  
 
லூக்கா 6:19 அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள்.  
 
 
 
அதிகாரம் - Authority  என்பது - ஒரு மனுஷன்மேலோ ஜனத்தின்மேலோ அல்லது உயிரினங்கள் மெலோ  தேவனால் அருளப்படும் ஆணையுரிமை. 
 
மத்தேயு 10:1 அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். 
 
அவர் கொடுத்தாலேயன்றி யாருக்கும் யார்மேலும் அதிகாரம் கிடையாது.
 
ரோமர் 13:1  தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
  
யோவான் 19:11 இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது;    
 
 
 வல்லமை என்ற சக்தியை பெற்றாலும் அதை பயன்படுத்தும்  அதிகாரம் இல்லை என்றால் பயனில்லை. எனவே தேவன் வல்லமையோடு அதிகாரமும் சேர்த்தே அருளுகிறார்.     

லூக்கா 9:1 அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,  
 
 
சாத்தானுக்கும் வல்லமையும் அதிகாரமும் உண்டு. அதுவும் அவனுக்கு தேவனால் அருளப்படடாதே. கடைசி நாளில் சகல வல்லமைகளையும் அதிகாரங்களையும் தேவன்  பரிகரிப்பார்   
 
I கொரிந்தியர் 15:24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard