இன்று அநேக கூட்டங்களில் தேவன் பேசுகிறார் என்று கூறுவதன் அர்த்தம் என்ன??
தேவன் மோசெயோடு முக முகமாய்(நண்பனிடம்) பேசுவது போல பேசினார்.. சொப்பனம் தரிசனம் மூலமாக பேசினார் அன்று வேத வசனம் இல்லை இன்று வேத வசனம் முழுவதும் நம் கையில் உள்ளது.. இதை மீறியும் ஆண்டவர் என்ன பேச போகிறார்.சத்திய வசனம் படித்தாலே தேவன் நம்மளை வழி நடத்த போகிறார் ஏன் கர்த்தர் சொல்கிறார் பேசுகிறார் என்று கூறுவதன் பொருள் ??
அன்பான சகோதரர் அவர்களுக்கு வேத புத்தகம் என்பது நித்திய ஜீவனை அடையும்படிக்கு நமக்கு வழி காட்டும் பொதுவான தேவ வார்த்தைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
அது எல்லோருக்கும் பொதுவானது.
ஆனால் சில தனிப்படட மனுஷர்களுக்கான தனிப்படட கேள்வுக்கு ஏற்ற பதில் வேதத்தின் மூலம் அறிய முடியாமல் போகிறது . அதனால்தான் அன்றைய பரிசேயர்கள் இயேசுவுடன் அநேக கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
இன்றும் அதுபோல் பல கேள்விகளுக்கு நமக்கு பதில் வேதத்தின் முலம் அறிய முடியாமல் இருக்கிறது.
பெண்கள் சபையில் போதிக்கலாமா? திரித்துவம் பற்றிய கருத்துக்கள் போன்ற பல கருத்துக்கள் விவாதித்தும் முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது
இப்படிபட்ட நேரத்தில் ஆவியானவரின் ஒத்தாசையுடன் நாம் தேவ பதில்களை அறிவதையே ஆண்டவர் நம்மோடு பேசுகியார் என்று எடுத்துகொள்ளலாம்.
சத்திய ஆவியானவர் நமக்குள் வந்து தங்குவதன் நோக்கமே நம்மை கடிந்து புத்தி சொல்லி சகல சத்தியத்துக்குள்ளும் வழி நடத்தத்தான் என்று வசனம் சொல்கிறது.
லூக்கா 12:12நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.
யோவான் 16:13சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகலசத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
இப்படி நாம் பதில் தெரியாமல் தவிக்கும் நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் நம்மோடு பேசி நடத்துவதையே தேவன் பேசினார் என்று சொல்கிறார்கள்.
அது வசனத்தின்படி சரியென்றே தோன்றுகிறது.
நான் கூட பல நேரங்களில் அதுபோன்று தேவ ஆலோசனையை பெற்றுள்ளேன்.
உதாரணத்துக்கு ஓரிரண்டு கீழ தருகிறேன் படித்து பாருங்கள்
வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது எல்லோருக்கும் பொதுவான அடிப்படை சத்தியம் அதை யாராலும் மாற்றக்கூடாது ஆணடவர் சொல்லும் வார்த்தைகள் கூட அதற்க்கு இசைவாகதான் இருக்கும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)